பி.எப்., தொகை அறிய மூன்று எளிய வழிகள்பி.எப்., தொகை அறிய மூன்று எளிய வழிகள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பொது­வெ­ளி­யில் பேசாத விஷ­யங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2018
01:03

இருக்­கும் வேலை­யையோ, அல்­லது நடத்­தும் தொழி­லையோ விட்­டு­விட்டு, முத­லீட்டு துறைக்கு மாறி­வி­ட­லாமா என்ற எண்ண ஓட்­டம் ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் சமூ­கத்­தில் பர­வ­லாக ஓங்­கும்.சந்­தை­யில் லாபம் ஈட்­டு­வது எளி­தாக தோன்­றும் நேரங்­களில், இந்த எண்ண ஓட்­டம் அதி­க­மாக வெளிப்ப­டு­வ­துண்டு.
வேலைக்­குப் போய் நாள் முழு­வ­தும் உழைத்து சம்­பா­திக்­கும் பணத்தை, சில மணி நேரத்­தில் ஒரு பங்கு வர்த்­த­கத்­தில் எடுத்­து­வி­ட­லாம் என்று பல­ருக்கு தோன்­றும். ஆனால், இந்த எண்­ணம் எத்­தனை பேருக்கு பலித்­தது என்று பார்த்­தால், ஒரு கை விரல்­கள் போதும்; எண்ணி முடிக்க.
பங்­கு­களை வாங்க கடன்
நடை­மு­றை­யில், பங்கு வர்த்­த­கர்­கள் பணத்தை இழக்க சந்­தைக்கு வரு­ப­வர்­க­ளா­கத்­தான் இருப்­பார்­கள். பங்கு வர்த்­தக தொழில் அவர்­களை வரு­வாய் இயந்­தி­ரங்­க­ளாக மட்­டுமே பார்க்­கிறது.
அவர்­கள் இத்­து­றை­யில் இருக்­கும் நேரத்­தில், அவர்­க­ளி­டம் எவ்­வ­ளவு வரு­வாய் ஈட்­ட­லாம் என்றே பங்கு வர்த்­த­கத் துறை நோக்­கும். இது பல வழி­மு­றை­களில் அரங்­கேற்­றம் செய்­யப்­படும்.‘மார்­ஜின் பண்­டிங்’ என்ற கடன் வசதி, மிக முக்­கிய ஒரு தொழில் வழி­முறை. ஒரு­வர் கையில் பணம் குறை­வாக இருப்­பி­னும், அவர்­கள் வசம் இருக்­கும் பணம் மற்­றும் பங்­கு­களை பகுதி பிணை­யாக வைத்­துக்­கொண்டு, மேலும் பங்­கு­களை வாங்க கடன் தரு­வார்­கள்.
சந்தை உயர்ந்­தால், வட்­டிக்கு மிகை­யான லாபம் முத­லீட்­டா­ளரை சாரும். மதிப்பு குறை­யும்­பட்­சத்­தில், அவர்­கள் குறை­பாட்­டின் அள­விற்கு உரிய பணத்தை உட­ன­டி­யாக செலுத்த வேண்­டும்.
தொடர் சரிவு
அப்­ப­டிச் செய்­யத் தவ­றி­னால், அவர்­க­ளின் பங்­கு­கள், நிதி குறை­பாட்­டின் அள­வுக்கு தகுந்­த­படி, உட­ன­டி­யாக விற்­கப்­படும். தொடர் சரிவு வரும் நேரங்­களில், பெரும் நஷ்­டத்­தில் மூழ்­கியே போவார்­கள். தின வர்த்­த­கர்­கள் பல­ரும் சந்­திக்­கும் முடிவு இது­தான். இருந்­தும், ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும், புதிய வர்த்­த­கர்­கள் தோன்றி இதே முடிவை சந்­திப்­பார்­கள்.ஓய்வு பெற்­றோர் பல­ரும் தங்­கள் முழு பகல்­பொ­ழு­தை­யும் பங்கு தர­கர் அலு­வ­கத்­தில் இருக்­கும் ஸ்க்­ரீன் முன் கழிப்­பது நமக்கு தெரிந்த ஒன்றே. ஆனால், பல­ரும் பொது­வெ­ளி­யில் பேசாத சில விஷ­யங்­களை இங்கு பேச­வேண்­டிய அவ­சி­யம் இருக்­கிறது.
பங்­குச் சந்தை என்­பது தின­மும் எளி­தாக சம்­பா­திக்­கக் கூடிய இடம் இல்லை. மாறாக, பங்­குச் சந்­தை­யில், பணத்தை இழப்­பது மிகச் சுல­பம். ஒரு முத­லீட்­டா­ளர் என்ன செய்­ய­வேண்­டும் என்­ப­தில் கவ­னம் காட்­டு­வ­தோடு, செய்­யக்­கூ­டா­ததை நன்கு புரிந்து கொள்­ள­வும் வேண்­டும்.
மார்­ஜின் முறை
முத­லீட்­டில், நடத்­தை­யும் நாட்­ட­மும் மிக முக்­கி­யம். செய்­யக்­கூ­டா­ததை தெளி­வாக அறிந்து, அவற்றை தவிர்க்க வேண்­டும். மார்­ஜின் முறை­யில் வர்த்­த­கம் செய்­வது இதில் முதன்­மை­யான ஒன்று.செய்­யக் கூடா­ததை புரிந்து நடக்­கும் ஒரு­வர், அடுத்து செய்ய வேண்­டி­யதை கற்­றுப் பழக வேண்­டும். முத­லீ­டு­கள் அறி­வு­பூர்­வ­மாக வழி­ந­டத்­தப்­பட வேண்­டி­யவை என்­பதை மன­மாற ஏற்க வேண்­டும்.
வர்த்­த­கத்தை குறைத்­துக்­கொண்டு, பணத்தை எப்­படி கவ­ன­மான முறை­யில் முத­லீடு செய்­ய­வேண்­டும் என்ற தேட­லில் இறங்க வேண்­டும். இந்த தேட­லில் வாசிப்பு, ஆய்வு, கருத்­துப் பகிர்வு, பங்கு தேர்­வு­முறை அறி­தல் மற்­றும், பொறுமை வளர்ப்பு முக்­கி­யம். பண இழப்பை தவிர்க்க நெடுங்­கா­ல­மாக செய்­யும் இந்த பயிற்சி பெரி­தும் உத­வும். அதுவே, முத­லீட்டு பாதை­யில் செல்ல விரும்­பு­வோ­ரின் ஆரம்­ப­மாக இருக்க வேண்­டும்.
ஷ்aயாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
பங்குச் சந்தை

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
வாஷிங்டன்:‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்தியா, மிக திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பன்னாட்டு ... மேலும்
business news
புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ விலை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டு இதே ... மேலும்
business news
புதுடில்லி:இந்தாண்டு, ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நேரடி வரி வசூல், 6.75 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
வீட்­டுக்­க­டன் என்­பது நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், மாதத்­த­வ­ணையை மட்­டும் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கா­மல், ... மேலும்
business news
இந்தி­யா­வில் உள்ள மக்­கள் தொகை­யில், 44 சத­வீ­தத்­தி­னர்மட்­டுமே மருத்­துவ காப்­பீடுபெற்­றி­ருப்­பது தெரிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)