பங்கு சந்தைகள் சரிவு; ரூ.1.5 லட்சம் கோடி இழப்புபங்கு சந்தைகள் சரிவு; ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ... நிறுவனங்களின் இணைப்பு, கையக செயல்பாடு, ‘சூப்பர்’ நிறுவனங்களின் இணைப்பு, கையக செயல்பாடு, ‘சூப்பர்’ ...
பொது சேவை மையம்: தமிழகத்தின் நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2018
00:40

மக்­க­ளுக்கு குறைந்த செல­வில் சேவை செய்­யும் வகை­யில், உரு­வாக்­கப்­பட்ட மத்­திய அர­சின் டிஜிட்­டல் பொது சேவை மையத்­தில், தமி­ழ­கத்­திற்­கான திட்­டங்­க­ளை­யும் அதி­க­ளவு சேர்க்க வேண்­டும் என, தொழில் முனை­வர்­கள் கோரி­யுள்­ள­னர்.

இந்­திய அர­சின், தேசிய மின்­னணு திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, பொது சேவை மையம் செயல்­பட்டு வரு­கிறது. மத்­திய அர­சின் சேவை­கள், இடைத்­த­ர­கர்­கள் இன்றி மக்­க­ளுக்கு விரை­வில் சென்று சேர, இந்த வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தொழில் முனைவோர்:
மத்­திய அர­சின் பல­த­ரப்­பட்ட சேவை­கள் அனைத்­தும், ஒரே இடத்­தில் குறைந்த செல­வில் மக்­கள் பெறு­வது இதன் சிறப்­பம்­சம். இத்­திட்­டம், பொது – தனி­யார் பங்­க­ளிப்பு மூலம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இதன் மூலம் தொழில் முனை­வோரை உரு­வாக்கி, அவர்­கள் மூலம், சமு­தாய மக்­களின் தேவை­களின் அடிப்­ப­டை­யில் சேவை வழங்­கு­வதே மத்­திய அர­சின் நோக்­கம். இதற்கு, மத்­திய அரசு கட்­ட­ணம் எதை­யும் பெறு­வ­தில்லை.

மத்­திய அர­சின் பொது சேவை மையத்தை துவக்க, விண்­ணப்­ப­தா­ரர், அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த, 18 வயது நிரம்­பிய, குறைந்த பட்ச கல்­வித் தகு­தி­யாக, 10வது படித்­த­வ­ராக இருக்க வேண்­டும். அடிப்­படை ஆங்­கி­லம் மற்­றும் கணினி அறிவு பெற்­ற­வ­ராக இருக்க வேண்­டும். ‘ஆதார்’ கட்­டா­யம். இதற்­கான இணை­ய­த­ளத்­தில் பதிவு செய்­தால், அதி­க­பட்­சம் இரண்டு மாதத்­தில் விண்­ணப்­பித்­த­வ­ருக்­கான அடை­யாள குறி­யீடு, ரக­சிய பாஸ்­வேர்ட் அனுப்பி வைக்­கப்­படும்.

பிரீ­மி­யம்:
அதன் மூலம், அந்­தந்த பகுதி மக்­க­ளுக்கு, பான்­கார்டு, பாஸ்­போர்ட், தேசிய கல்வி இயக்­கத்­தின் சான்­றி­த­ழு­டன் பட்­ட­யப் பயிற்சி, வரு­மான வரி, எல்.ஐ.சி., உள்­ளிட்ட, 17 காப்­பீட்டு நிறு­வ­னங்­களில் பிரீ­மி­யம் செலுத்­தும் வசதி ஆகியவற்றை பெறலாம். மேலும், ஓய்­வூ­தி­ய­தா­ரர்­க­ளுக்­கான உயிர்­வாழ்வு சான்று, இல­வச வீட்டு மனைப் பட்­டா­வுக்­கான விண்­ணப்­பம், மத்­திய அர­சின் பிறப்பு – இறப்பு சான்று, ரயில் மற்­றும் பஸ் டிக்­கெட் போன்ற சேவை­களை மக்­கள் பெற­லாம். இம்­மை­யம் மூலம், 2017 ஆக., வரை ஆதார் சேவை­கள் அனைத்­தும் இடம் பெற்­றி­ருந்­தன. பாது­காப்பு கருதி, அதை மத்­திய அரசு தற்­போது நிறுத்தி வைத்­துள்­ளது.

இச்­சே­வை­யில், மற்ற மாநி­லங்­களை ஒப்­பி­டு­கை­யில், தமி­ழ­கத்­திற்­கான சேவை­கள் மட்­டும் இடம் பெற­வில்லை. இடம் பெற்­றி­ருந்த ரேஷன் கார்டு அச்­ச­டிப்­பும் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளது. ரேஷன் அட்டை அச்­ச­டிப்பு, வரி செலுத்­து­தல், மின் கட்­ட­ணம் உள்­ளிட்ட பல சேவை­களை இதில் இணைக்க வேண்­டும் என, தொழில் முனை­வர்­கள் கோரி­யுள்­ள­னர்.

முடக்கம்:
இது­ கு­றித்து அவர்­கள் கூறி­ய­தா­வது: ஆதார் உள்­ளிட்ட பல சேவை­கள், மத்­திய அர­சின் டிஜிட்­டல் பொது சேவை மையத்­தில் இடம் பெற்­றி­ருந்­தன. தற்­போது அவை முடக்­கப்­பட்டு விட்­டன. இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­திற்­கான வாக்­கா­ளர் அடை­யாள அட்டை, ரேஷன் அட்டை அச்­சி­டு­வது, ஜாதிச் சான்­றி­தழ், இருப்­பி­டச் சான்­றி­தழ் உள்­ளிட்ட பல சேவை­களை இதில் வழங்­க­லாம். இதன் மூலம் குறைந்த செல­வில் மக்­க­ளுக்கு எங்­க­ளா­லும் சேவை வழங்க முடி­யும்.

சமீ­பத்­தில் இத்­த­ளத்­தில், சுங்­கச்­சா­வ­டி­களில் கட்­ட­ணம் செலுத்த காத்­தி­ருக்­கா­மல் செல்­லும் வகை­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, பாஸ்­டேக் அட்டை வழங்­கும் சேவை இணைக்­கப்­பட்டு உள்­ளது. அதே போல் இன்­சூ­ரன்ஸ், ஜி.எஸ்.டி., பதிவு மற்­றும் கணக்கு தாக்­கல் செய்­வது, ‘நீட்’ தேர்­வுக்­கான பதிவு உள்­ளிட்ட பல சேவை­கள் உள்ளன. இந்த சேவை குறித்து தமி­ழ­கத்­தில் இன்­னும் விழிப்­பு­ணர்வு ஏற்­படும் பட்­சத்­தில், வேலை­யில்லா பட்­ட­தா­ரி­கள் பலர் பய­ன­டை­வர். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.
– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)