கிரிஸ்டல் கிராப் பங்கு வெளியீடுகிரிஸ்டல் கிராப் பங்கு வெளியீடு ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
சேவை துறை சிறப்பான வளர்ச்சி:ஏழு ஆண்­டு­ இல்­லாத வகை­யில் வேலை­வாய்ப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
02:50

புதுடில்லி:கடந்த மார்ச்­சில், சேவை­கள் துறை சிறப்­பான வளர்ச்சி கண்­டுள்­ளது; ஏழு ஆண்­டு­கள் இல்­லாத வகை­யில், வேலை­வாய்ப்பு வளர்ச்சி விகி­தம் அதி­க­ரித்­துள்­ளது.
இது குறித்து, நிக்கி – மார்க்­கிட் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:நாட்­டின் சேவை­கள் துறை வளர்ச்­சியை குறிக்­கும், ‘என்.எம்.எஸ்.பி.எம்.ஐ.,’ குறி­யீடு, மார்ச்­சில், 50.3 புள்­ளி­க­ளாக உயர்ந்­துள்­ளது.இது, பிப்­ர­வ­ரி­யில், 47.8 புள்­ளி­கள் என்ற அள­வில், பின்­ன­டைவை கண்­டி­ருந்­தது. ஜன­வ­ரி­யில், சேவை­கள் துறை குறி­யீடு, 51.7 புள்­ளி­க­ளாக இருந்­தது. இக்­கு­றி­யீடு, 50 புள்­ளி­க­ளுக்கு மேல் இருந்­தால், அது வளர்ச்­சியை குறிக்­கும்.
கடந்த நிதி­யாண்­டின், ஜன­வரி – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், சேவை­கள் துறை­யின் வளர்ச்சி, ஸ்தி­ர­மாக இருந்­தது.தேவை­கள் அதி­க­ரித்­த­தால், நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய, ‘ஆர்­டர்’கள் குவிந்­தன. இதை­ய­டுத்து, அவை, அதிக அள­வில் பணி­யா­ளர்­களை நிய­மித்­தன. ஏழு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, 2011 ஜூன் மாதத்­திற்கு பின், இந்­தாண்டு மார்ச்­சில் தான், சேவை நிறு­வ­னங்­களின் வேலை­வாய்ப்பு வளர்ச்சி விகி­தம், மிக­வும் அதி­க­ரித்­துள்­ளது.
மத்­திய அரசு மேற்­கொண்டு வரும் பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்­க­ளால், வேலை­வாய்ப்­பு­கள் பெருகி வரு­கின்றன.அதே­ச­ம­யம், சேவை நிறு­வ­னங்­களின் மூலப்­பொ­ருட்­கள் செல­வி­னம், தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு, 2017, செப்­டம்­பர் முதல், புதிய ஆர்­டர்­கள் அதி­கம் கிடைத்து வரு­கின்றன. அத­னால், அவை, இந்­தாண்டு ஜன­வரி வரை, அதிக அள­வில் ஆட்­களை பணிக்கு தேர்வு செய்­தன.
பிப்­ர­வ­ரி­யில், இத்­து­றை­யில் தொய்வு ஏற்­பட்­ட­தால், நிறு­வ­னங்­களின் பணி­யா­ளர் நிய­ம­னம் குறைந்­தது. இதன் விளை­வாக, வேலை­வாய்ப்பு வளர்ச்­சியை குறிக்­கும் குறி­யீ­டும் சரி­வ­டைந்­தது.இந்­நி­லை­யில், மீண்­டும் மார்ச்­சில், சேவை­கள் துறை உற்­பத்­தி­யில் வளர்ச்சி கண்­டுள்­ளது; வேலை­வாய்ப்­பும் அதி­க­ரித்­துள்­ளது.
சேவை நிறு­வ­னங்­களின் பணி­யா­ளர் நிய­ம­னம், சரா­ச­ரிக்­கும் அதி­க­மாக உள்­ள­தால், வரும் மாதங்­களில், இத்­துறை வளர்ச்­சி­யில், மேலும் முன்­னேற்­றம் இருக்­கும் என, தெரி­கிறது.இந்­தாண்டு பிப்­ர­வ­ரி­யில், தயா­ரிப்பு மற்­றும் சேவை­கள் துறை வளர்ச்­சியை குறிக்­கும், நிக்கி இந்­தியா காம்­போ­சிட், பி.எம்.ஐ.ஓ.ஐ., குறி­யீடு, 49.7 புள்­ளி­க­ளாக பின்­ன­டைவை கண்­டி­ருந்­தது. இது, மார்ச்­சில், 50.8 புள்­ளி­க­ளாக வளர்ச்சி கண்­டுள்­ளது.மார்ச்­சில், சேவை­கள் துறை, பின்­ன­டை­வில் இருந்து வளர்ச்சி நோக்கி முன்­னேறி இருப்­பது, நாட்­டின் ஒட்­டு­மொத்த பொரு­ளா­தார வளர்ச்சி பர­வ­லாகி வரு­வதை காட்­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
எவை எவை?
இந்­திய சேவை­கள் துறை­யில், தக­வல் தொழில்­நுட்­பம், வியா­பா­ரம், ஓட்­டல், சுற்­றுலா, போக்­கு­வ­ரத்து, நிதி, காப்­பீடு, ரியல் எஸ்­டேட், வர்த்­த­கம், கட்­டு­மா­னம் உள்­ளிட்ட துறை­கள் சார்ந்த சேவை­கள் அடங்­கி­யுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)