பதிவு செய்த நாள்
13 ஏப்2018
01:14
புதுடில்லி:கடந்த மார்ச்சில், நாட்டின் சில்லரை பணவீக்கம், 4.28 சதவீதமாக குறைந்துள்ளது. இது, பிப்ரவரியில், 4.44 சதவீதம்; ஜனவரியில், 5.07 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை சரிவால், தொடர்ந்து மூன்று மாதங்களாக, சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளது.
அதேசமயம், 2017, மார்ச்சுடன் ஒப்பிடும் போது, இந்தாண்டு மார்ச்சில், சில்லரை பணவீக்கம், 0.39 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த மார்ச்சில், காய்கறிகள் பணவீக்கம், 11.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, பிப்ரவரியில், 17.57 சதவீதமாக இருந்தது.
புரதம் நிறைந்த முட்டை, பால் மற்றும் இதர பொருட்களின் விலை, மிதமான அளவில் காணப்பட்டது. எனினும், இதே காலத்தில், பழங்கள் பணவீக்கம் அதிகரித்து இருந்தது.ஒட்டுமொத்த, உணவுப் பொருட்கள் பணவீக்கம், 3.26 சதவீதத்தில் இருந்து, 2.81 சதவீதமாக குறைந்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின் சக்தி துறையின் பணவீக்கம், 5.73 சதவீதமாக சரிவடைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|