காப்­பீடு பாலிசி விற்­ப­னையில்  அறிய வேண்­டிய உத்­திகள்  காப்­பீடு பாலிசி விற்­ப­னையில் அறிய வேண்­டிய உத்­திகள் ... ஏற்றுமதி அதிகரிப்பால் மஞ்சள் விலை உயர்வு ஏற்றுமதி அதிகரிப்பால் மஞ்சள் விலை உயர்வு ...
மாற்றி யோசித்­தா­லன்றி தீர்­வில்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2018
00:49

இந்­தி­யா­வின், வங்கி நிரந்­தர சேமிப்­பு­களின் வளர்ச்சி விகி­தம், கடந்த, 50 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு சரிந்­து­விட்­டது என்ற செய்தி, எல்­லா­ரை­யும் கொஞ்­சம் யோசிக்க வைத்­து­விட்­டது. இது சொல்­லும் செய்தி என்ன?
இந்­திய பொதுத்­துறை வங்­கி­க­ளி­லும், தனி­யார் வங்­கி­க­ளி­லும், பெரு­நி­று­வ­னங்­கள் துவங்கி, ஓய்­வூ­தி­யர்­கள் வரை பல­ரும் நிரந்­தர சேமிப்­பு­களை செய்து வரு­கின்­ற­னர். இதை பாது­காப்­பான முத­லீடு என்றே பல­ரும் கரு­து­கின்­ற­னர். நிலை­யான வட்டி கிடைத்து வரு­வ­தா­லேயே, ஓய்­வூ­தி­யர்­கள் நிரந்­தர சேமிப்பை நம்­பி­யுள்­ள­னர்.
இந்­நி­லை­யில், 2017 – -18 நிதி­யாண்­டில், இப்­படி செய்­யப்­பட்டு வரும் நிரந்­தர சேமிப்­புத் தொகை பெரு­ம­ளவு வள­ர­வில்லை. அதா­வது, 2017 மார்ச் மாதத்­தில், இந்­திய பொதுத்­துறை வங்­கி­களில் இருந்த நிரந்­தர சேமிப்பு, 107.58 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. இது, அதற்கு முந்­தைய ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, 15.8 சத­வீ­தம் அள­வுக்கு உயர்ந்­தி­ருந்­தது.
ஆனால், மார்ச் 2018ல் இந்த வளர்ச்சி, 6.7 சத­வீத அள­வுக்கு மட்­டுமே உயர்ந்து, மொத்த நிரந்­தர சேமிப்­புத் தொகை, 114.75 லட்­சம் கோடி ரூபா­யாக மட்­டுமே இருந்­தது. இந்த வளர்ச்சி விகி­தம், கடந்த, 50 ஆண்­டு­களில் மிக­வும் குறை­வா­னது என்­பதே வருத்­தம் ஏற்­ப­டுத்­தும் செய்தி.
கார­ணங்­கள் பல
கடந்த, 2016ம் ஆண்டு நவம்­பர் –டிசம்­பர் மாதங்­களில், பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை கார­ண­மாக, ஏரா­ள­மான தொகை வங்­கிக்கு வந்து சேர்ந்­தது. அத­னால், அப்­போது நிரந்­தர சேமிப்­பு­களும் அதி­க­ரித்­தன. அதன் பின், பல்­வேறு கார­ணங்­க­ளால், சேமிப்­புத் தொகை­கள் எடுக்­கப்­பட்­டு­விட்­டன.இந்­நி­லை­யில், சென்ற ஆண்­டு­டன் ஒப்­பிட்டு, சேமிப்பு வள­ர­வில்லை என்று சொல்­வ­தில் அர்த்­த­மில்லை என்ற வாதம் வைக்­கப்­ப­டு­கிறது. இதை­விட முக்­கி­ய­மான வாதம், வட்டி விகி­தம்.
