பொது சேவை மையம்: தமிழகத்தின் நிலைபொது சேவை மையம்: தமிழகத்தின் நிலை ... அமெரிக்கா – சீனா வர்த்தக போர் மூண்டது அமெரிக்கா – சீனா வர்த்தக போர் மூண்டது ...
நிறுவனங்களின் இணைப்பு, கையக செயல்பாடு, ‘சூப்பர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2018
00:41

மும்பை : கடந்த ஆண்டு, நிறு­வ­னங்­களின் இணைத்­தல் மற்­றும் கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள், ஏழு ஆண்­டு­களில் இல்­லாத அளவு உயர்ந்­துள்ளன.

இது குறித்து, ‘எர்­னஸ்ட் அண்டு யங் நிறு­வ­னம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த, 2017ல், நிறு­வ­னங்­கள் இடையே இணைப்பு மற்­றும் கைய­கப்­ப­டுத்­து­தல் தொடர்­பாக, 1,022 ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கி­யுள்ளன. அதே­ச­ம­யம், இந்த ஒப்­பந்­தங்­களின் மதிப்பு, முந்­தைய ஆண்டை விட, 12 சத­வீ­தம் குறைந்து, 4,680 கோடி டாலர்களாக உள்­ளது.

உள்­நாட்­டில், தொலை தொடர்பு, சில்­லரை விற்­பனை, தொழில்­நுட்­பம் மற்­றும் நுகர்­வோர் பொருட்­கள் துறை­களில், இந்த ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கி­யுள்ளன. கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், பெரிய நிறு­வ­னங்­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தில் அதி­கம் ஆர்­வம் காட்­ட­வில்லை. இத­னால், 50 லட்­சம் டால­ருக்கு மேற்­பட்ட மதிப்­பி­லான ஒப்­பந்­தங்­கள் எண்­ணிக்கை, 21லிருந்து, 13ஆகக் குறைந்­துள்­ளது.

அதே­ச­ம­யம், மிகப் பெரிய நிறு­வ­னங்­களின் கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள், கட்­டுப்­பாட்டு அமைப்­பு­களின் தீவிர விசா­ரணை, கடு­மை­யான விதி­மு­றை­கள், நிலு­வை­யில் உள்ள வழக்­கு­கள் போன்­ற­வற்­றால் தாம­த­மா­கி­யுள்ளன. நடப்­பாண்டு, உள்­நாட்­டில், நிறு­வ­னங்­களின் இணைப்பு நட­வ­டிக்­கை­கள் அதி­கம் இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பல பெரிய நிறு­வ­னங்­கள், பிற துறை­களில் கால் பதிக்­க­வும், விரி­வாக்­கம் மேற்­கொள்­ள­வும் திட்­ட­மிட்­டுள்ளன.

தொழில்­நுட்ப கண்­டு­பி­டிப்­பு­கள் மற்­றும் பர­வ­லாகி வரும் மின்­னணு பரி­வர்த்­த­னை­கள், இந்த வளர்ச்­சிக்கு உத­வும். இந்­தாண்டு, பொரு­ளா­தார சூழல் நிலை­யாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத­னால், உள்­நாட்­டில், இணைப்பு மற்­றும் கைய­கப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் அதி­கம் இருக்­கும் என, தெரி­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)