கடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும்கடன் பத்திர சந்தையின் ஏற்ற, இறக்கம் சீராகும் ... செம்பு விலை உயர்வால் கலக்கம் : பம்ப் செட் விலை 10 சதவீதம் உயரும் செம்பு விலை உயர்வால் கலக்கம் : பம்ப் செட் விலை 10 சதவீதம் உயரும் ...
சர்வதேச வர்த்தக பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு : மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2018
00:28

புதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்­துள்­ளார்.
டில்­லி­யில், ஐந்­தா­வது, இந்­திய சர்­வ­தேச குறு,சிறு,நடுத்­தர நிறு­வ­னங்­கள், ‘ஸ்டார்ட் அப்’ கண்­காட்­சியை, சுரேஷ் பிரபு துவக்கி வைத்து பேசி­ய­தா­வது:பெரிய நிறு­வ­னங்­களை போலன்றி, குறு,சிறு,நடுத்­தர நிறு­வ­னங்­கள், நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும், சம­மான வளத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.தொழில்­ம­ய­மாக்­கத்­தி­லும், புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களை மேம்­ப­டுத்­து­வ­தி­லும், ஏற்­று­ம­தி­யி­லும் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கு­கின்­றன.அத­னால், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை மேம்­ப­டுத்­து­வது முக்­கி­யம். அதற்­கா­கவே, மத்­திய அரசு பாடு­பட்டு வரு­கிறது. குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை, மேலும் ஏரா­ள­மான பொரு­ளா­தார வாய்ப்­பு­களை உரு­வாக்கி, புதிய இந்­தி­யாவை வழி நடத்­தக் கூடி­ய­தாக உரு­வெ­டுக்­கும்.
நட்பு நாடு­கள் : உல­கின் பல்­வேறு நாடு­க­ளு­டன் நமக்கு உள்ள வர்த்­தக உர­சல்­க­ளுக்கு தீர்வு காண முயற்சி நடக்­கிறது. அனைத்து நாடு­க­ளு­டன் நட்­பு­றவை தொட­ரவே நாம் விரும்­பு­கி­றோம்.அது, தெற்­கா­சி­யா­வாக இருந்­தா­லும், ஜப்­பான் உட்­பட, துாரக் கிழக்­கா­சிய நாடு­க­ளாக இருந்­தா­லும், அவை, நமக்கு நல்­ல­தொரு நட்பு நாடு­கள் தான். அது­போல, மத்­திய கிழக்கு, ஆப்­ரிக்கா, லத்­தீன் அமெ­ரிக்க நாடு­க­ளி­டத்­தி­லும், இந்­தியா நட்­பைக் கடை­பி­டிக்­கிறது.இதை, அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பா­வைச் சேர்ந்த பெரும்­பா­லான நாடு­க­ளின் வர்த்­தக அமைச்­சர்­களை, தனிப்­பட்ட முறை­யில் சந்­தித்த போதும் நான் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளேன்.எந்த நாட்­டிற்­கும் நாம் எதி­ரா­ன­வர்­கள் அல்ல. அனைத்து நாடு­க­ளு­டன் இணக்­க­மான நல்­லு­றவை பேணவே, இந்­தியா விரும்­பு­கிறது.இங்கு கூடி­யி­ருக்­கும் பன்­னாட்டு வர்த்­த­கப் பிர­தி­நி­தி­கள் அனை­வ­ருக்­கும், நட்­புக் கரம் நீட்­டு­கி­றேன். உங்­கள் உத்­தி­க­ளு­டன், எங்­க­ளோடு இணைந்து செயல்­பட வாருங்­கள். இந்த உலகை மேம்­ப­டுத்தி, பரஸ்­ப­ரம் பயன் பெறு­வோம்.எந்த வர்த்­த­கத்­தி­லும் பயன் பெற வேண்­டும் என்­பது தான், இந்­தி­யா­வின் வெளிப்­ப­டை­யான நிலைப்­பாடு; அது, பிற நாட்­டின் பாதிப்­பில் கிடைக்­கக் கூடாது என்­ப­தில், நாம் உறு­தி­யாக உள்­ளோம்.நாமும், நம்­மு­டன் வர்த்­த­கம் புரி­யும் நாடும் பயன் பெற வேண்­டும். அதற்கு, நாம் இணைந்து புதிய வர்த்­தக நெறி­களை உரு­வாக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
கனடா, பிரே­சில்அமெ­ரிக்கா, உருக்கு, அலு­மி­னி­யம் ஆகி­ய­வற்­றின் இறக்­கு­ம­திக்கு, முறையே, 25 மற்­றும்,10 சத­வீ­தம் வரி விதித்­துள்­ளது.இந்­தியா, ஆண்­டுக்கு, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கே, உருக்கு மற்­றும் அலு­மி­னி­யப் பொருட்­களை, அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­மதி செய்­வ­தால், வரி விலக்கு கோரி­யது. அதை நிரா­க­ரித்த டிரம்ப் அரசு, பிரே­சில், கன­டா­வுக்கு மட்­டும், வரி விலக்கு அளித்­துள்­ளது.இதை­ய­டுத்து, நேற்று முன்­தி­னம், மத்­திய அரசு, அமெ­ரிக்­கா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும், பாதாம், ஆப்­பிள், வால்­நட் உள்­ளிட்ட, 29 பொருட்­க­ளுக்கு, 50 சத­வீ­தம் கூடு­தல் வரி விதித்­தது. இதை நியா­யப்­ப­டுத்­தும்வகை­யில், சுரேஷ் பிரபு பேசி­யது குறிப்­பி­டத்தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)