‘எல்.ஓ.யு., பிரச்னைக்கு விரைவில் தீர்வு’‘எல்.ஓ.யு., பிரச்னைக்கு விரைவில் தீர்வு’ ... ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு ...
பெட்­ரோல், டீசல் வரி குறை­யுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
00:55

நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, பெட்­ரோல், டீச­ல் விலை கடு­மை­யாக உயர்ந்­துள்­ளது. ஏழை, எளி­ய­வர்­களும், மத்­தி­ய­மர்­களும் திண்­டா­டும் விலை­யு­யர்வை கட்­டுப்­ப­டுத்­தவே முடி­யாதா?

இந்­தக் கட்­டுரை எழு­தப்­ப­டும்­போது, சென்­னை­யில் பெட்­ரோல் விலை, 76.99 ரூபாய்; டீசல் விலை, 69.06 ரூபாய். ஏப்­ரல் மாதத்­தில் மட்­டும் பெட்­ரோல் விலை, 50 காசு­களும், டீசல் விலை, 90 காசு­களும் உயர்ந்­துள்­ளன. இந்த ஆண்டு துவக்­கத்­தில் இருந்து, பெட்­ரோல் விலை லிட்­ட­ருக்கு, 4 ரூபா­யும், டீசல் விலை லிட்­ட­ருக்கு, 5 முதல், -6 ரூபாய் வரை­யும் உயர்ந்­துள்­ளன.

ஏன் விலை உயர்வு?
இதைக் குறைப்­ப­தற்­கான பல்­வேறு வாய்ப்­பு­கள் இருந்­தும், அர­சு ஏன் தயக்­கம் காட்­டு­கிறது என்ற கேள்வி எழா­மல் இல்லை. முத­லில் ஏன் விலை உயர்வு?சர்­வ­தேச அள­வில், எண்­ணெய் உற்­பத்தி செய்­யும் நாடு­கள், சில ஆண்­டு­க­ளாக நெருக்­க­டி­யில் இருந்­தன. அமெ­ரிக்கா பெரும்­பா­லும், சவுதி அரே­பியா போன்ற நாடு­க­ளி­டம் தான், கச்சா எண்­ணெய் வாங்கி வந்­தது. ஆனால், சமீப ஆண்­டு­களில், அமெ­ரிக்­கா­வி­லேயே ஷேல் காஸ் எடுத்­தல், கச்சா எண்­ணெய் துரப்­ப­ணம் ஆகி­யவை வெற்­றி­க­ர­மாக முன்­னேற்­றம் கண்டுள்ளன. இத­னால், வெளி­நாட்­டி­லி­ருந்து கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி குறைந்­து­விட்­டது.

விளை­வாக, கச்சா எண்­ணெ­யின் விலை சரி­யத் துவங்­கி­யது. இத­னால், பெரும் பயனை அடைந்த நாடு­களில் ஒன்று இந்­தியா.இன்­னொரு பக்­கம், சரி­யும் விலையை நிறுத்த வேண்­டும் என, எண்­ணெய் உற்­பத்தி செய்­யும், ‘ஒபெக்’ நாடு­கள் கங்­க­ணம் கட்­டின. உற்­பத்­தி­யைக் குறைத்­தன; புதிய துரப்­ப­ணப் பணி­களை நிறுத்­தின.தற்­போது, அமெ­ரிக்­கா­வில், எண்­ணெய் உற்­பத்தி, சற்று தேக்­க­ம­டைந்­துள்­ளது. அவர்­கள் எப்­ப­டி­யி­ருந்­தா­லும், ஒபெக் நாடு­களை நாடி வர வேண்­டிய தேவை இருக்­கிறது. அவ்­வ­ளவு தான், ஒபெக் நாடு­கள், கச்சா எண்­ணெய் விலை உய­ரட்­டும் என்று ஜாலி­யாக காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றன. தற்­போது, கச்சா எண்­ணெய் பீப்­பாய் ஒன்­றின் விலை, 74 டாலர்.

