மின்னணு வடிவில் ஆதார் அட்டைமின்னணு வடிவில் ஆதார் அட்டை ... 6 வெளிநாட்டு கிளைகள் மூடல் அதிரடி முடிவில் எஸ்.பி.ஐ., வங்கி 6 வெளிநாட்டு கிளைகள் மூடல் அதிரடி முடிவில் எஸ்.பி.ஐ., வங்கி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரி­சே­மிப்பு திட்­ட­மி­டலை துவக்க ஏற்ற நேரம் எது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
00:42

தேவை­யில்­லாத நிதி சாத­னங்­களில் முத­லீடு செய்­வது போன்ற தவ­று­களை தவிர்க்க, வரி­சே­மிப்பு திட்­ட­மி­டலை முன்­கூட்­டியே மேற்­கொள்­வது சிறந்த வழி.

வரி சேமிப்­பிற்­கான முத­லீடு செய்­வதன் அவ­சி­யத்தை உணர்ந்­தி­ருந்­தாலும் பெரும்­பா­லானோர் கடைசி நேரத்­தி­லேயே இதற்­கான திட்­ட­மிடலை மேற்­கொள்­கின்றனர். வரி சேமிப்பு முடி­வு­ களை தள்­ளிப்­போடு­வதால், தவறான நிதி சாதனங்­களை தேர்வு செய்யும் நிலை ஏற்படலாம்.

மேலும் தொடர்து ஆண்­டு­தோறும் இதே அணு­கு­மு­றையை பின்­பற்­று­வது பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம் என நிதி ஆலோ­ச­கர்கள் எச்­ச­ரிக்­கின்­றனர். தேவை­யில்­லாத நிதி சாதனங்­களை வாங்கி வைத்­தி­ருப்­பது மோச­மா­னது, நிதி தவ­று­களில் ஒன்­றாக அமையும் என்­கின்­றனர். இத்­த­கைய பாதிப்பை தவிர்க்க, நிதி­யாண்டின் துவக்­க­மான ஏப்ரல் மாதமே வரி சேமிப்பு திட்­ட­மி­டலை மேற்­கொள்ள வேண்டும்.

சரி­யான நேரம் :
நிதி­யாண்டின் துவக்­கத்தில் நிதி திட்­ட­மி­டலை துவக்­கு­வது ஏற்­ற­தாக கரு­தப்­ப­டு­கி­றது. இதன் மூலம் தேவை­யான முத­லீட்டு உத்­தி­களை வகுக்­கலாம். வரி சேமிப்பு திட்­ட­மிடல் என்­பது ஒட்­டு­மொத்த நிதி திட்­ட­மி­டலின் ஒரு அங்­க­மா­கவே அமை­கி­றது. வரி சேமிப்பு என்­பது முத­லீட்டின் மீது கிடைக்கும் ஒரு துணை பயன் மட்­டுமே. எனவே முத­லீட்டின் பயன் ஒட்­டு­மொத்த நோக்கில் பயன் தரு­வ­தாக இருக்க வேண்டும். வரி சேமிப்பு மட்­டுமே போது­மா­ன­தல்ல.

எனவே நிதி­யாண்டின் துவக்­கத்தில் இதற்­கான திட்­ட­மி­டலை துவக்­கு­வதே சரி­யாக இருக்கும். வரி­சே­மிப்பு திட்­ட­மி­டலில் முதலில் அறிய வேண்­டிய விஷயம் வரு­மான வரிச்­சட்டம், 80 சி பிரிவின் கீழ் விலக்கு கோர எவ்­வ­ளவு முத­லீடு தேவை என்­ப­தாகும். பி.எப். சேமிப்பு, தேசிய சேமிப்பு சான்­றிதழ், வீட்­டுக்­க­ட­னுக்­கான வட்டி, பிள்­ளைகள் கல்­விச்­செ­லவு உள்­ளிட்­டவை இதன் கீழ் வரு­கின்­றன. பலரும், இந்த பிரிவின் கீழ் வரக்­கூ­டிய முத­லீட்டை ஏற்­க­னவே செய்­தி­ருப்­பதை அறி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர். பி.எப் தொகை பிடிக்­கப்­படும் பட்­சத்தில் அந்த தொகை போக மிச்­ச­முள்ள தொகையை மட்­டுமே வரி சேமிப்­பிற்கு கணக்கில் எடுத்­துக்­கொள்ள வேண்டும்.

கூடுதல் பலன் :
முன்­கூட்­டியே வரி­சே­மிப்பை திட்­ட­மிட்டு மேற்­கொள்­வதன் மூலம் அதன் மீதான கூடுதல் பலனை பெறு­வதும் சாத்­தியம். நிதி­யாண்டின் இறு­தியில் முத­லீடு செய்­வ­தற்கு பதில் துவக்­கத்­தி­லேயே செய்­வதன் மூலம் இது சாத்­தி­ய­மா­கி­றது. பி.பி.எப்., போன்ற நீண்ட கால முத­லீட்டில் இது அதன் முதிர்வு காலத்தில் இன்னும் கூடுதல் பலன் தரு­வ­தாக அமையும். மேலும் பல வரி­சே­மிப்பு முத­லீ­டுகள் குறிப்­பிட்ட லாக் இன் காலம் கொண்­டவை. துவக்­கத்­தி­லேயே முத­லீடு செய்தால் லாக் இன் காலம் முடிந்த பின் அவற்றில் இருந்து வெளி­யே­று­வதும் இன்னும் விரை­வாகும்.

வரி சேமிப்­புக்கு, 80 சி பிரிவு தவிர வேறு பிரி­வு­களும் உள்­ளன. இவற்றின் கீழ் வரும் கழி­வு­களை கண்­ட­றிந்து அதற்­கேற்ப திட்­ட­மிடவும் போதிய அவ­காசம் தேவை. முன்­கூட்­டியே திட்­ட­மிடும் போது இது சாத்­தி­ய­மா­கி­றது. மற்ற வாய்ப்­பு­க­ளையும் கண்­ட­றிந்து சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். இவ்­வாறு செய்­வதன் மூலம் கடைசி நேரத்தில் வரி­சே­மிப்பு முத­லீட்டை மேற்­கொள்ளும் பதற்­றத்தை தவிர்க்­கலாம் என்­ப­தோடு, அவ­ச­ரத்தில் தவ­றான முடி­வு­களை மேற்­கொள்­வ­தையும் தவிர்க்­கலாம். சரி­யான முத­லீட்டு வாய்ப்­பு­களை தேர்வு செய்­யவும் இது உதவும். வரி­சே­மிப்­பிற்­காக மட்டும் முத­லிடு செய்­யாமல் நிதி இலக்­கு­க­ளுக்கு பொருத்­த­மான முடி­வு­களை மேற்­கொள்­வதன் மூலம் வரி சேமிப்பு பல­னையும் எளி­தாக பெறலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)