சேமிப்­பு­க­ளுக்கு கிடைத்து வரும் வட்டி விகி­தம் உய­ராத நிலை­யில், பொது­மக்­கள் தங்­கள் சேமிப்­பு­களை வேறு முத­லீ­டு­க­ளுக்கு மாற்றி வரு­கின்­ற­னர். குறிப்­பாக, ‘மியூச்­சு­வல் பண்டு’ களுக்கு. கடந்த இரண்டு ஆண்­டு­களில், பரஸ்­பர சகாய நிதி­களில் சேர்ந்து வரும் தொகை ஆச்­ச­ரி­யத்தை அளிக்­கிறது.கடந்த, 2018 மார்ச் மாதம் வரை, இந்­திய மியூச்­சு­வல் பண்­டு­களில் சேர்ந்­துள்ள மொத்த தொகை, 23.05 லட்­சம் கோடி ரூபாய். இதில், 4.75 லட்­சம் கோடி ரூபாய், கடந்த ஓராண்­டில் மட்­டும் வந்து சேர்ந்­துள்­ளது.
இதே­போல், காப்­பீ­டு­களில் செய்­யப்­படும் முத­லீ­டு­களும் உயர்ந்­துள்ளன. மார்ச் 2017ல், 1.75 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்த முதல் தவணை பாலிசி தொகை, மார்ச் 2018ல், 1.93 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது, மக்­கள் ‘பாது­காப்பை’ மறந்­து­விட்டு, ‘ரிஸ்க்’ எடுக்­கத் தயா­ரா­கி­விட்­ட­னர் என்று எடுத்­துக் கொள்­வதா; பொரு­ளா­தார ரீதி­யான கல்­வி­யும், புரி­த­லும் இந்­திய மத்­தி­ய­மர்­கள் மத்­தி­யில் பரவி வரு­வ­தன் சான்­றாக எடுத்­துக் கொள்­வதா? அல்­லது வேறு வழியே இல்­லா­மல், நிரந்­தர சேமிப்­பு­கள் ஈட்­டித்­த­ரும் வரு­வா­யை­விட, மியூச்­சு­வல் பண்­டு­களும், இன்­சூ­ரன்ஸ் முத­லீ­டு­ களும் கூடு­தல் வரு­வாய் ஈட்­டித்­த­ரும் என்ற நம்­பிக்­கை­யில் மக்­கள் முத­லீடு செய்­கின்­ற­னரா என்ற குழப்­பம் நில­வு­கிறது.
கடந்த ஓராண்­டில், வங்­கித் துறை­யில் ஏற்­பட்­டு­ வ­ரும் மோச­டி­களும், வாராக்­க­டன் பிரச்­னை­யும், மக்­களை அச்­ச­ம­டைய வைத்­துள்­ளதா என்ற சந்­தே­க­மும் எழுந்­துள்­ளது. நாளையே வங்­கி­கள் திவா­லா­கு­மா­னால், முத­லீட்­டா­ளர்­களின் சேமிப்­பு­களில் இருந்து எடுத்து வங்­கி­க­ளைக் காப்­பாற்­றும், ‘பெயில் -இன்’ நடை­முறை அம­லுக்கு வருமோ என்ற அச்­ச­மும் இதற்­குப் பின்னே இருக்­க­லாம்.
வேறு கோணம்
இதே விஷ­யத்தை இன்­னொரு முனை­யில் இருந்து பார்ப்­போம். அதா­வது, இந்­திய குடும்­பங்­களில் நிதிச் சேமிப்­பு­கள் எப்­படி பங்­கி­டப்­பட்­டுள்ளன என்­ப­தைக் கணக்­கிட, ஆர்.பி.ஐ., ஒரு குழுவை அமைத்­தது. அதன் அறிக்­கை­யில் பல சுவா­ர­சி­யங்­கள் உள்ளன.அதில் முக்­கி­ய­மா­னது, இந்­திய குடும்­பங்­களின், 95 சத­வீத சேமிப்­பு­கள், வீடு, மனை, தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றி­லும் வாக­னங்­க­ளி­லும் முத­லீடு செய்­யப்­ப­டு­கின்றன. நிதி முத­லீ­டு­கள் என்­பது வெறும், 5 சத­வீ­தம். இதில் தான் மியூச்­சு­வல் பண்­டு­கள், நிரந்­தர சேமிப்­பு­கள், காப்­பீடு, தபால் ஆபீஸ் சேமிப்பு எல்­லாம் அடங்­கும்.
