பதிவு செய்த நாள்
17 ஏப்2018
06:20
புதுடில்லி : பருப்பு, காய்கறிகள், உள் ளிட்ட உணவுப் பொருட்கள் விலை குறைவால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், மார்ச்சில், 2.47 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, பிப்ரவரியில், 2.48 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு மார்ச்சில், மொத்த விலை பணவீக்கம், 5.11 சதவீதமாக உயர்ந்து இருந்தது.முந்தைய எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு, மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது. இதற்கு முன், 2017, ஜூலையில், பணவீக்கம், 1.88 சதவீதம் என்ற அளவில், மிகக் குறைவாக இருந்தது.
மார்ச்சில், உணவுப் பொருட்கள், 0.29 சதவீதம் என்ற அளவில் பணவாட்டம் கண்டுள்ளன. இது, பிப்ரவரியில், 0.88 சதவீத பணவீக்கமாக இருந்தது.அதுபோல, காய்கறிகள், 2.70 சதவீதம்; பருப்பு வகைகள், 20.58 சதவீதம் மற்றும் கோதுமை, 1.19 சதவீதம் என்ற அளவில், பணவாட்டம் கண்டு உள்ளன. அதேசமயம், எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம், 4.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, பிப்ரவரியில், 3.81 சதவீதமாக இருந்தது.
மார்ச்சில், சில்லரை பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4.28 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|