பதிவு செய்த நாள்
21 மார்2018
00:31
புதுடில்லி : வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், காப்பீட்டு வணிகத்தில் இருந்து வெளியேறியது.
அமெரிக்காவைச் சேர்ந்த, லிபர்டி மியூச்சுவல் இன்சூரன்ஸ் குழுமத்துடன், வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இணைந்து, லிபர்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கீழ், காப்பீட்டு சேவையை வழங்கியது.
இந்நிலையில் நேற்று, வீடியோகான், காப்பீட்டு வணிகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ளது. லிபர்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 51.32 சதவீத பங்குகளை, வீடியோகான் வைத்திருந்தது. இதில், 26 சதவீத பங்குகளை, டி.பி., ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த, ‘டைமண்டு டீல் டிரேட்’ நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. மீதமுள்ளவை, இனாம் செக்யூரிட்டிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இதையடுத்து, லிபர்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், அதன் பெயரை மாற்ற உள்ளது. காப்பீட்டு வணிகத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை, வீடியோகான் தெரிவிக்கவில்லை. வாராக்கடன் தொடர்பான, திவால் நடவடிக்கை பட்டியலில், வீடியோகான் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|