இதே­போல், இந்­திய குடும்­பங்­கள் வைத்­தி­ருக்­கும் சொத்­து­கள் பற்­றிய கணக்­கும் இருக்­கிறது. மொத்த சொத்­தில், 77 சத­வீ­தம், வீடா­கவோ, மனை­யா­கவோ இருக்க, 11 சத­வீ­தம் தங்­க­மா­க­வும், 7 சத­வீ­தம் வாக­னங்­க­ளா­க­வும் இருக்­கின்றன. மிச்­ச­முள்ள, 5 சத­வீத சொத்து தான் சேமிப்­புப் பத்­தி­ரங்­கள், நிதி முத­லீ­டு­கள் போன்­றவை.
இந்­தப் பின்­ன­ணி­யில் பார்க்­கும்­போது, மக்­கள் தங்­கள் சேமிப்­பு­களை பழைய, தெரிந்த, நம்­பிக்­கை­யான முத­லீ­டு­க­ளான அசையா சொத்­து­க­ளி­லும், நகை­க­ளி­லும் முத­லீடு செய்­யத் துவங்­கி­யுள்­ள­னர் என்­பது தெளிவு.தங்க இறக்­கு­மதி மதிப்­பீ­டும் இதைத்­தான் சுட்­டு­கிறது. 2016ம் ஆண்­டில், 558 டன் தங்­கம் இறக்­கு­மதி செய்­யப்­பட, 2017ம் ஆண்­டிலோ, 888 டன் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. 2018ல் இன்­னும், 10 சத­வீ­தம் கூடு­த­லாக இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­லாம் என்­பது இத்­துறை நிபு­ணர்­கள் கருத்து.
ஆக, மக்­கள் சேமிக்­கா­மல் இல்லை. சேமிக்­கின்­ற­னர்; அதை நில­மா­க­வும், கட்­ட­டங்­க­ளா­க­வும் ஆப­ர­ணங்­க­ளா­க­வும் சேமிக்­கின்­ற­னர். நிரந்­தர சேமிப்­பு­களை விட, இத்­த­கைய முத­லீ­டு­களே இவர்­களை ஈர்க்­கின்றன. இங்கே தான் பிரச்­னையே.
முட்­டுக்­கட்டை
வீடு­களும், மனை­களும், நகை­களும் வாங்­கு­வ­தற்கு பெரிய நிதித்­துறை அறிவு தேவையில்லை. ஆனால், நவீன நிதிக் கரு­வி­க­ளான வங்கி சேமிப்­பு­கள், மியூச்­சு­வல் பண்­டு­கள், பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்­றில் முத­லீடு செய்ய ஓர­ள­வுக்கு புரி­த­லும் முயற்­சி­யும் வேண்­டும்.ரியல் எஸ்­டேட்­டும், தங்­க­மும் தான், இந்­திய வளர்ச்­சிக்­கான உண்­மை­யான முட்­டுக்­கட்­டை­கள். இவற்­றி­லி­ருந்து மக்­கள் விலகி, நவீன நிதிக் கரு­வி­களில் முத­லீடு செய்­யத் துவங்­கி­னால், வங்­கி­களின் கஜா­னாக்­கள் நிரம்­பும்.
அதன்­மூ­லம், தொழில் துறைக்கு கடன் கொடுப்­பது அதி­க­ரிக்­கும். தொழில் வள­ரும். வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும். நிதிச் சுழற்சி அதி­க­ரிக்­கும்; சுபிட்­சம் ஏற்­படும்.ஆனால், இப்­போது நடப்­பதோ, இதற்கு நேர் எதி­ரான பாது­காப்­பு­வா­தம். வங்­கிச் சேமிப்பு விகி­தம் குறை­வது என்­பது, ‘பாது­காப்­பு­வாத’த்தால் ஏற்­படும் பாதிப்பு. முற்­றி­லும் மாற்றி யோசித்­தா­லன்றி, இந்­தச் சிக்­க­லில் இருந்து வெளி­வ­ர­மு­டி­யாது.
ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)