தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவைதனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் கடன் பெறும் முன் கவ­னிக்க வேண்­டி­யவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
01:30

வீட்­டுக்­கடன் பெறு­வது போலவே இன்று வாகனக் கடன் பெறு­வதும் பர­வ­லாகி இருக்­கி­றது. இதன் மூலம் வாடிக்­கை­யா­ளர்கள் சொந்த கார் கனவை நிறை­வேற்­றிக் ­கொள்­ளலாம். புதிய கார் அல்­லது பயன்­ப­டுத்­திய கார் வாங்க வங்­கிகள் கடன் அளிக்­கின்­றன. கார் கடன் பெறு­வ­தற்கு முன் மனதில் கொள்ள வேண்­டிய விஷ­யங்கள் இவை:
கடன் தகுதி
கார் வாங்­கு­வ­தற்­கான கட­னுக்­கான தகுதி, கட­னுக்கு விண்­ணப்­பிப்­ப­வரின் வரு­மானம் மற்றும் காரின் விலை ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்து, உபரி வரு­மானம் அதிகம் இருந்தால் அதிக அளவில் கடன் கிடைக்கும். முக­வரி சான்­றிதழ், வரு­மான சான்­றிதழ் உள்­ளிட்ட ஆவ­ணங்கள் தேவை.
வட்டி விகிதம்
வீட்­டுக்­கடன் போலவே கட­னுக்­கான வட்டி விகிதம் முக்கியம். நிலை­யான மற்றும் மாறும் வட்டி விகிதம் உண்டு. பழைய கார்­களை வாங்­கு­வ­தற்­கான கடனை விட புதிய காரை வாங்கும் கட­னுக்­கான வட்டி விகிதம் குறைவு. வட்டி விகிதம் குறை­யக்­கூ­டிய சூழலில் மாறும்வட்டி விகி­தத்தை தேர்வு செய்­யலாம்.கட­னுக்­கான காலம் அதி­க­பட்சம் 7 ஆண்­டுகள்.
செயல்­முறை கட்­டணம்
மற்ற கடன்கள் போலவே கார் கட­னுக்கும் செயல்­முறை கட்­ட­ணங்கள் போன்­றவை பொருந்தும். முன்­கூட்­டியே செலுத்தும் கட்­டணம், முன்­ன­தா­கவே கடனை அடைப்­ப­தற்கு கட்­டணம் இருக்­கலாம். இந்த கட்­ட­ணங்­களை ஒப்­பிட்ட பிறகே வங்­கியை தேர்வு செய்­வது நல்­லது.
கார் காப்­பீடு
கார் மற்றும் இரு சக்­கர வாகனம் வாங்­கு­ப­வர்கள் மூன்றாம் நபர் காப்­பீடு பெறு­வது கட்­டாயம். கார் டீல­ரிடம் காப்­பீடு தொடர்­பான வாய்ப்­புகளை கேட்டு தெரிந்து கொண்டு சிறந்­ததை தேர்வு செய்­யலாம். பூஜ்­ஜியம் தேய்­மானம் பாலிசி பெறு­வதும் எதிர்­கா­லத்தில் உதவும். விரி­வானகாப்­பீடு பாலி­சி­களை பரி­சீ­லனை செய்­வதும் பய­னுள்­ள­தாக இருக்கும்.
பிற செல­வுகள்
வாக­னங்கள் பொது­வாக ஷோரூம் விலை அடிப்­ப­டையில் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. எனவே துணைப்­பொ­ருட்கள் போன்ற­வற்­றுக்கு கூடுதல் தொகை இருக்­கலாம். சாலை வரியும் உண்டு. வரி மற்றும் காப்­பீடு வாடிக்­கை­யா­ளர்கள் பொறுப்பு. கடன் காலத்தில் வாகனம், வங்கி சார்பில் அட­மா­ன ­மாக கொள்­ளப்­படும். கடனை அடைத்த பிறகு இதை நீக்கிக் கொள்­ளலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)