கமாடிட்டி சந்தை நிலவரம்கமாடிட்டி சந்தை நிலவரம் ... பங்குச்சந்தைகள் சரிவு - சென்செக்ஸ் 140 புள்ளிகள் வீழ்ச்சி பங்குச்சந்தைகள் சரிவு - சென்செக்ஸ் 140 புள்ளிகள் வீழ்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு முத­லீட்­டில் இலக்­கு­க­ளின் பங்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
07:06

பங்கு முத­லீட்­டில் இலக்­கு­க­ளின் பங்கு என்ன? இலக்­கு­கள் அவ­சி­யம் தானா? அவற்றை எப்­படி நிர்­ண­யிப்­பது? அவற்றை அடை­யும் வரை நாம் என்­னென்ன செய்ய வேண்­டும்?

இந்த கேள்­வி­க­ளுக்கு விடை தேடா­மல், நாம் செய்­யும் பங்கு முத­லீட்­டின் பலன்­கள், சரா­ச­ரியை எட்­டு­வது கூட கடி­னம். முத­லில் இதை நாம் உணர வேண்­டும். ஆனால், நாம் பங்கு முத­லீட்டை, ஒரு பொழு­து­போக்கை போல அணு­கு­வ­தையே அதி­கம் விரும்­பு­கி­றோம். அப்­படி, அணு­கு­வ­தன் பின்­வி­ளை­வு­களை யோசிக்­கா­விட்­டால், அது தான் நாம் செய்­யும் பெரும் தவறு.

தேவை­யான தெளிவு :
நம் முழு கவ­ன­மும் திசை திரும்­பா­மல் நிலைக்க, தெளி­வான இலக்­கு­கள் உத­வு­கின்­றன. அந்த கவ­னம், நம் முடி­வு­க­ளின் தன்­மை­யை­யும், தரத்­தை­யும் உயர்த்­தக் கூடி­யவை. நம் இலக்கை உணர்ந்து, அதை கவ­னத்­தில் கொண்டு எடுக்­கும் முடி­வு­கள், இலக்­கு­க­ளின் பலன்­களை எளி­தாக அடை­யும் வலிமை கொண்­ட­வை­யாக அமை­யும். இலக்­கு­கள் சார்ந்த முடி­வு­க­ளுக்கு, நாம் கொடுக்­கும் முக்­கி­யத்­து­வ­மும் அதி­க­ரிக்­கும்.

முத­லீட்டு முடி­வு­கள், தெளி­வான நோக்­கங்­களை நிறை­வேற்­றும் வகை­யில் அமை­வது மிக அவ­சி­யம். இதற்கு தேவை­யான தெளிவு, நம்­மில் பல­ருக்கு இல்லை. அத்­த­கைய தெளிவை அடைய, நாம் போதிய முயற்சி செய்­யத் தவ­று­வதே இதற்கு கார­ணம். ஆக, இலக்­கு­கள் அவ­சி­யம் என்­ப­தில் யாருக்­கும் மாற்­றுக் கருத்து இருக்க முடி­யாது. ஆனா­லும், அவை எந்த அளவு நம் நிதி வளர்ச்­சி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பதை, நாம் இன்­னும் புரிந்து நடக்க வேண்­டும்.

வேண்டிய மாற்றங்கள் :
அந்த புரி­தல் ஏற்­ப­டுத்த வேண்­டிய மாற்­றங்­கள் குறித்து பார்ப்­போம். அடிப்­ப­டை­யில், இலக்­கு­கள் இரு வகை; குறு­கிய கால மற்­றும் நீண்ட கால இலக்­கு­கள். சில நேரங்­களில், குறு­கிய கால இலக்­கு­கள் நிறை­வே­றா­மல் போக­லாம். சந்­தை­யின் சூழல் அப்­படி அமை­யக்­கூ­டும். அப்­படி அமை­யும் போது ஏற்­படும் உணர்ச்­சி­களை, முதிர்­வோ­டும், பொறு­மை­யோ­டும் கையாள பழக வேண்­டும்.

ஆனால், இது எளி­தல்ல. எதிர்­பார்ப்­பு­க­ளால் ஏற்­படும் ஏமாற்­றத்­தின் தாக்­கம் எப்­போ­துமே அதி­க­மாக இருக்­கும். அதை நாம் நெறிப்­ப­டுத்த பழக வேண்­டி­யது அவ­சி­யம். கால­தா­ம­தங்­களை புரிந்து கொள்­வ­தும், ஆய்வு செய்து தெளிவு பெறு­வ­தும் மிக முக்­கி­யம். பொது­வாக, குறு­கிய கால இலக்­கு­களில் வரும் ஏமாற்­றத்தை சீரா­கக் கையாண்­டால், அதுவே நீண்டகால இலக்­கு­கள் நிறை­வேற வழி­வ­குக்­கும். ஆனால், இரு வகை இலக்­கு­களை அடை­வ­தி­லும் கால­தா­ம­தங்­கள் ஏற்­ப­ட­லாம். இங்கு, பொறுமை சோதிக்­கப்­படும் சூழல் ஏற்­படும். அதை அறி­வு­பூர்­வ­மா­க­வும், உணர்­வு­பூர்­வ­மா­க­வும் கையாள பழக வேண்­டும். இரண்­டும் ஒருங்கே கலந்த முத­லீட்டு முடி­வு­களை, கடி­ன­மான நேரங்­களில் எடுக்க வேண்­டிய கட்­டா­யம், ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ருக்­கும் ஏற்­படும்.

எதேச்­சை­யான நிகழ்­வு :
இது, தொடர் பயிற்­சி­யால் மட்­டுமே ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் சாத்­தி­ய­மா­கும். தொடர்ந்து இலக்­கு­களை மன­தில் கொண்டு, ஒவ்­வொரு முத­லீட்டு முடி­வை­யும் இலக்கு சார்­போடு அமைத்­துக்­கொள்ள வேண்­டும். மேலும், தொடர்ந்து அவற்றை ஆய்வு மூலம் மேற்­பார்வை செய்து, முத­லீட்டை மேலாண்மை செய்­யும் பழக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். அப்­படி செய்­யும் முத­லீட்­டா­ளர்­கள் மட்­டுமே, உறு­தி­யாக வெற்றி பெறு­வர். அப்­படி இல்­லா­மல் ஏற்­படும் முத­லீட்டு வெற்­றி­களை, எதேச்­சை­யான நிகழ்­வு­க­ளாக மட்­டுமே பார்க்க முடி­யும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)