பணித்திறனற்ற 10 கோடி இளைஞர்களால் என்ன பயன்?பணித்திறனற்ற 10 கோடி இளைஞர்களால் என்ன பயன்? ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.10 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.10 ...
‘ஸ்டெர்லைட்’ ஆலை மூடல் எதிரொலி; சல்பியூரிக் ஆசிட் விலை கிடுகிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
06:30

மேட்­டூர் : ‘ஸ்டெர்­லைட்’ ஆலை மூடப்­பட்­ட­ பிறகு, மெக்­னீ­ஷியம் சல்­பைட் உரம் தயா­ரிக்க பயன்­படும் மூலப்­பொ­ரு­ளான, ஸ்பென்ட் சல்­பி­யூ­ரிக் ஆசிட் விலை, மும்­ம­டங்கு அதி­க­ரித்­த­தால், உர உற்­பத்­தி­யா­ளர்­கள் கலக்­க­ம­டைந்­து உள்­ள­னர்.

மேட்­டூர், ‘சிட்கோ’ வளா­கத்­தில், 40க்கும் மேற்­பட்ட மெக்­னீ­ஷி­யம் சல்­பைட் உர உற்­பத்தி ஆலை­கள் உள்­ளன. உணவு பயிர்­க­ளின் பச்­சை­யத்தை அதி­க­ரிக்க பயன்­ப­டுத்­தும் அந்த உரம், இங்கு உற்­பத்தி செய்து, வட­மா­நி­லங்­க­ளுக்கு விற்­ப­னைக்கு அனுப்­பப்­ப­டு­கிறது.இது­கு­றித்து, மேட்­டூர் சிறு தொழி­ல­தி­பர்­கள் சங்­கத் தலை­வர் மாதப்­பன் கூறி­ய­தா­வது:மெக்­னீ­ஷி­யம் சல்­பைட் உரம் தயா­ரிக்க, மேக்­ன­சைட் பவு­டர், ஸ்பென்ட் சல்­பி­யூ­ரிக் ஆசிட் ஆகி­யவை முக்­கிய மூலப்­பொ­ருட்­கள்.

சேலம் மாவட்­டத்­தில், மேக்­ன­சைட் பவு­டர் உற்­பத்தி குறைந்­த­தால், தற்­போது, கர்­நா­டக மாநி­லம், மைசூரு மற்­றும் பாகிஸ்­தா­னி­லி­ருந்து, கொள்­மு­தல் செய்ய வேண்­டி­யுள்­ளது. மூன்று மாதங்­க­ளுக்கு முன், ஒரு டன் மேக்­ன­சைட் பவு­டர், 4,000 ரூபா­யாக இருந்த நிலை­யில், தற்­போது வெளி­யி­டங்­க­ளி­லி­ருந்து, 6,500 ரூபாய்க்கு கொள்­மு­தல் செய்ய வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை­யில், தாமி­ரம் உற்­பத்­தி­யின்­போது சல்­பி­யூ­ரிக் ஆசிட் கிடைக்­கும். அதை, ரசா­யன நிறு­வ­னங்­கள் கொள்­மு­தல் செய்து, அதி­லி­ருந்து, ஆசிட் சிலரி பிரித்­தெ­டுத்­தது போக, ஸ்பென்ட் சல்­பி­யூ­ரிக் ஆசிட்டை, மெக்­னீ­ஷி­யம் சல்­பைட் உரம் தயா­ரிக்க கொள்­மு­தல் செய்­வோம்.துாத்துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலை இயங்­கி­ய­போது, ஒரு டன் ஸ்பென்ட் சல்­பி­யூ­ரிக் ஆசிட், 2,500 ரூபாய்க்கு கொள்­மு­தல் செய்­தோம். தற்­போது ஆலை மூடப்­பட்­ட­தால், அதன் விலை கிடு­கி­டு­வென உயர்ந்­துள்­ளது.

சில வாரங்­க­ளாக, வட­மா­நி­லங்­க­ளி­லி­ருந்து, அந்த ஆசிட், ஒரு டன், 8,500 ரூபாய்க்கு கொள்­மு­தல் செய்­கி­றோம். ஆறு மாதங்­களில், உரம் தயா­ரிக்க, இரு மூலப்­பொ­ருட்­க­ளின் விலை, டன்­னுக்கு, 8,500 ரூபாய் அதி­க­ரித்­து­விட்­டது.இத­னால், ஒரு டன் உரம், 12 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் விற்­றால் மட்­டுமே நஷ்­டம் ஏற்­ப­டாது. ஆனால், டன், 9,500 ரூபாய்க்கு மேல் உயர்த்­தி­னால், வட­மா­நில வியா­பா­ரி­கள் கொள்­மு­தல் செய்ய தயங்­கு­கின்­ற­னர்.

இத­னால், உற்­பத்­தி­யா­ளர்­கள் கடும் இழப்பை சந்­திக்­கும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னர். இதே­நிலை நீடித்­தால், ஆலை­களை மூடும் துாரம், வெகு துாரமில்லை. விவ­சா­யத்­துக்கு பயன்­படும், மெக்­னீ­ஷி­யம் சல்­பைட் உரம் தயா­ரிப்­புக்கு, அரசு வரிச்­ச­லுகை அளிக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)