செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது செயல்படாத 4 லட்சம் நிறுவனங்கள் பதிவு ரத்தாகிறது ... சென்னையில் சர்வதேச ‘மிஷின் டூல்ஸ்’ கண்காட்சி சென்னையில் சர்வதேச ‘மிஷின் டூல்ஸ்’ கண்காட்சி ...
வங்­கி­களை கண்­கா­ணிப்­பது யார் பொறுப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
07:10

நிதித் துறைக்­கான பார்­லி­மென்ட் நிலைக்­கு­ழு­ன் முன், ரிசர்வ் வங்கியான, ஆர்.பி.ஐ.,யின் கவர்­னர், உர்­ஜித் படேல் சமீ­பத்­தில் ஆஜ­ராகி, இந்­திய வங்­கித்துறை மற்­றும் பொரு­ளா­தா­ரம் குறித்து விளக்­கங்­கள் அளித்­த­தோடு, தன் இய­லா­மை­க­ளை­யும் தெரி­வித்­தார். அதற்கு, வங்­கித் துறை ஊழி­யர்­கள் சங்­கம் அளித்­துள்ள ஆலோ­ச­னை­கள், நம் கவ­னத்­தைக் கவர்ந்­துள்­ளன. அவை என்ன?

பல்­வேறு துறை­கள் சார்­பாக, அதன் செயல்­பா­டு­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும், கேள்வி கேட்­க­வும், பார்­லி­மென்ட் உறுப்­பி­னர்­க­ள் இடம்பெற்ற நிலைக்­கு­ழுக்­கள் உண்டு. நிதித் துறைக்­கான நிலைக்­கு­ழு­வும் அதில் ஒன்று. இதன் தலை­வர், காங்­கி­ரசைச் சேர்ந்த வீரப்ப மொய்லி. இதில், முன்­னாள் பிர­த­மர், மன்­மோ­கன் சிங்­கும் இருக்­கி­றார். பஞ்­சாப் நேஷ­னல் வங்கி உட்­பட பல பொதுத் துறை வங்­கி­களில் பெரு­கி­யுள்ள மோச­டி­க­ளின் பின்­ன­ணி­யில், ஆர்.பி.ஐ., கவர்­னர் உர்­ஜித் படேலை அழைத்து, விளக்­கம் கேட்க முனைந்­தது, நிதித் துறைக்­கான பார்­லி­மென்ட் நிலைக்­குழு.

உர்­ஜித் படேல் பல்­வேறு கேள்­வி­களை எதிர்­கொண்­ட­தாக செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. வங்கி மோச­டி­கள், பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­யின் தொடர் நிகழ்­வு­கள், வாராக்­க­டன்­கள், ஏ.டி.எம்.,மில் ஏற்­பட்ட பணத் தட்­டுப்­பாடு குறித்­தெல்­லாம் எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு, படேல் பதில் அளித்­துள்­ளார். அதில், அவர் தெரி­வித்த மூன்று கருத்­து­க்கள் விவா­திக்­கப்­பட வேண்­டி­யவை.

கூடு­தல் அதி­கா­ரம்?
முதல் கருத்து, ஆர்.பி.ஐ.,க்கு கூடு­தல் அதி­கா­ரம் வழங்க வேண்­டும் என்­பது. வாராக்­க­டன் பிரச்னை பூதா­க­ர­மாக வெளி­வந்த சம­யத்­தில் இருந்தே, படேல் கூடு­தல் அதி­கா­ரம் பற்றி பேசி வரு­கி­றார். தனி­யார் வங்­கி­க­ளைத் தம்­மால் கட்­டுப்­ப­டுத்த முடி­யும். ஆனால், பொதுத் துறை வங்­கி­க­ளைச் சேர்ந்த நிர்­வா­கக் குழு­வி­ன­ரையோ, உறுப்­பி­னர்­க­ளையோ, தலை­வ­ரையோ தம்­மால் மாற்ற முடி­யாது; அதற்­கான அதி­கா­ரம் இல்லை என்­பதே, அவ­ரது வாதம்.

