கூட்டுறவு தொழிற்சாலைகளில், ‘கோட்டா’ முறை அமல்:நாளொன்றுக்கு 3 லட்சம் கிலோ பசுந்தேயிலை வீண்கூட்டுறவு தொழிற்சாலைகளில், ‘கோட்டா’ முறை அமல்:நாளொன்றுக்கு 3 லட்சம் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிவு ...
மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீத வளர்ச்சி:'நோமுரா' நிறுவனம் ஆய்வறிக்கை வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2018
02:49

புதுடில்லி:'நாட்டின் தொழில் துறை உற்பத்தி சற்று மேம்பட்டுள்ளதால், இந்தாண்டு ஜன., - மார்ச் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.7 சதவீதமாக வளர்ச்சி கண்டிருக்கும்' என, ஜப்பானைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, 'நோமுரா' தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவில், முதலீடுகள் பெருகி வருகின்றன. மக்களின் தேவையும், நுகர்வும், அதிகரித்துள்ளது. இந்த முக்கிய அம்சங்கள் காரணமாக, இந்திய பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருவது தெரிகிறது.குறிப்பாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறுகிய காலத்திற்கு வளர்ச்சி சாத்தியம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, இறுக்கமான நிதிச்சூழல் போன்றவற்றால், வளர்ச்சி வேகம் சற்று குறையவும் வாய்ப்பு உள்ளது.தொழில்: இந்தாண்டு, ஜன., - மார்ச் வரையிலான முதல் காலாண்டில், தொழில் துறை உற்பத்தி, சராசரி வளர்ச்சியை கண்டுள்ளது. அதனால், இத்துறை சார்ந்த நிறுவனங்களின், ஒட்டுமொத்த தொழில் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.நடப்பாண்டின், முதல் காலாண்டில், தொழில் துறையின் சராசரி வளர்ச்சி, 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, முந்தைய, 2017, அக்., - டிசம்பர் காலாண்டில், 5.9 சதவீதமாக இருந்தது.
மார்ச்சில், தயாரிப்பு துறை வளர்ச்சி குறைந்துள்ள போதிலும், காலாண்டு அடிப்படையில், தொழில் துறை உற்பத்தி, 0.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.7 சதவீதமாக உயர்ந்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.


இந்த வளர்ச்சி, கடந்த ஆண்டு, அக்., - டிசம்பர் காலாண்டில், 7.2 சதவீதமாக இருந்தது. ஆக, கடந்த ஆண்டின், நான்காவது காலாண்டை விட, நடப்பாண்டின், முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.5 சதவீதம் அதிகரித்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுரங்கம் - மின்சாரம்

மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, 2017 -- 18ம் நிதியாண்டில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 4.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும், இது, 2016 -- 17ம் நிதியாண்டின், 4.6 சதவீத வளர்ச்சியை ஒப்பிடும்போது, 0.3 சதவீதம் குறைவு.இந்தாண்டு மார்ச்சில், தொழில்துறை உற்பத்தி, 4.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, ஜனவரி, பிப்ரவரியில், முறையே, 7.4 சதவீதம் மற்றும், 7.1 சதவீதமாக இருந்தது.

கடந்த, 2017 அக்டோபரில் தொழில் துறை உற்பத்தி, 2.2 சதவீதமாக மிகவும் குறைந்து காணப்பட்டது.பொறியியல் சாதனங்கள் உற்பத்தி குறைவு; சுரங்க நடவடிக்கைகளில் ஏற்பட்ட தொய்வு; மின் உற்பத்தியில் உண்டான சுணக்கம் போன்றவற்றால், இந்தாண்டு மார்ச்சில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (நவ.,15) ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 ம், ... மேலும்
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் ... மேலும்
business news
ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில், முதல் முறையாக நறுமண பொருட்கள் விற்பனை ... மேலும்
business news
வாஷிங்டன்:‘‘இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள்,’’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழ்ந்துள்ளார்.அவர் ... மேலும்
business news
புதுடில்லி:மத்திய அரசு – ரிசர்வ் வங்கி இடையிலான மோதலுக்கு முடிவு காணப்பட்டு, முக்கிய பிரச்னைகளில் சுமுக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)