நிதி பற்றாக்குறை இலக்கில் இருக்கும்நிதி பற்றாக்குறை இலக்கில் இருக்கும் ... ‘ஸ்டெர்லைட்’ ஆலை மூடல் எதிரொலி; சல்பியூரிக் ஆசிட் விலை கிடுகிடு ‘ஸ்டெர்லைட்’ ஆலை மூடல் எதிரொலி; சல்பியூரிக் ஆசிட் விலை கிடுகிடு ...
பணித்திறனற்ற 10 கோடி இளைஞர்களால் என்ன பயன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
06:28

ஐதராபாத் : ‘‘முந்­தைய, ஐ.மு., கூட்­டணி அரசு, நாட்­டின் கல்­வித் தரத்தை உயர்த்­து­வ­தில் தோல்வி கண்­ட­தால், 10 கோடி இளை­ஞர்­கள், பணிக்­கேற்ற திற­னற்­ற­வர்­க­ளாக உள்­ள­னர்,’’ என, மணி­பால் சர்­வ­தேச கல்வி மைய தலை­வ­ரும், ‘இன்­போ­சிஸ்’ நிறு­வன முன்­னாள் தலைமை நிதி அதி­கா­ரி­யு­மான, டி.வி.மோகன்­தாஸ் பாய் தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது: உல­கி­லேயே, வேலை செய்­யும் வய­து­டை­யோர் அதி­கம் உள்ள நாடாக, இந்­தியா விளங்­கு­கிறது. ஆனால், இந்த பெருமை நீண்ட காலத்­திற்கு நிலைக்­காது. நாட்­டில், 10 கோடிக்­கும் அதி­க­மான, 21 -– 35 வய­து­டை­யோர், பணிக்கு ஏற்ற கல்­வித் திறன் இல்­லா­மல் உள்­ள­னர். மத்­தி­யில், 2004 – -14 வரை ஆண்ட, பிர­த­மர் மன்­மோ­கன் சிங் தலை­மை­யி­லான, ஐ.மு., கூட்­டணி அரசு, கல்­வித் தரத்தை உயர்த்­து­வ­தில் தோல்வி அடைந்து விட்­டது.அந்த, 10 ஆண்டு கால ஆட்­சி­யில், கல்­விச் சீர்­தி­ருத்­தங்­கள் போது­மான அள­விற்கு மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அத­னால், தர­மற்ற கல்­வி­ய­றி­வு­டன், பணித் திற­னற்ற, 21 -– 45 வய­தில் உள்­ளோர் எண்­ணிக்கை, 2025ல், மேலும், 10 கோடி அதி­க­ரித்து, 20 கோடி­யாக உய­ரும். தற்­போது, கல்­வித் துறை­யில் நடை­பெற்று வரும் சீர்­தி­ருத்­தங்­கள், திறன் பயிற்சி திட்­டங்­கள் ஆகி­ய­வற்­றின் பலன் தெரிய, 10 ஆண்­டு­கள் ஆகும். அதற்­குள், இந்த தலை­மு­றை­யி­னர், பய­னற்ற முறை­யில் வாழ்­நாளை கடந்து சென்று விடு­வர். அவர்­கள், இத்­த­கைய இழப்பை சந்­திக்­கா­மல் இருக்க, என்ன செய்­யப் போகி­றோம் என்­பது தான், நம் முன் உள்ள கேள்வி.

மறு­பு­றம், கல்­வி­யின் தரத்தை மேம்­ப­டுத்த, தீவிர நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். கல்­விக்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கக்­கூ­டாது. கல்­வித் துறை­யில், வெளிப்­ப­டை­யான செயல்­பா­டு­களை கொண்டு வர வேண்­டும். உயர் கல்­வி­யின் தரத்தை மேம்­ப­டுத்­து­வது அவ­சி­யம். மிகச் சிறந்த எதிர்­கா­லத்தை உரு­வாக்­கு­வதே, இந்­தி­யா­வின் நோக்­க­மாக இருக்க வேண்­டும். இட­து­சா­ரி­க­ளின் தவ­றான அர­சி­யல் சித்­தாந்­தங்­கள், தவ­றான பாதை­யில் நம்மை இட்­டுச் சென்று, மிகப் பெரிய அழிவை ஏற்­ப­டுத்தி விட்­டன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

இனி எந்த காலத்திலும்...
வளர்ந்த நாடு என்ற அந்­தஸ்தை அடைய, இந்­தி­யா­வுக்கு இன்­னும், 10 ஆண்­டு­களே உள்­ளன. அதற்கு, கல்­வித் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். தவ­றி­னால், பணி செய்­யும் தகு­தி­யுள்ள வய­தி­னர் அதி­கம் உள்ள நாடு என்ற அந்­தஸ்தை இந்­தியா இழந்து விடும். அது­மட்­டு­மின்றி, இனி எந்த காலத்­தி­லும், முன்­னே­றிய நாடு­கள் பட்­டி­ய­லில் இடம் பெற முடி­யாது.
-எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)