பண பரிவர்த்தனை கொள்கை; ‘வாட்ஸ் ஆப்’ தீவிரம் பண பரிவர்த்தனை கொள்கை; ‘வாட்ஸ் ஆப்’ தீவிரம் ... நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம் நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம் ...
மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் துவக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2018
01:10

புது­டில்லி: அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவ­னம், ‘அமே­சான், வால்­மார்ட்’ நிறு­வனங்­களை பின்­பற்றி, இந்­தி­யா­வில் முதன் முத­லாக, மின்­னணு வணி­கத்­தில் கள­மிறங்க உள்­ளது.வலை­தள தேடல் பொறி நிறு­வ­ன­மான கூகுள், இயந்­திர மனி­தன், ஆளில்­லா­மல் பறக்­கும், ‘டிரோன்’, ஓட்­டு­ன­ரின்றி செல்­லும் கார் உள்­ளிட்ட, பல்­வேறு திட்­டங்­களில் முத­லீடு செய்­துள்­ளது. ஆனால், வலை­த­ளங்­களில் பொருட்­களை விற்பனை செய்­யும், மின்னணு வணி­கத்­தில் மட்­டும் இறங்க­வில்லை. இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில், ‘பிளிப்­கார்ட்’ நிறுவனம் மூலம், மின் வணி­கத்­தில் நுழைய முயன்­றது. அதற்­குள், அமெ­ரிக்­கா­வின் வால்­மார்ட் நிறுவனம் முந்­திக் கொண்டு, பிளிப்­கார்ட்­டின், 77 சத­வீத பங்­கு­களை, 1.06 லட்­சம் கோடி ரூபாய்க்கு வாங்­கு­வ­தாக அறி­வித்­தது.
கைவிட்டது : அதன் பின்­ன­ரும், பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தில், 13 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய் முத­லீடு செய்ய, கூகுள் நிறு­வ­னம் முன்­வந்­தது. ஆனால், பிளிப்­கார்ட் பங்­கு­களை, மிக அதிக மதிப்­பில் வாங்­கி­ய­தாக, வால்­மார்ட் பங்கு முத­லீட்­டா­ளர்­கள் புலம்­பு­வ­தால், முத­லீடு செய்­யும் திட்­டத்தை, கூகுள் கைவிட்­டது. இந்­நி­லை­யில், சில தினங்­க­ளுக்கு முன், சீனா­வின், ஜே.டி., டாட் காம் என்ற மின்­னணு வணிக நிறு­வ­னத்­தில், 55 கோடி டாலர் முத­லீடு செய்­வ­தாக அறி­வித்த கூகுள், இந்­தி­யா­வில் மின்­னணு வணி­கத்­தில் நேரடி­யாக கள­மி­றங்க உள்­ளது.
இது குறித்து, தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் கூறிய­தா­வது: கூகுள் நிறு­வ­னம், சர்­வ­தேச அள­வில் மின்­னணு வணி­கத்­தில் கள­மி­றங்க உள்­ளது. அதற்கு, முதன் முத­லாக, பிர­மாண்ட சந்தை வாய்ப்­புள்ள இந்­தி­யாவை தேர்வு செய்­துள்­ளது. தீபா­வளி நெருக்­கத்­தில், புதிய நிறு­வ­னம் உத­ய­மா­கும் என, தெரி­கிறது.
முன்னேற்பாடு : சில ஆண்­டு­களாகவே, மின்­னணு வணி­கத்­தில் இறங்குவ­தற்­கான முன்­னேற்பா­டு­களை கூகுள் செய்து வந்தது. குறிப்­பாக, விற்­ப­னை­யா­ளர்­களை அடை­யா­ளம் காண, 2,000க்கும் அதிகமான பயிற்­சிப் பட்டறை­களில் இணைந்து செயல்­பட்டது. இதன் விளை­வாக, 15 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட விற்­பனை­யா­ளர்­களை, நிறுவ­னம் அடையாளம் கண்­டுள்­ளது.மேலும், வர்த்­தக அமைப்பு­க­ளின், மின்னணு விற்­பனை திட்­டங்­களில் பங்கு கொண்­டது. அத்துடன், மின்­னணு வர்த்­த­கத்­தில், பணப் பரி­வர்த்­த­னை­ களை சுல­ப­மாக மேற் ­கொள்ள, ‘தேஸ்’ என்ற, ‘ஆப்’பையும் அறி­மு­கப்­படுத்­தி­யது.
வலுவான கட்டமைப்பு : ‘டாடா டிரஸ்ட்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து, ‘சாத்தி’ திட்­டத்­தின் கீழ், கிரா­மப்­புற பெண்­க­ளுக்கு இணை­யத்தை பயன்­ப­டுத்­தும் முறை குறித்து பயிற்சி அளித்து வரு­கிறது. இதில், 48 ஆயி­ரம் பெண்­கள் பயன் பெற்­றுள்­ள­னர். இத்­து­டன், 1.80 கோடி, ‘ஜி – மெயில்’ சந்­தா­தா­ரர்­கள் உள்­ளிட்ட வலு­வான கட்­ட­மைப்பு வச­தி­களும் உள்­ளன. அத­னால், மின்­னணு வணி­கத்­தில் கூகுள் இறங்­கி­னால், சுல­ப­மாக வெற்றி பெறும்.இவ்­வாறு அவர்­கள் தெரி­வித்­த­னர்.
போட்டி சுலபம் : இந்­திய மின்­னணு வணி­கத்­தின் சந்தை மதிப்பு, 2.57 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இது, 2020ல், 6 லட்­சம் கோடி ரூபா­யாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இச்­சந்­தை­யில், அமே­சான், பிளிப்­கார்ட் நிறு­வ­னங்­க­ளின் போட்­டியை, கூகுள் சுல­ப­மாக எதிர்­கொள்ள வாய்ப்பு உள்­ள­தாக, சந்­தை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)