பதிவு செய்த நாள்
09 ஏப்2018
00:51
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய படிவங்களை, மத்திய நேர்முக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. 2017 – -18ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு விபரங்களை தாக்கல் செய்வதற்காக, இந்த படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் துவக்கத்திலேயே, வரி தாக்கலுக்கான புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த காலத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய உதவும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்தால், அபராதம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. படிவங்களை பூர்த்தி செய்யும் விதத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டைப் போலவே, 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள மற்றும் ஒரு வீடு கொண்ட, வரி செலுத்துபவர்கள், ஒரு பக்க படிவத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|