‘டிவி, ஏசி, ரெப்ரிஜரேட்டர்’விலை 10 சதவீதம் உயருகிறது‘டிவி, ஏசி, ரெப்ரிஜரேட்டர்’விலை 10 சதவீதம் உயருகிறது ... இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதமாக உயரும்: ஐ.நா., கணிப்பு இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதமாக உயரும்: ஐ.நா., கணிப்பு ...
உலகளவில் இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம்:2030ல் 24.50 கோடி பேர் உபரியாக இருப்பர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2018
02:51

புதுடில்லி:‘இந்­தி­யா­வில், 2030ம் ஆண்­டில், 24.50 கோடி திறன் வல்­லு­னர்­கள் கூடு­த­லாக இருப்­பர்’ என, ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ஆலோ­சனை நிறு­வ­ன­மான கோர்ன் பெரி, உல­க­ள­வில், பல்­வேறு துறை­க­ளுக்கு தேவைப்­படும் திறன் வல்­லு­னர்­கள் குறித்து, ஆய்வு செய்து வெளி­யிட்­டுள்ள அறிக்கை:அமெ­ரிக்கா, சீனா உட்­பட, வளர்ந்த மற்­றும் வளர்ந்து வரும், 20 நாடு­களில், 2030ல், 8.52 கோடி திறன் வல்­லு­னர்­க­ளுக்கு பற்­றாக்­குறை இருக்­கும்.ஆனால், இதே காலத்­தில், இந்­தி­யா­வில் மட்­டும், குறிப்­பாக, நிதி மற்­றும் வர்த்­த­கச் சேவை­களில், தேவையை விட, கூடு­த­லாக, 24 கோடி திற­மை­யான ஊழி­யர்­கள் இருப்­பர்.இதற்கு, மத்­திய அர­சின், பல்­வேறு திறன் பயிற்சி திட்­டங்­கள் துணை புரி­யும். வேலை செய்­யும் திறன் உள்­ளோரை அதி­க­மாக கொண்­டுள்ள நாடாக, இந்­தியா விளங்­கு­கிறது. அத­னால், இங்கு பணித் திறன் கொண்­டோர் அதி­கம் இருப்­பர்.
அடுத்த, 12 ஆண்­டு­களில், குறிப்­பாக, நிதிச் சேவை­கள் துறை­யில், 11 லட்­சம்; தொழில்­நுட்­பம், ஊட­கம், தொலை­தொ­டர்பு துறை­யில், 13 லட்­சம்; தயா­ரிப்பு துறை­யில், 24.4 லட்­சம் திறன் வல்­லு­னர்­கள் உப­ரி­யாக இருப்­பர்.
இந்­தியா தவிர, இதர நாடு­கள் அனைத்­தி­லும், 2030ல், தொழில்­நுட்­பம், ஊட­கம், தொலை­தொ­டர்பு துறை­யில், வல்­லு­னர்­க­ளுக்கு பற்­றாக்­குறை இருக்­கும்.இந்­தி­யா­வில், தேவையை விட, திறன் வல்­லு­னர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் என்­ப­தால், வேலை­வாய்ப்பு மற்­றும் வேலை உரு­வாக்­கம் என்ற இரண்டு சவால்­களை, மத்­திய அரசு சந்­திக்க நேரி­டும்.இந்த சவால்­களை எதிர்­கொள்ள, மத்­திய அரசு ஏற்­க­னவே, ‘திறன் இந்­தியா’ உட்­பட, பல்­வேறு திறன் பயிற்சி மற்­றும் ஊக்­கு­விப்பு திட்­டங்­களை செயல்ப­டுத்தி வரு­கிறது. இத்­த­கைய திட்­டங்­க­ளால் பெறும் பயன்­களை ஆய்வு செய்து, அதற்­கேற்ப நட­வ­டிக்கை எடுக்­கத் தவ­றி­னால், வேலை­யில்லா திண்­டாட்­டப் பிரச்­னையை இந்­தியா எதிர்­கொள்­ளும் நிலை ஏற்­படும்.
திற­மை­யான தொழி­லா­ளர்­க­ளுக்கு ஏற்­பட உள்ள தட்­டுப்­பாடு, பல துறை­களில் சர்­வ­தேச மையங்­க­ளாக விளங்­கும் நாடு­களில் குறிப்­பி­டத்­தக்க தாக்­கத்தை உண்­டாக்­கும்.தற்­போது, சர்­வ­தேச நிதிச் சந்­தை­யாக, பிரிட்­டன் தலை­ந­கர் லண்­டன் விளங்­கு­கிறது. தொழில்­நுட்­பத்­தின் தலை­மை­யி­ட­மாக, அமெ­ரிக்கா பெய­ரெ­டுத்­துள்­ளது. தயா­ரிப்பு சந்தை என்ற சிறப்பை சீனா பெற்­றுள்­ளது.திறன் வல்­லு­னர்­க­ளின் பற்­றாக்­கு­றை­யால், இதே சிறப்­பு­களை இந்­நா­டு­கள் தக்க வைத்­துக் கொள்­ளுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. ஏனெ­னில், வரும் ஆண்­டு­களில், நிறு­வ­னங்­கள், அவற்­றின் தலைமை செயல்­பா­டு­களை, அதிக அள­வில் திற­மை­யான வல்­லு­னர்­கள் உள்ள இடங்­க­ளுக்கு மாற்­றும் நிலை ஏற்­ப­ட­லாம்.இது, இந்­தி­யா­வின் சிறப்­பான வளர்ச்­சிக்கு சாத­க­மான அம்­ச­மாக இருக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
20 நாடுகள்
இந்­தியா, அமெ­ரிக்கா, பிரே­சில், மெக்­சிகோ, பிரான்ஸ், ஜெர்­மனி, சீனா, நெதர்­லாந்து, ரஷ்யா, சவுதி அரே­பியா, தென்­னாப்­ரிக்கா, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ், பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா, ஹாங்­காங், இந்­தோ­னே­ஷியா, ஜப்­பான், மலே­ஷியா, சிங்­கப்­பூர், தாய்­லாந்து ஆகிய, 20 நாடு­களில், திறன் வல்­லு­னர்­கள் குறித்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)