‘இ – வே பில்’ இல்லாவிட்டால் அபராதம்‘இ – வே பில்’ இல்லாவிட்டால் அபராதம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ...
ஆட்டோமேஷன்’ இரு மடங்கு உயரும்; பணியிடங்களில் ரோபோ பயன்பாடு பெருகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2018
00:26

புதுடில்லி : பணி­யி­டங்­களில் ‘ஆட்­டோ­மே­ஷன்’ தொழில்­நுட்ப பயன்­பாடு, அடுத்த மூன்று ஆண்­டு­களில், இரு மடங்கு உய­ரும் என, ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

பிரிட்­ட­னைச் சேர்ந்த, வில்­லிஸ் டவர்ஸ் வாட்­சன் நிறு­வ­னம், நிதி ஆலோ­சனை, காப்­பீட்டு தரகு சேவை ஆகி­ய­வற்றை வழங்கி வரு­கிறது. இந்­நி­று­வ­னம், ‘ஆட்­டோ­மே­ஷன்’ எனப்­படும் பணி­யா­ளர் தய­வின்றி, ஒரு செயலை, தன்­னிச்­சை­யாக செய்து முடிக்­கும் தொழில்­நுட்­பங்­களின் பயன்­பாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

மாற்றம்:
அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: இந்­திய நிறு­வ­னங்­களில், அடுத்த மூன்று ஆண்­டு­களில், ரோபோ, செயற்கை நுண்­ண­றிவு சாப்ட்­வேர் போன்­றவை சார்ந்த, ‘ஆட்­டோ­மே­ஷன்’ பயன்­பாடு, இரு மடங்கு அதி­க­ரிக்­கும். ஆனால், ஒரு சில நிறு­வ­னங்­கள் தான், அமைப்பு ரீதி­யில் நடை­பெ­றப் போகும் இந்த மாற்­றத்தை சந்­திக்க தயா­ராக உள்ளன.

தற்­போது, 14 சத­வீத பணி­யி­டங்­களில் தான், ஆட்­டோ­மே­ஷன் பயன்­பாடு உள்­ளது. இது, அடுத்த மூன்று ஆண்­டு­களில், 27 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும்.மனி­தர்­கள் செய்­யும் பணியை, இயந்­தி­ரங்­களும், சாப்ட்­வேர்­களும் செய்­யும்­பட்­சத்­தில், உற்­பத்­திச் செல­வி­னம் குறை­யும் என்ற பொது­வான மதிப்­பீடு உள்­ளது. இதை, ஆய்­வில் பங்­கேற்ற, ஐம்­பது சத­வீத நிறு­வ­னங்­கள் மறுத்­துள்ளன. ஆட்­டோ­மே­ஷன், மனித செயல்­பா­டு­களை ஒருங்­கி­ணைக்­கும். புதிய பணி­களை உரு­வாக்­கும் என, அவை தெரி­வித்­துள்ளன.

சவால்:
ஆட்­டோ­மே­ஷன் கார­ண­மாக மாறும் பணிச்­சூ­ழல், நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய சவால்­களை உரு­வாக்­கும். அவை, பணி­யா­ளர்­கள் தொடர்­பான தேவை­க­ளுக்­கும், பின்­பற்ற உள்ள தொழில்­நுட்­பங்­க­ளுக்­கும் ஏற்ப, நிறு­வ­னங்­கள் தயா­ராக உள்­ள­னவா என்­பதை சோதிக்க கூடி­ய­வை­யாக இருக்­கும். இதன் மூலம், அமைப்பு ரீதி­யான கட்­ட­மைப்­பிற்கு நிறு­வ­னங்­கள் மாறும்.

சேவை­கள் துறை­யில் தான், அதி­க­பட்ச ஆட்­டோ­மே­ஷன் பயன்­பாடு இருக்­கும். இத்­து­றை­யில் தான் மிக அதி­க­மாக, குறிப்­பிட்ட திறன் சார்ந்த பணி­கள், அதிக அள­வில் வெளி­யா­ரி­டம் ஒப்­ப­டைத்து பெற்­றுக் கொள்­ளப்­ப­டு­கின்றன. அது­போல, பணி­யா­ளர் தய­வின்றி, ரோபோ செயல்­பா­டு­கள் மூலம், பணி­களை முடிப்­ப­திலும், சேவை­கள் துறை தான், முத­லி­டத்­தில் உள்­ளது.

அடுத்த மூன்று ஆண்­டு­களில், ஆட்­டோ­மே­ஷன் பயன்­பாடு கார­ண­மாக, குறைந்த அள­விற்கே முழு­நேர பணி­யா­ளர்­கள் தேவைப்­ப­டு­வர் என, 55 சத­வீத நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்ளன. அது­போல, குழு தலை­வர்­கள், மேலா­ளர்­கள் உட்­பட, ஊழி­யர்­களின் பணித் திற­னில் ஏற்­ப­டக் கூடிய மாற்­றங்­களை, 54 சத­வீத நிறு­வ­னங்­கள் உணர்ந்­துள்ளன. ஆனால், அத்­த­கைய மாற்­றத்தை எதிர்­கொள்ள, 24 சத­வீத நிறு­வ­னங்­கள் மட்­டுமே தயா­ராக உள்ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

பொருட்­களின் தரம் மற்­றும் உற்­பத்தி மேம்­பட, ஆட்­டோ­மே­ஷன் பயன்­பாடு அவ­சி­யம் என்­பதை, தயா­ரிப்பு துறை­யைச் சேர்ந்த, 54 சத­வீத நிறு­வ­னங்­கள் உணர்ந்­துள்ளன. ஆனால், அதற்­கேற்ப திட்­ட­மிட்டு, பணி­யி­டத்­தில், ஆட்­டோ­மே­ஷன் பயன்­பாட்டை புகுத்­து­வ­தில், மூன்­றில் ஒரு நிறு­வ­னம் மட்­டுமே தயா­ராக உள்­ளது
-வில்லிஸ் டவர்ஸ், வாட்சன் ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)