இதன் பாதிப்­பையே, நாம் அனு­ப­வித்­துக் கொண்டு இருக்­கி­றோம். காங்­கி­ர­சின் இரண்­டாம் ஆட்­சிக் காலத்­தில், கச்சா எண்­ணெ­யின் சந்தை விலை­யோடு, பெட்­ரோ­லின் சில்­லரை விலை இணைக்­கப்­பட்­டது. பா.ஜ., தலை­மை­யி­லான அர­சு வந்த முதல் ஆண்­டில்,டீச­லின் விலை­யை­யும் சந்தை விலை­யோடு இணைந்­தது.இப்­பொ­ருட்­க­ளின் சில்­லரை விலை நிர்­ண­யம், எண்­ணெய் நிறு­வ­னங்­க­ளி­டமே விடப்­பட்­டது. அவர்­கள் முத­லில் மாதத்­துக்கு ஒரு முறை­யும், பின்­னர் மாதத்துக்கு இரண்டு முறை­யும் மாற்­றி­ய­மைத்­த­னர். சென்ற ஆண்டு, ஜூன் மாதத்­துக்­குப் பின், அனு­தி­ன­மும் விலை மாற்­றத்­தைச் செய்­வது என்ற முடி­வுக்கு எண்­ணெய் நிறு­வ­னங்­கள் வந்­தன. அது­தான், இன்று எம­னாக வந்து வாய்த்­தி­ருக்­கிறது.

இதை­யெல்­லாம், இன்று கொஞ்­சம் வேறு மாதிரி திரும்­பிப் பார்ப்­போம். அன்­றைய கால­கட்­டத்­தில், எண்­ணெய் நிறு­வ­னங்­க­ளின் இழப்பை ஈடு­கட்ட அர­சு மானி­யம் கொடுத்­தது. அத­னால், எக்­கச்­சக்க நஷ்­டம். இன்­றைக்கு வாருங்­கள்...பண­வீக்­கம் உயர்வு, சர்­வ­தேச கச்சா எண்­ணெய் விலை­யு­யர்வை, அப்­ப­டியே மக்­க­ளுக்கு வழங்­கி­விட்­டால், எண்­ணெய் நிறு­வ­னங்­கள் நஷ்­டத்­தில் இயங்­காது அல்­லவா என்று சொல்­லப்­பட்­டது.எண்­ணெய் நிறு­வ­னங்­க­ளுக்கு, தற்­போது எந்த நஷ்­ட­மும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. அவை, பெட்­ரோல், டீசல் விற்­ப­னை­யில், லிட்டருக்கு 3 – 3.10 ரூபாய் வரை லாபம் பார்க்­கின்­றன என, தெரி­விக்­கிறது ஆய்வு அறிக்கை. வழக்­க­மாக, 2 – 2.50 ரூபாய் வரை மட்­டுமே, லாபம் பார்த்­தன இவை. அதற்கு முன், நஷ்­டமே பார்த்­துக்­கொண்­டி­ருந்­தன. இத்­த­கைய உபரி லாபத்தை, இன்­றைக்கு எண்­ணெய் நிறு­வ­னங்­கள் குறைத்­துக் கொள்­ள­லாமே?

இன்­னொரு பெரிய வாய்ப்பு, வரி குறைப்பு. எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­களில் இருந்து வெளி­வ­ரும், பெட்­ரோல், டீச­லின் அடக்க விலை, 35 ரூபாய் மட்­டுமே. மத்­திய – மாநில அர­சு­கள் போடும், கலால் வரி தான் மிச்­ச­மெல்­லாம். நவம்­பர், 2014 முதல், ஜன­வரி, 2016 வரை, மத்­திய அரசு ஒன்­பது முறை கலால் வரியை உயர்த்­தி­யது. இதே சம­யத்­தில் தான், சர்­வ­தேச அள­வில் கச்சா எண்­ணெய் விலை வீழ்ச்சி அடைந்­தது.அத­னால், கிடைத்த லாபம் அனைத்­தை­யும் மத்­திய அர­சும், மாநில அர­சு­களும் எடுத்­து­கொண்­டன. அவை மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. எல்­லாம் நம்ம அர­சு தானே, நமக்­கா­கச் செய்­வ­தற்­குத் தானே நிதி திரட்­டு­கின்­ற­னர் என்று பொறுமை காத்­த­னர்

