‘டிவி’ விற்பனையில் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனங்கள்‘டிவி’ விற்பனையில் ஒப்பந்த தயாரிப்பு நிறுவனங்கள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ...
மின்னணு வழி சீட்டு நடைமுறை எளிமையாகிறது; சரக்கு போக்குவரத்தில் ஒரு முறை தான் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2018
00:57

புதுடில்லி : சரக்கு போக்­கு­வ­ரத்­தில், ‘இ – வே’ பில் எனப்­படும் மின்­னணு வழிச் சீட்டு நடை­மு­றையை மேலும் எளி­மை­யாக்­கு­வது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.

நடப்பு ஏப்., 1ல், சரக்கு போக்­கு­வ­ரத்­திற்­கான, மின்­னணு வழிச் சீட்டு நடை­முறை அம­லுக்கு வந்­தது. இதன்­படி, 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேற்­பட்ட மதிப்­பி­லான சரக்கு போக்­கு­வ­ரத்­திற்கு, மின்­னணு வழிச் சீட்டு கட்­டா­யம் ஆக்­கப்­பட்­டுள்­ளது. தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், சரக்கு போக்­கு­வ­ரத்து சேவை நிறு­வ­னங்­கள், ‘இ – வே’ பில் வலை­த­ளத்­தில், மின்­னணு வழிச் சீட்­டு­களை தயா­ரிக்­க­லாம்.

சரக்­கு­களை கொண்டு செல்­லும்­போது, வரித் துறை அதி­கா­ரி­கள் ஆய்வு செய்­தால், மின்­னணு வழிச் சீட்டை காண்­பிக்க வேண்­டும். முதற்­கட்­ட­மாக, மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான சரக்கு போக்­கு­வ­ரத்­தில் அம­லான இந்த திட்­டம், மாநி­லங்­க­ளுக்­குள் நடை­பெ­றும் சரக்கு வினி­யோ­கத்­தி­லும் படிப்­ப­டி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது.

மின்­னணு வழிச் சீட்டு நடை­மு­றை­யால், காஷ்­மீ­ரில் இருந்து கன்­னி­யா­கு­மரி வரை, சோத­னைச் சாவ­டி­கள் எது­வு­மின்றி, சரக்­கு­களை விரை­வாக எடுத்­துச் செல்ல முடி­கிறது. இத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு, நேரம் ஆகி­யவை மிச்­ச­மா­கி­யுள்ளன. எனி­னும், மாநி­லம் விட்டு மாநி­லம் வரும் போது, பல இடங்­களில், சரக்­கு­களை, வரித் துறை­யி­னர் ஆய்வு செய்­வ­தால், தேவை­யற்ற தாம­தம் ஏற்­ப­டு­கிறது.

இது குறித்து, கே.பி.எம்.ஜி., நிறு­வ­னத்­தின், வரி பிரிவு தலை­வர், சச்­சின் மேனன் கூறி­ய­தா­வது: மின்­னணு வழிச் சீட்டு நடை­முறை, சுமு­க­மாக போய்க் கொண்­டி­ருக்­கிறது. எனி­னும், சில நடை­மு­றைச் சிக்­கல்­களும், குழப்­பங்­களும் உள்ளன. ஒரு முறை, அதி­கா­ரி­கள் ஆய்வு செய்த பின், வேறி­டத்­தில் மீண்­டும் ஆய்வு செய்ய வேண்­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. மேலும், ஆவ­ணங்­களை சரி­பார்த்­தால் போதுமா அல்­லது சரக்­கு­க­ளை­யும் ஆய்வு செய்ய வேண்­டுமா என்­ப­தில், தெளி­வான வழி­காட்­டு­தல் இல்லை.

இது போன்ற பிரச்­னை­கள், மத்­திய நிதி­ய­மைச்­ச­கத்­தின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்ளன. இதை­ய­டுத்து, சரக்கு போக்­கு­வ­ரத்­தில், ஒரு முறை மட்­டும் ஆய்வு செய்­யும் நடை­மு­றையை அமல்­ப­டுத்­து­வது குறித்து, மத்­திய அரசு ஆராய்ந்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கிறது. மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி தலை­மை­யி­லான, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டம், மே 4ல் கூடி, புதிய வரி விதிப்பு நடை­மு­றையை மேலும் சுல­ப­மாக்­கு­வது குறித்து விவா­திக்க உள்­ளது.

இதை­ய­டுத்து, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல், மின்­னணு வழிச் சீட்டு ஆகி­ய­வற்­றுக்கு, மேலும் எளி­மை­யான நடை­மு­றை­கள் அறி­விக்­கப்­படும் என, தெரி­கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைப்­பால் பெறும் பயனை, நுகர்­வோ­ருக்கு அளிக்­கா­மல், அதா­வது விலை குறைப்பு செய்­யாத நிறு­வ­னங்­கள் மீது, தேசிய கொள்ளை லாப தடுப்பு ஆணை­யத்­தில் புகார் அளிக்­க­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

2 கோடியை தாண்டியது:
ஏப்., 1ல், ‘இ – வே’ பில் அம­லுக்கு வந்­தது. 24 நாட்­களில், இரண்டு கோடிக்­கும் அதி­க­மான ரசீ­து­கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்ளன. ஏப்., 15ல், உள்­ளுர் சரக்கு போக்­கு­வ­ரத்­துக்­கான, ‘இ – வே’ பில் நடை­முறை அறி­மு­க­மா­னது. இது, 17 மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில் அம­லுக்கு வந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)