10,700 புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிப்டி10,700 புள்ளிகளுக்கு கீழ் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிப்டி ... முத­லீட்­டில் வேகம் விவே­க­மல்ல! முத­லீட்­டில் வேகம் விவே­க­மல்ல! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘ஏர் – இந்தியா’ விற்பனைக்கு ஆனந்த் மகிந்திரா 5 யோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2018
00:27

புதுடில்லி:‘ஏர் – இந்­தியா’ நிறு­வ­னத்தை விற்­பனை செய்ய, மகிந்­திரா குழு­மத்­தின் தலை­வர் ஆனந்த் மகிந்­திரா, முத்­தான ஐந்து யோச­னை­களை, மத்­திய அரசுக்கு தெரி­வித்­துள்­ளார்.பொதுத் துறை­யைச் சேர்ந்த ஏர் – இந்­தியா நிறு­வ­னம், 56 ஆயி­ரம் கோடி ரூபாய் கட­னில் மூழ்­கி­யுள்­ளது. அத­னால், இந்­நி­று­வ­னத்­தின், 76 சத­வீத பங்­கு­களை விற்க, மத்­திய அரசு முடிவு செய்­தது.
இதற்­கான ஏலத்­தில் பங்­கேற்க, மே, 14 இறுதி நாள் என, தெரி­விக்­கப்­பட்­டது. அது­வரை எந்த நிறு­வ­ன­மும் விண்­ணப்­பிக்­கா­த­தால், கெடு நாள், மே, 31 வரை நீட்­டிக்­கப்­பட்­டது. ஆனால், அன்­றும், ஏலத்­தில் எந்த நிறு­வ­ன­மும் பங்கேற்­க­வில்லை.இது, மத்­திய அர­சுக்கு பெரும் அதிர்ச்­சியை ஏற்­படுத்­தி­யுள்­ளது.
இந்­நி­லை­யில், மகிந்­திரா குழும தலை­வர் ஆனந்த் மகிந்­திரா, ‘டுவிட்டர்’ தளத்­தில் கூறி­யுள்­ள­தா­வது:ஏர் – இந்­தியா விவ­காரம், தேசத்­தின் கவு­ர­வப் பிரச்­னை­யாக மாறி­யுள்­ளது. இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்­திக் கொள்ள, இதுவே சரி­யான தரு­ணம். ஏர் – இந்­தி­யாவை, இழப்­பில் இருந்து மீட்க உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இதற்கு பர­வ­லான ஆத­ர­வும் உள்­ளது. இதை, மத்­திய அர­சின் தற்­கொலை முடி­வாக நான் கரு­த­வில்லை. அர­சி­யல் ரீதி­யில் கிடைத்­துள்ள வாய்ப்­பாக நான் பார்க்­கி­றேன்.
ஏர் – இந்­தி­யாவை தற்­போது விற்­பதை விட, அதை பன்­ம­டங்கு லாப­மீட்­டும் நிறு­வ­ன­மாக மாற்றி விற்­பதே சிறந்த முடி­வாக இருக்­கும். அதற்கு கீழ்­கண்ட ஐந்து அம்ச திட்­டத்தை அமல்­படுத்த வேண்­டும்.* ஏர் – இந்­தியா, லாபப் பாதைக்கு திரும்­பிய பின் தான் விற்­பனை செய்­யப்­பட வேண்­டும் என்­ப­தில், மத்­திய அரசு உறு­தி­யு­டன் இருக்க வேண்­டும்* டில்லி மெட்ரோ ரயில் திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்தி, ‘மெட்ரோ மனி­தர்’ என, பெரு­மை­யு­டன் அழைக்­கப்­படும், இ.ஸ்ரீத­ரனை, ஏர் – இந்­தி­யா­வின் தலை­வர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக நிய­மிக்க வேண்­டும்* புதி­தாக நிய­மிக்­கப்­படும் தலை­வ­ருக்கு, முடி­வு­களை எடுக்க, முழு அதி­கா­ரம் வழங்க வேண்­டும்* அவர் எடுக்­கும் முடி­வு­களை, அர­சி­யல் நெருக்­க­டி­யின்றி அங்­கீ­க­ரிக்க வேண்­டும்* ஏர் – இந்­தி­யாவை துாக்கி நிறுத்த எடுக்­கும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு, தார்­மீக ஆத­ரவை நல்க வேண்டும்.இவ்­வாறு அவர் தெரிவித்­துள்­ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)