உங்களுக்கு அழகல்ல உர்ஜித் படேல்!உங்களுக்கு அழகல்ல உர்ஜித் படேல்! ... வீட்­டுக்­க­டனை அடைக்க இது ஏற்ற நேரமா? வீட்­டுக்­க­டனை அடைக்க இது ஏற்ற நேரமா? ...
ஆயுள் காப்­பீடு பெறும் முன் கவ­னிக்க வேண்­டி­யவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2018
08:10

ஆயுள் காப்­பீடு என்­பது எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய பாத­க­மான சூழலில் இருந்து பாது­காப்பு அளிக்க கூடி­யது. ஒவ்­வொ­ரு­வரும் தேவை­யான ஆயுள் காப்­பீடு பெற்­றி­ருப்­பது அவ­சியம். மேலும், ஆயுள் காப்­பீட்டு பாலி­சிகள் தொடர்­பான முழு விப­ரங்­க­ளையும் அறிந்­தி­ருப்­பதும் அவ­சியம். ஆயுள் காப்­பீடு பாலிசி பெறும் போது, மனதில் கொள்ள வேண்­டிய முக்­கியமான விஷ­யங்கள் இவை:

இலக்கு என்ன: பாலிசி வாங்­கு­வ­தற்கு முன், ஆயுள் காப்­பீட்டு பாலிசி மூலம் பெற விரும்பும் பலன் பற்­றிய தெளி­வான இலக்கு இருக்க வேண்டும். குறிப்­பிட்ட தேவைக்­கான பாலிசி பெறு­வது நல்­லது. பாலிசி காலம் வரை தொட­ரவும் இது உதவும். நீங்கள் வாங்கும் நோக்­கத்­திற்கு ஏற்ப பாலி­சியின் பல்­வேறு அம்­சங்கள் அமைந்­தி­ருக்­கின்­ற­னவா என, பார்க்க வேண்டும். இதன் மூலம் பாலி­சியை பெற்ற பின், வருந்த வேண்­டிய நிலையை தவிர்க்­கலாம்.


ஆய்வு தேவை: பாலிசி தொடர்­பான கையே­டு­களை படித்­துப் ­பார்த்து, அதன் பல்­வேறு அம்­சங்­களை புரிந்து கொள்ள வேண்டும். பாலி­சியை விற்கும் ஏஜன்ட் தக­வல்­களை அளிக்கக் கூடும் என்­றாலும், சொந்­த­மாக ஆய்வு செய்­வதே நல்­லது. தேவை எனில் நிறு­வன இணை­ய­த­ளங்­களில் உள்ள தக­வல்­களை பரி­சீ­லிப்­ப­தோடு, நிறு­வன பிர­தி­நி­தி­யி­டமும் பேசிப்­ பார்க்­கலாம். மேலும், பாலி­சியை தேர்வு செய்­வதில் அவ­சரம் காட்­டக்­கூ­டாது.

படி­வத்தில் கவனம்: பொது­வாக பலரும் பாலி­சிக்­கான படி­வங்­களில் விற்­ப­னை­யாளர் அல்­லது ஏஜன்ட் காட்டும் இடத்தில் கையெ­ழுத்து போட்­டு­ பின், மற்ற விப­ரங்­களை அவர்கள் பூர்த்தி செய்து கொள்ள வைக்கும் வழக்கம் கொண்­டுள்­ளனர். ஆனால் படி­வத்தை சொந்­த­மாக படித்­துப் ­பார்த்து பூர்த்தி செய்­வது அவ­சியம். இதன் மூலம், பாலி­சியின் அனைத்து அம்­சங்­க­ளையும் சரி­யாக புரிந்து கொள்ள முடியும்.

பெயர் என்ன? ஒரு காப்­பீட்டு நிறு­வனம் பல­வி­த­மான பெயர்­களில் பாலி­சி­களை வழங்­கலாம். டெர்ம் திட்டம், யூலிப்கள், வழக்­க­மான திட்­டங்கள் என, பல­வித பாலி­சிகள் இருக்­கலாம். ஒவ்­வொரு பிரி­விலும் சிறிய வேறு­பா­டுகள் இருக்­கலாம். உதா­ர­ணத்­திற்கு, வீட்­டுக்­கடன் வாங்கும் போது எண்­டோமென்ட் பாலிசி ஏற்­றது அல்ல: கட­னுக்­கான பாலி­சியே ஏற்­றது. எனவே பெயர் மற்றும் பாலிசி அம்­சங்­களை கவ­ன­மாக பரி­சீ­லிக்க வேண்டும்.

நிறு­வன அழைப்பு: பெரும்­பா­லான காப்­பீட்டு நிறு­வ­னங்கள், பாலி­சியின் தன்­மையை நீங்கள் முழு­மை­யாக புரிந்து கொண்டு இ­ருக்­கி­றீர்கள் என்­பதை உறுதி செய்­வதை விரும்­பு­கின்­றன. பாலிசி பலன்கள் மற்றும் நிபந்­த­னை­களை புரிந்து கொள்ள இது அவ­சி­ய­மா­கி­றது. எனவே, நிறு­வன பிர­தி­நிதி அழைத்து பேச காத்­தி­ருங்கள். வாழ்க்கை பாது­காப்பு அளிக்கும் காப்­பீட்டு பாலி­சியை நீண்ட கால நோக்கில் வாங்­கு­கி­றீர்கள் என்­பதை நினைவில் கொள்­ளவும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)