முட்டை உற்பத்தி சரிவு  முட்டை உற்பத்தி சரிவு ... கூட்டுறவு தொழிற்சாலைகளில், ‘கோட்டா’ முறை அமல்:நாளொன்றுக்கு 3 லட்சம் கிலோ பசுந்தேயிலை வீண் கூட்டுறவு தொழிற்சாலைகளில், ‘கோட்டா’ முறை அமல்:நாளொன்றுக்கு 3 லட்சம் ... ...
மொத்த விலை பணவீக்கம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
02:45

புதுடில்லி:நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், நான்கு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, ஏப்­ர­லில், 3.18 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.இது, மார்ச்­சில், 2.47 சத­வீ­த­மாக இருந்­தது. இதுவே கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 3.85 சத­வீ­த­மாக இருந்­தது.எரி­பொ­ருள், மின்­சா­ரம் ஆகி­ய­வற்­றின் விலை உயர்­வால், நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ளது.
ஏப்­ர­லில், காய்­க­றி­கள் விலை, 0.89 சத­வீ­தம் குறைந்து காணப்­பட்­டது. இது, மார்ச்­சில், 2.7 சத­வீ­தம் என்ற அள­வில் மிக­வும் குறை­வாக இருந்­தது. கடந்த ஆண்டு ஏப்­ர­லில், இந்த சரிவு, 0.81 சத­வீத அள­விற்கு இருந்­தது.ஏப்­ர­லில், உணவு சாரா பொருட்­க­ளின் மொத்த விலை பண­வீக்­கம், 1.81 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. இது, மார்ச்­சில், மைனஸ், 1.39 சத­வீ­தம்; கடந்த ஆண்டு ஏப்­ர­லில், மைனஸ், 0.08 சத­வீ­தம் என்ற அள­வில் காணப்­பட்­டது.பருப்பு வகை­க­ளின் மொத்த விற்­பனை விலை, 22.46 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, மார்ச்­சில், மைனஸ், 20.58 சத­வீ­தம்; 2017, ஏப்­ர­லில், மைனஸ், 13.64 சத­வீ­தம் என்ற அள­வில் மிக­வும் சரி­வ­டைந்­து இ­ருந்­தது.
மொத்த விலை பண­வீக்க குறி­யீட்டை கணக்­கி­டு­வ­தில், எரி­பொ­ருள் மற்­றும் மின்­சா­ரம் ஆகி­ய­வற்­றின் பங்கு, 13.15 சத­வீ­த­மாக உள்­ளது.கடந்த ஏப்­ர­லில், எரி­பொ­ருள், மின்­சா­ரம் ஆகி­ய­வற்­றின் மொத்த விலை பண­வீக்­கம், 7.85 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, மார்ச்­சில், 4.70 சத­வீ­த­மாக இருந்­தது. கடந்த ஆண்டு ஏப்­ர­லில், 17.11 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.மொத்த விலை பண­வீக்க குறி­யீட்­டில், ஐந்­தில் ஒரு பங்கை, உண­வுப் பொருட்­கள் உள்­ளிட்­டவை அடங்­கிய, முதன்மை பொருட்­கள் பிரிவு கொண்­டுள்­ளது. இப்­பி­ரி­வின் மொத்த விலை பண­வீக்­கம், 1.41 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, மார்ச்­சில், 0.24 சத­வீ­தம்; 2017, ஏப்­ர­லில், 1.03 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)