இப்­படி இவர் பேச ஆரம்­பித்தே, ஓராண்­டுக்கு மேல் ஓடிப் போய்­விட்­டது. இவ­ருக்கு உள்ள அதி­கா­ரமே போதும், இனி­யும் வழங்க வேண்­டி­ய­தில்லை என்ற எதிர் வாத­மும் முன்­வைக்­கப்­ப­டு­கிறது. ஆனா­லும், கூடு­தல் அதி­கா­ரத்தை தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார் படேல். இந்த ஓராண்­டில், இவர் எந்­தெந்த அதி­கா­ரங்­கள் தமக்கு வேண்­டும் என்றோ, அத­னால், வங்கி நிர்­வா­கத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய நன்­மை­கள் என்­னென்ன என்றோ, இது­வரை வெளிப்­ப­டை­யா­கப் பேச­வில்லை. நிதி அமைச்­ச­கத்­தி­டம் எடுத்து வைத்­தாற்­போன்­றும் தெரி­ய­வில்லை.

முழு அதி­கா­ரத்­தை­யும் கவர்­ன­ருக்கே வழங்­கு­வது, எவ்­வ­ளவு துாரம் ஜன­நா­யக ரீதி­யான செயல்­பாட்­டில் சரி­யாக இருக்­கும் என்ற கேள்வி எழு­வ­தை­யும் தவிர்க்க முடி­ய­வில்லை. நிதி, ராணு­வம், நிர்­வா­கம் ஆகிய துறை­களில் வளர்ந்த நாடு­கள் கூட, அரசு தங்­கள் கட்­டுப்­பாட்டை தளர்த்­து­வ­தில்லை. ஆனா­லும், கூடு­தல் அதி­கா­ரம் கோரு­கி­றார் என்­றால், அவர், தன்னுடைய பொறுப்பை தட்­டிக்­க­ழிக்­கி­றாரா என்ற கேள்வி எழா­மல் இல்லை. இந்த வாதத்­துக்கு வலு சேர்ப்­பது போல் இருக்­கிறது அவ­ரது இரண்­டா­வது கருத்து.

அசா­தா­ரண நிலை :
பொதுத்துறை வங்­கி­க­ளுக்கு, 1.2 லட்­சம் கிளை­கள் உள்­ளன. அவை அனைத்­தை­யும் கண்­கா­ணிக்­கவோ, மேற்­பார்வையிடவோ, ஆர்.பி.ஐ., யால் முடி­யாது, சாத்­தி­ய­மில்லை என, தெரி­வித்­து உள்­ளார் படேல். பொதுத்துறை வங்கி நிர்­வா­கங்­கள் தான், கிளை­க­ளின் அன்­றா­டச் செயல்­பா­டு­க­ளுக்கு பொறுப்­பேற்க வேண்­டு­மே­யன்றி, ஆர்.பி.ஐ., அந்­தப் பணியை செய்ய இய­லாது என்­பதே படே­லின் வாதம்.

அவர் சொல்­வ­தில் உண்மை இல்­லா­மல் இல்லை. ஆர்.பி.ஐ., தலை­யிட்­டால், வங்­கி­க­ளின் சுதந்­தி­ரம் பறி­போய்­விட்­டது, முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் பறிக்­கப்­பட்­டு­விட்­டது என்ற, விமர்­ச­னங்­கள் எழ­லாம். ஆனால், இன்­றைய நிலை முற்­றி­லும், வேறொரு எல்­லை­யில் இருக்­கிறது. பெரும்­பா­லான பொதுத் துறை வங்­கி­கள், ஏதே­னும் ஒரு மோச­டி­யில் சிக்­கிக் கொண்­டி­ருப்­பது கண்­கூடு. வாராக்­க­டன்­கள் உயர்ந்து கொண்டே இருக்­கின்­றன. பெரு நிறு­வ­னங்­க­ளின் வாராக்­க­டன் தொகை­கள் தான் தற்­போ­தைக்கு வெளி­யு­ல­குக்கு தெரிய வந்­தி­ருக்­கின்­றன.

சிறு, குறு நிறு­வ­னங்­கள் செலுத்த வேண்­டிய கடன் பாக்­கி­க­ளின் விப­ரங்­கள் வெளி­வ­ரு­மா­னால், வாராக்­க­டன் பிரச்னை எதிர்­பார்த்­த­தை­விட மிக அதி­க­மாக இருக்க வாய்ப்­புண்டு என, எச்­ச­ரிக்­கும் நிதி நிபு­ணர்­கள் இருக்­கின்­ற­னர். இது, ஒரு அசா­தா­ரண நிலை; வழக்­கத்­துக்கு மாறான நிலை. அதில், கண்­கா­ணிப்­பும், மேற்­பார்­வை­யும் நிச்­ச­யம் தேவைப்­ப­டு­கிறது.

