குறைந்தது தக்காளி விலைகுறைந்தது தக்காளி விலை ... இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்தது  உலக தங்க கவுன்சில் அறிக்கை இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்தது உலக தங்க கவுன்சில் அறிக்கை ...
ஸ்ரீபெரும்புதுாரில் 8,000 வேலைவாய்ப்பு உருவாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2018
00:49

புதுடில்லி,:‘சென்னை அருகே, ஸ்ரீபெ­ரும்­பு­துா­ரில் உள்ள மொபைல் போன் தொழிற்­சா­லை­களில், இந்­தாண்டு, 8,000 வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்’ என, இந்­திய மொபைல் போன் நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான, ஐ.சி.ஏ., மதிப்­பிட்­டு உள்­ளது.
ஸ்ரீபெ­ரும்­பு­துா­ரில், 2014க்கு முன், மொபைல் போன் மற்­றும் உதி­ரி­பா­கங்­கள் தயா­ரிப்­பில், ‘நோக்­கியா, மோட்­ட­ரோலா’ உள்­ளிட்ட ஒன்­பது நிறு­வ­னங்­கள் ஈடு­பட்டு வந்­தன. இவற்­றில், 33 ஆயி­ரத்து, 200 பேர் பணி­யாற்றி வந்­த­னர்.இந்­நி­லை­யில், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் வரி பிரச்னை தொடர்­பாக, நோக்­கியா, 2014, நவ., 1ல் மூடப்­பட்­டது.
மூன்று நிறுவனங்கள்
இதை­ய­டுத்து, இந்நி­று­வ­னத்­திற்கு உதி­ரி­பா­கங்­கள் அளித்து வந்த நிறு­வ­னங்­களும் மூடப்­பட்­டன. இத­னால், நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மா­க­வும், 25 ஆயி­ரம் பேர் வேலை­வாய்ப்பை இழந்­த­னர்.தற்­போது, மூன்று நிறு­வ­னங்­கள் மட்­டுமே இயங்கி வரு­கின்றன.அவற்­றில், பிளக்ஸ்ட்­ரா­னிக்ஸ் நிறு­வ­னம், அதி­க­பட்­ச­மாக, 11 ஆயி­ரம் தொழி­லா­ளர்­க­ளு­டன் செயல்­பட்டு வரு­கிறது. பாக்ஸ்­கான், சல்­காம்ப் ஆகிய நிறு­வ­னங்­கள், தலா, 7,000 பேரு­டன் இயங்கி வரு­கின்றன.
இந்­நி­லை­யில், ஐ.சி.ஏ., தலை­வர் பங்­கஜ் மொகிந்த்ரூ, மத்­திய தக­வல் தொழில்­நுட்ப துறை அமைச்­சர், ரவி­சங்­கர் பிர­சாத்­திற்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.
அதன் விப­ரம்:ஸ்ரீபெ­ரும்­பு­துா­ரில், மீண்­டும், லைட் ஆன், மோட்­ட­ரோலா நிறு­வ­னங்­கள் இயங்க, நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. அத­னால், இந்­தாண்டு இறு­திக்­குள், மேலும், -8,000 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும். இந்த இரு தொழிற்­சா­லை­களை திறக்க தாம­தம் ஆனா­லும், மேற்­கு­றிப்­பிட்ட வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கும்; அதற்­கான முயற்­சி­யும் நடக்­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
இத­னி­டையே, நோக்­கியா வரி பிரச்னை தொடர்­பாக, அதன் தாய் நிறு­வ­னம் அமைந்­துள்ள நெதர்­லாந்து நாட்­டிற்­கும், இந்­தி­யா­விற்­கும் இடையே ஒப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது. அத­னால், விரை­வில் நோக்­கி­யா­வும் பணி­களை துவக்­கும் எனத் தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)