பதிவு செய்த நாள்
27 ஏப்2018
00:56
புதுடில்லி : சர்வதேச நிறுவனங்களுக்கு, ‘டிவி’ தயாரித்து கொடுக்கும் பல நிறுவனங்கள், தற்போது நேரடியாக, ‘டிவி’ விற்பனையில் இறங்குவது அதிகரித்துள்ளது.
உ.பி.யின் நொய்டாவைச் சேர்ந்த பல நிறுவனங்கள், ‘சாம்சங், எல்.ஜி., ஹேயர்’ போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கும், ‘வீடியோகான், பி.பி.எல்., கிரவுன், சன்டெக், மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ்’ போன்ற உள்நாட்டு நிறுவனங்களுக்கும், ‘டிவி’ தயாரித்து கொடுக்கின்றன.
இந்த, ‘டிவி’க்கள் மீது, சாம்சங், எல்.ஜி., உள்ளிட்ட நிறுவனங்கள், அவற்றின் பிராண்டு பெயரை சூட்டி, விற்பனை செய்கின்றன. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனங்களே நேரடியாக, ‘டிவி’ விற்பனையில் இறங்கி வருகின்றன. சாம்சங் நிறுவனத்திற்கு, ‘டிவி’ தயாரித்து கொடுத்து வந்த, ‘வீடியோடெக்ஸ்’ நிறுவனம், தற்போது, ‘தைவா’ என்ற பிராண்டில், ‘டிவி’ விற்பனையை துவக்கியுள்ளது. ஒரு மாதத்தில், 3,000, ‘டிவி’க்கள் விற்பனையாவதாக கூறுகிறது, இந்நிறுவனம்.
எஸ்.எஸ்.பி.எல்., நிறுவனம், ‘கோடக்’ கேமரா நிறுவனத்திடம், அதன் பெயரை பயன்படுத்தும் உரிமம் பெற்று, ‘கோடக்’ ‘டிவி’யை விற்பனை செய்கிறது. அதுபோல, ‘மல்ஹோத்ரா எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம், ‘வைபர்’ பிராண்டிலும், ‘பெஸ்டன்’ நிறுவனம், ‘கெவின்’ பிராண்டிலும், ‘டிவி’க்களை விற்பனை செய்கின்றன. ‘வியரா டெக்னாலஜிஸ்’ நிறுவனம், ‘நோபிள் ஸ்கிடோ’ என்ற, ‘டிவி’ விற்பனையில் ஈடுபட்டு உள்ளது.
‘அமேசான், பிளிப்கார்ட்’ போன்ற வலைதள சந்தைகளில், இந்த, ‘டிவி’க்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த, ‘டிவி’ தயாரிப்பு நிறுவனங்களின் திறன், அனுபவம் உள்ளிட்ட பின்னணியை அறிந்தவர்கள், அவற்றின் பிராண்டுகளை, தயக்கமின்றி வாங்குகின்றனர். ‘‘எனினும், ‘டிவி’ வினியோகம், விற்பனைக்கு பிந்தைய சேவை போன்றவற்றை பொறுத்து தான் இந்நிறுவனங்களின் வெற்றி உள்ளது,’’ என்கிறார், ‘டிலோட்டா இந்தியா’ நிறுவனத்தின் பங்குதாரர், ரஜத் வாஹி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|