மக்­கள். நடு­வில் ஒரே ஒரு முறை மட்­டும், 2 ரூபாய் குறைக்­கப்­பட்­டது. ஆனால், கச்சா எண்­ணெய் விலை உயர்ந்து, சில்­லரை விலை கடு­மை­யாக உய­ரும் ­போது, கலால் வரி­யைக் குறைத்து கொஞ்­ச­மே­னும் நிம்­மதி தர­லாமே அர­சாங்­கம்? அப்­படி ஒரு எண்­ணம் தங்­க­ளுக்கு இல்லை என்று தெரி­வித்­துள்­ளார், பெட்­ரோ­லி­யத் துறை அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான்.கலால் வரி­யில், 42 சத­வீ­தம் மாநி­லங்­க­ளுக்­குச் செல்ல, மிச்­ச­முள்ள தொகை, மத்­திய அர­சுக்­கு செல்­கிறது. சென்ற முறை, மத்­திய அரசு கலால் வரி­யைக் குறைத்­த­போது, வாட் வரி­யை­யும் குறைக்­கச் சொல்லி மாநில அர­சுகளை வலியுறுத்தியது. மஹா­ராஷ்­டி­ரம், குஜ­ராத், மத்­திய பிர­தே­சம், ஹிமாச்­சல பிர­தே­சம் தவிர, வேறு எந்த மாநி­ல­மும், தங்­க­ளது வரி­யைக் குறைத்­துக் கொள்­ள­வில்லை.

மத்­திய அரசு செய்­ய­வில்லை என்­றா­லும், மாநில அர­சு­ தங்­கள் வரி வரு­வா­யைக் குறைத்­துக் கொள்ள முன்­வர வேண்­டும் என்று, மக்­கள் விரும்­பு­கின்­ற­னர்.அறி­கு­றியே இல்லைபெட்­ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி., வரம்­புக்­குள் கொண்­டு­வர வேண்­டும், அத­னால் நேர­டி­யாக, 10 ரூபாய் விலை குறை­யும் என்­பது இன்­னொரு வாதம். ஜி.எஸ்.டி., அம­லான நாள் முதல் பேசப்­ப­டு­கி­றதே தவிர, இந்­தத் திசை­யில் முன்­னேற்­றம் ஏற்­பட்­ட­தற்­கான அறி­கு­றியே தெரி­ய­வில்லை.

அடிப்­ப­டை­யில், பெட்­ரோல், டீசல் வரி வரு­வாய், மத்­திய – மாநில அர­சுக­ளின் அட்­சய பாத்­தி­ரம். வளர்ச்­சிப் பணி­களும், சமூ­க­ந­லத் திட்­டங்­களும் மறை­முக வரு­வாயை நம்­பியே செயல்­ப­டு­கின்­றன. ஏற்­க­னவே மக்­கள் தலை­யில் கட்­டப்­பட்ட சுமையை, தங்­கள் தோள் மீது மாற்­றிக்­கொள்ள இரண்டு அர­சு­களும் தயக்­கம் காட்­டு­கின்­றன. இந்­நி­லை­யில், மக்­க­ளின் வலி­யைப் பார்த்­துக் ­கொண்டு வாளா­வி­ருப்­பது அர­சு­க­ளுக்கு அழ­கல்ல.

-ஆர்.வெங்­க­டேஷ்,பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)