எரிபொருள் விலை உயர்வால் மாற்றம் : சாண எரிவாயு திட்டத்திற்கு வரவேற்பு எரிபொருள் விலை உயர்வால் மாற்றம் : சாண எரிவாயு திட்டத்திற்கு வரவேற்பு ... ரூபா­யை காப்­பாற்­று­வது எப்­படி? ரூபா­யை காப்­பாற்­று­வது எப்­படி? ...
ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2018
02:18

வாஷிங்டன்: இந்­தியா – அமெ­ரிக்கா இடையே, அதி­ந­வீன ராணுவ தள­வா­டங்­கள் தயா­ரிப்பு, கொள்­மு­தல் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான, அடிப்­படை ஒப்­பந்­தங்­கள், விரை­வில் கையெ­ழுத்­தாக உள்ளன. இது தொடர்­பாக, அமெ­ரிக்க அர­சி­யல் பாது­காப்பு விவ­கா­ரங்­கள் துறை­யின் முதன்மை துணை அமைச்­சர் டினா கைட­நவ், அடுத்த வாரம், இந்­தி­யா­வுக்கு வருகை தர உள்­ளார்.
டிரம்ப் : இந்த பய­ணம் குறித்து, அவர், வாஷிங்­ட­னில், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது:அதி­ந­வீன ராணுவ தள­வா­டங்­கள் தயா­ரிப்பு, கொள்­மு­தல் உள்­ளிட்­டவை தொடர்­பாக, இந்­தியா – அமெ­ரிக்கா உடன், பேச்சு நடை­பெற்று வரு­கிறது.இது தொடர்­பான அடிப்­படை ஒப்­பந்­தங்­கள் அடுத்த வாரம் கையெ­ழுத்­தாக உள்ளன.இந்த ஒப்­பந்­தங்­கள், பாது­காப்பு துறை­யில், இரு நாடு­களுக்கு இடை­யி­லான பரஸ்­பர வர்த்­த­கத்தை, மேலும் மேம்­ப­டுத்த உத­வும். ஒப்­பந்த ஷரத்­து­களை முடிவு செய்­வ­தற்­கான, முழு உரி­மை­யும் இந்­தி­யா­வுக்கு உள்­ளது. இரு­த­ரப்பு பேச்­சில், நல்ல புரி­தல் ஏற்­பட்­டுள்­ளது. ‘இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம்’ திட்­டத்­தின் கீழ், ‘எப் – 16’ ரக போர் விமான தயா­ரிப்பு தொழிற்­சா­லையை, இந்­தி­யா­வில் அமைக்க, லாக்­ஹீட் நிறு­வ­னம் விருப்­பம் தெரி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து, தயா­ரிப்பு, மேம்­பாடு உள்­ளிட்ட பிரி­வு­களில், இந்­தி­யா­வும், அமெ­ரிக்­கா­வும் இணைந்து செயல்­ப­டு­வது தொடர்­பாக பேச்சு நடை­பெற்று வரு­கிறது. இது தொடர்­பான நல்ல முடி­வு­களை, இந்­தியா விரை­வில் அறி­விக்­கும்.கடந்த 10 ஆண்­டு­க­ளாக, பாது­காப்பு துறை­யில், இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான உறவு மேம்­பட்டு வந்­துள்­ளது. இது, தற்­போ­தைய அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப் காலத்­தில், மேலும் வலுப்­படும்.அமெ­ரிக்கா, மிக முக்­கிய பங்­கு­தா­ர­ராக, இந்­தி­யாவை கரு­து­கிறது. தற்­போது, இரு நாடு­க­ளுக்கு உள்ள உறவு மிகச் சிறப்­பா­க­வும், அதிக உற்­பத்தி சார்ந்­த­தா­க­வும், பூரண திருப்­தி­யு­டை­ய­தாகவும் இருக்­கிறது.சமீ­பத்­தில் இந்­தி­யா­வுக்கு சென்ற, அமெ­ரிக்க குழு, ராணுவ தள­வா­டங்­கள் தயா­ரிப்பு உள்­ளிட்­டவை தொடர்­பாக, பாது­காப்பு அமைச்­ச­கத்­து­டன் பேச்சு நடத்­தி­யது.
தொழில்நுட்பம் : இந்­தி­யா­விற்கு என்ன தேவை என்­ப­தும், அதற்கு அமெ­ரிக்­கா­வால் என்ன செய்ய முடி­யும் என்­ப­தும்­தான், இந்த பேச்­சின் அடிப்­படை சாராம்­ச­மாக இருந்­தது.இந்­தி­யா­விற்கு ‘டிரோன்’ உட்­பட, எத்­த­கைய சாத­னங்­கள், தொழில்­நுட்ப ஆலோ­ச­னை­கள் தேவை என்­பதை துல்­லி­ய­மாக அறிந்து, அவற்றை எவ்­வாறு வழங்­க­லாம் என்­பது குறித்து, முடிவு எடுக்­கப்­படும். அதன் அடிப்­ப­டை­யில் தான், இரு நாடு­கள் இடையே, ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தாக உள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.
பூஜ்யத்தில் இருந்து...: இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான ராணுவ தள­வாட வர்த்­த­கம், 10 ஆண்­டு­க­ளாக அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த, 2008ல், பாது­காப்பு துறை­யில், இரு நாடு­களின் பரஸ்­பர வர்த்­த­கம் பூஜ்­ய­மாக இருந்­தது. இது, தற்­போது, 1,500 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.இது, ரூபாய் மதிப்­பில், 97,500 கோடி­யா­கும். அடுத்த, 10 ஆண்­டு­களில், இந்­தியா, ராணு­வத்தை அதி­ந­வீ­ன­மாக்க திட்­ட­மிட்­டுள்­ளது. இத­னால், பாது­காப்பு துறை­யில், இந்­தியா – அமெ­ரிக்கா பரஸ்­பர வர்த்­த­கம், மேலும் அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)