நிறுவனங்களின் இணைப்பு, கையக செயல்பாடு, ‘சூப்பர்’நிறுவனங்களின் இணைப்பு, கையக செயல்பாடு, ‘சூப்பர்’ ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ...
அமெரிக்கா – சீனா வர்த்தக போர் மூண்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2018
00:41

வாஷிங்டன் – பெய்ஜிங் : அமெ­ரிக்கா – சீனா ஆகி­யவை, பரஸ்­ப­ரம் இறக்­கு­மதி செய்­யும் குறிப்­பிட்ட பொருட்­க­ளுக்கு வரியை உயர்த்த முடிவு செய்­துள்­ள­தால், இரு நாடு­கள் இடையே வர்த்­த­கப் போர் மூண்­டுள்­ளது. இது, சர்­வ­தேச வர்த்­த­கத்­தில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சுங்கவரி:
அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப், உள்­நாட்டு வர்த்­த­கத்தை பாது­காக்க, சமீ­பத்­தில், உருக்கு, அலு­மி­னி­யம் ஆகி­ய­வற்­றின் இறக்­கு­ம­திக்கு, முறையே, 25 மற்­றும், 10 சத­வீ­தம் வரி விதித்­தார். இது, அதிக அள­வில் ஏற்­று­மதி செய்­யும் சீனா, கனடா மற்­றும் ஐரோப்­பிய நாடு­களை பாதித்­துள்­ளது. இந்­நி­லை­யில், டிரம்ப் நேற்று முன்­தி­னம், அமெ­ரிக்க வர்த்­தக துறை பிர­தி­நிதி ராபர்ட் லைட்­தை­ச­ரி­டம், சீனா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் 1,300 பொருட்­க­ளுக்கு, குறைந்­த­பட்­சம், ௬,000 கோடி டாலர் ஆண்டு வருவாய் அளவிற்கு, சுங்க வரி விதிக்­கு­மாறு உத்­த­ர­விட்­டார்.

மேலும், மிக முக்­கிய தொழில்­நுட்­பங்­களில், சீன நிறு­வ­னங்­கள் மேற்­கொள்­ளும், முத­லீ­டு­க­ளுக்கு, 60 நாட்­க­ளுக்­குள்­ளாக, கட்­டுப்­பாடு விதிக்­க­வும் ஆணை­யிட்­டார். அது­மட்­டு­மின்றி, தொழில்­நுட்ப உரி­மங்­களில், அமெ­ரிக்க நிறு­வ­னங்­களை, சீனா வஞ்­சித்து வந்­துள்­ளதை, உலக வர்த்­தக அமைப்­பி­டம், ஆதா­ரங்­க­ளு­டன் புகார் தரு­மா­றும், அதி­கா­ரி­களை வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இதை தொடர்ந்து, ‘சீனா­வின் கொள்­கை­க­ளால், அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்­திற்கு ஏற்­பட்­டுள்ள இழப்பை ஈடு செய்­யும் வித­மாக, குறிப்­பிட்ட சீனப் பொருட்­களின் இறக்­கு­ம­திக்கு, 25 சத­வீ­தம் வரி விதிக்­கப்­படும்ன்’ என, அமெ­ரிக்க வர்த்­தக துறை அறி­வித்­தது.

பதிலடி:
இந்த வகை­யில், விமா­னம், தக­வல் மற்­றும் தொடர்பு தொழில்­நுட்­பம், இயந்­தி­ரங்­கள் உள்­ளிட்ட துறை­கள் சார்ந்த பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு, அதிக வரி விதிக்­கப்­பட உள்­ளது. டிரம்ப் எடுத்த அதி­ரடி நட­வ­டிக்­கைக்கு, நேற்று சீனா பதி­லடி தந்­தது. அமெ­ரிக்­கா­வின், பன்றி இறைச்சி, மறு­சு­ழற்சி அலு­மி­னி­யம், ஸ்டீல் பைப்­பு­கள், பழங்­கள், ‘வைன்’ உள்­ளிட்ட பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு, 300 கோடி டாலர் வரை வரி விதிக்க ஆலோ­சித்து வரு­வ­தாக, சீனா அறி­வித்­தது. அத்­து­டன், உலக வர்த்­தக அமைப்­பில், அமெ­ரிக்கா மீது சட்­ட­பூர்வ நட­வ­டிக்கை எடுப்­பது குறித்­தும் பரி­சீ­லிப்­ப­தாக, சீனா கூறி­யுள்­ளது.

அமெ­ரிக்கா தொடுத்­துள்ள வர்த்­த­கப் போரை கண்டு அஞ்­ச­வில்லை என்­றும், அதே­ச­ம­யம், பரஸ்­பர வர்த்­த­கம் தொடர்­பான எந்த பிரச்­னைக்­கும் மோதல் போக்கை கைவிட்டு, பேச்சு மூலம் தீர்வு காண விரும்­பு­வ­தா­க­வும், சீனா தெரி­வித்­துள்­ளது. இத­னி­டையே, அமெ­ரிக்­கா­வின் நட­வ­டிக்­கைக்கு, உள்­நாட்­டி­லேயே எதிர்ப்பு எழுந்­துள்­ளது. ‘வரி விதிப்­பால், பொருட்­கள் விலை உயர்ந்து, நுகர்­வோர் பாதிக்­கப்­ப­டு­வர்’ என, ‘வால்­மார்ட், அமே­சான்’ நிறு­வ­னங்­கள் எச்­ச­ரித்­துள்ளன. இந்த வர்த்­தக போரில், பெரும்­பா­லும் இறக்­கு­மதி பொருட்­களை சார்ந்­துள்ள அமெ­ரிக்கா தான் அதி­கம் பாதிக்­கப்­படும் என, பொரு­ளா­தார வல்­லு­னர்­கள் கூறி­யுள்­ள­னர்.

சர்­வ­தேச வர்த்­த­கத்­தில், இந்­தி­யா­வின் பங்கு மிகக் குறைவு என்­ப­தால், பெரிய பாதிப்பு எது­வும் நேராது. ஆனால், பங்­குச் சந்­தை­யில் இருந்து சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் வெளி­யே­று­வது குறித்து தான் நாம் கவ­லைப்­பட வேண்­டும்.
-அஜய் ஸ்ரீவத்­சவா,சி.இ.ஓ., டைமன்­சி­யன்ஸ் கன்­சல்­டிங்

எந்த நாடும், சர்­வ­தேச வர்த்­த­கம் தொடர்­பாக, தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுக்­கும்­பட்­சத்­தில், அதற்­கு­ரிய பதிலை இந்­தியா அளிக்­கும். உலக நாடு­கள், தீவிர சவால்­களை சந்­தித்து வரும் இவ்­வே­ளை­யில், நாம் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க வேண்­டும்
-சுரேஷ் பிரபு, மத்திய வர்த்தக அமைச்சர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)