பதிவு செய்த நாள்
13 மார்2018
00:37
புதுடில்லி:நாட்டின், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜனவரியில், 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2017 டிசம்பரில், 7.1 சதவீதமாகவும், நவம்பரில், 25 மாதங்களில் இல்லாத அளவில், 8.4 சதவீதமாகவும் அதிகரித்திருந்தது.தொழில் துறை உற்பத்தி குறியீட்டை கணக்கிடுவதில், தயாரிப்புத் துறை, நான்கில் மூன்று பங்கை கொண்டுள்ளது.
இந்தாண்டு ஜனவரியில், தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2017 டிசம்பரில், 8.5 சதவீதமாக இருந்தது.அதே சமயம், இதே காலத்தில், பொறியியல் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 16.4 சதவீதத்தில் இருந்து, 14.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 10.5 சதவீதமாக உள்ளது.நடப்பு, 2017- – 18ம் நிதிஆண்டில், ஏப்., – ஜன., வரையிலான, 10 மாதங்களில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.1 சதவீதமாக உள்ளது என, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|