இதைத் தான் ரிசர்வ் வங்கி ஊழி­யர்­கள் சங்­கம் வலி­யு­றுத்தி இருக்­கிறது. எல்லா கிளை­க­ளை­யும், எல்லா செயல்­பா­டு­க­ளை­யும் கண்­கா­ணி­யுங்­கள், ஒழுங்­கு­ப­டுத்­துங்­கள் என்­பதே இச்­சங்­கத்­தின் கோரிக்கை.இது, அவ்­வ­ளவு சிறிய அல்­லது எளி­தான பணி அல்ல. ஆனால், இதை செய்­யா­மல் தவிர்க்க முடி­யாது. எப்­படி பள்ளி தேர்­வு­க­ளின்­போது, ‘பறக்­கும் படை’ செயல்­ப­டு­கி­றதோ, எப்­படி ரயில்­களில் பய­ணம் செய்­வோ­ரி­டையே, ‘செக்­கிங்’ நடை­பெ­று­கி­றதோ அப்­ப­டி­யா­வது நடை­பெற வேண்­டும்.

தங்­க­ளைக் கண்­கா­ணிக்­க­வும், மேல்­ந­ட­வ­டிக்கை எடுக்­க­வும் ஒரு அமைப்பு இருக்­கிறது. அது, எப்­போது வேண்­டு­மா­னா­லும் புயல் போல் வந்து தாக்­க­லாம் என்ற அச்­ச­மும், எச்­ச­ரிக்­கை­யு­ணர்­வும், பெரு­ம­ளவு தவ­று­கள் நேரா­மல் காப்­பாற்ற முடி­யும். வங்கி ஊழி­யர் ஆலோ­ச­னை­களை முற்­றி­லும் புறக்­க­ணிக்­கா­மல், உர்­ஜித் படேல் கவ­னிக்க வேண்­டும்.

சமா­தா­னமா, நம்­பிக்­கையா?
பார்­லி­மென்ட் நிலைக்­கு­ழு­வின் மூத்த உறுப்­பி­னர்­கள் கேட்ட பல கேள்­வி­க­ளுக்கு, உர்­ஜித் படேல் நேர­டி­யாக பதில் அளிக்­க­வில்லை என்ற செய்­தி­யும், ஊட­கங்­களில் கசிந்­துள்­ளது. புதிய திவால் சட்­டம் மற்­றும் வாராக்­க­டன்­களை சமா­ளிக்க எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் பலன் அளிக்க துவங்­கி­யுள்­ளன. அத­னால், விரை­வில் நிலைமை சீரா­கி­வி­டும் என்ற நம்­பிக்­கை­யையே உர்­ஜித் படேல் வழங்­கி­ய­தாக, நிலைக்­கு­ழு­வில் இருந்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் ஒரு­வர், ஊட­கத்­துக்­குத் தெரி­வித்­துள்­ளார்.

உண்­மை­யில் இத்­த­கைய, ‘சமா­தான’ வார்த்­தை­க­ளை­விட, எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளைப் பற்­றிய விரி­வான தக­வல்­களே, மக்­களை நம்­பிக்கை கொள்ள வைக்­கும். இதை ஒரு வாய்ப்­பாக பயன்­ப­டுத்தி, இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தை­யும், வங்­கி­க­ளை­யும் நிர்­வ­கிப்­ப­தில், ஆர்.பி.ஐ., மேற்­கொண்டு வரும் முயற்­சி­கள் அனைத்­தை­யும் படேல் எடுத்து வைத்­தி­ருக்­க­லாம். இனி­மேல் எந்­த­வி­த­மான மோச­டி­யும் நடை­பெ­றாது என்­ப­தற்­கான, நிர்­வாக ரீதி­யான பொறி அமைப்­பை­யும் விளக்­கி­யி­ருக்­க­லாம். வங்கி நிர்­வா­கத்­தில் தேவைப்­ப­டு­வது, வெளிப்­ப­டைத் தன்மை மட்டுமே. ஏனெ­னில், வங்­கி­கள் கையாள்­வ­தும், நிர்­வ­கிப்­ப­தும் மக்­க­ளின் பணம்.

இப்­போது வெளி­யா­கி­யுள்ள தக­வல்­கள், முழு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வ­தை­விட, ‘சமா­ளிப்­பு­களை’யே தெரி­விக்­கின்­றன. மக்­க­ளுக்கு தெளி­வான விப­ரங்­களை பகிர்ந்­து­கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பை, உர்­ஜித் படேல் தவ­ற­விட்டு விட்­டாரோ என்ற ஐயம் எழா­ம­லில்லை.

–ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)