பங்குச் சந்தை நிலவரம்பங்குச் சந்தை நிலவரம் ... சென்செக்ஸ் 219 புள்ளிகள் வீழ்ச்சி சென்செக்ஸ் 219 புள்ளிகள் வீழ்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
06:29

கச்சா எண்ணெய் :
எம்.சி.எக்ஸ்., பொருள் வணிக சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை, கடந்த வாரம், 1 பேரல், 35 ரூபாய் அதி­க­ரித்து, 4,675 ரூபாய் என்ற அள­வில் வர்த்­த­க­மா­னது. சர்­வ­தேச சந்­தை­யில், மே மாதத்­தின் இரண்டாம் வாரம் முதல் விலை சரிய ஆரம்­பித்­தது. சந்­தை­யில் நில­வும் தட்­டுப்­பாடு மற்­றும் உலக நாடு­க­ளின் இருப்பு விகி­தம் குறைந்­தது ஆகிய கார­ணங்­க­ளால், உல­கின் முன்­னணி உற்­பத்தி நாடு­க­ளான, ரஷ்­யா­வும், சவுதி அரே­பி­யா­வும் எண்­ணெய் உற்­பத்­தியை, தின­சரி, 1 மில்­லி­யன் பேரல்­கள் அள­வுக்கு உயர்த்­தப் போவ­தாக அறி­வித்­தன.

அப்­படி அறி­வித்த நாள் முதல், தொடர்ந்து நான்கு வாரங்­கள், 72.83 டாலர், 1 பேரல் என்ற நிலை­யி­லி­ருந்து, 1 பேர­லுக்கு, 10 டாலர் என குறைந்து, 63.41 டாலர் என்ற நிலையை எட்டியது. இருப்­பி­னும், டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு தொடர்ந்து ஐந்­தா­வது மாத­மாக சரிந்து, 1 டாலர், 68.70 ரூபாய் என்ற அளவுக்கு மதிப்பு சரிந்­தது.இத­னால், எம்.சி.எக்ஸ்., பொருள் வணிக சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை சரிவு, சர்­வ­தேச சந்­தை­யு­டன் ஒப்­பி­டும்­போது குறை­வா­கவே இருந்­தது.

அமெ­ரிக்­கா­வின் எண்­ணெய் உற்­பத்தி, வரலாற்று உச்­சத்தை எட்­டி­ய­தும், இவ்­விலை சரி­வுக்கு ஒரு கார­ண­மா­கும்.கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று நடை­பெற்ற, ஒபெக் நாடு­க­ளின் கூட்­டத்­தில், முன்­கூட்­டியே தீர்­மா­னித்­தி­ருந்த அள­வான, 1 மில்­லி­யன் பேரல்­கள் அள­வுக்கு உற்­பத்தி அதி­க­ரிக்­கப்­படும் என்ற அறி­விப்பை, சவுதி எண்ணெய் வள அமைச்­சர் வெளி­யிட்­டார். இருப்­பி­னும், இதில் நாடு­கள் வாரி­யாக எவ்வ­ளவு குறைக்­கப்­படும் என்ற தக­வல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. சந்­தை­யின் எதிர்­பார்ப்பு தோரா­ய­மா­கவே உற்­பத்தி அதி­க­ரிக்­கப் ­படும் என்­றி­ருந்­தது. அறி­விப்பு எதிர்­பார்த்­த­படியே இருந்­த­தால், வெள்­ளி­யன்று, 5 சத­வீ­தம் விலை அதி­க­ரித்­தது. இதை முன்­கூட்­டியே எதிர்­பார்த்து, மேற்­கூ­றிய கால­கட்­டத்­தில் விலை சரிந்­தது. எதிர்­பார்ப்­புக்கு அதி­க­மான குறைப்பு இல்­லா­த­தால், பின்­னர் விலை உயர்ந்­தது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,628 4,535 4,722 4,805என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 68.60 67.20 70.20 71.40


தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, கடந்த இரு வாரங்­க­ளாக சரிந்து, வர்த்­த­க­மா­கிறது. முந்­தைய வாரத்­தில், அமெ­ரிக்க ரிசர்வ் வங்கி தன் வட்டி விகி­தத்தை, 0.25 சத­வீ­தம் அள­வுக்கு உயர்த்­தி­யது. இதன் கார­ண­மாக, அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்ந்­தது. தங்­கம், வெள்ளி விலை சரிய ஆரம்­பித்­தது.

மேலும், இந்­திய ரூபா­யின் மதிப்பு, டால­ருக்கு எதி­ராக குறைந்து வரு­வ­தால், இந்­திய சந்­தை­யில் தங்­கம் விலை சரிவு கட்­டுக்­குள் அடங்­கி­யது. கடந்த இரு வாரத்­தில் மட்­டும், 1 அவுன்ஸ் தங்­கம், 57 டாலர் என்ற அள­வுக்கு சரிந்­தது. ஆனால், நம் நாட்டு சந்­தை­யில், 10 கிராம் விலை, 31 ஆயி­ரத்து, 424 ரூபா­யில் இருந்து, 30 ஆயி­ரத்து, 515 ரூபாய், அதா­வது கிரா­முக்கு வெறும், 90 ரூபாய் என்ற அள­வுக்கு மட்­டுமே குறைந்­துள்­ளது.

அமெ­ரிக்கா – சீன நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல் மற்­றும் அமெ­ரிக்க இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு, ஐரோப்­பிய ஒன்­றி­யம் வரி விதிப்பு, ஐரோப்­பிய இறக்குமதி கார்­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வின் வரி விதிப்பு போன்ற வர்த்­தக மோதல் மற்­றும் அசா­தா­ரண சூழல் கார­ண­மாக, தங்­கத்­தின் விலை சரிவு கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.மேலும் இது போன்ற வர்த்­தக மோதல்­களால், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் பின்­ன­டைவு ஏற்­படும் என்ற கருத்து நில­வு­கிறது.

கடந்த, 2017ம் ஆண்­டில், உல­கின் மொத்த சுரங்க உற்­பத்­தி­யா­னது, 3,247 டன் தங்­கம் ஆகும். இது, முந்­தைய ஆண்டைக் காட்­டி­லும், 5 சத­வீ­தம் குறை­வா­கும். மேலும், 2008ம் ஆண்­டுக்கு பின், இதுவே முதல் சரி­வா­கும். 2017ம் ஆண்­டின் விலை சரிவு, சுரங்க உற்­பத்தி குறைய கார­ண­மா­கி­யது. உல­கின் முன்­னணி, 10 நாடு­க­ளின் பட்­டி­ய­லில் சீனா முத­லி­டத்­தி­லும்; ஆஸ்­தி­ரே­லியா, ரஷ்யா முறையே, இரண்­டாம் மற்­றும் மூன்­றாம் இடத்­தி­லும் உள்­ளன. சீனா, ஆண்­டுக்கு, 426 டன் தங்­கத்தை உற்­பத்தி செய்து வரு­கிறது.

தங்கம்:பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,500 30,185 30,710 30,900காம்எக்ஸ் (டாலர்) 1,265 1,258 1,275 1,283

வெள்ளி:பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 39,500 38,815 39,910 40,405காம்எக்ஸ் (டாலர்) 16.30 16.12 16.50 16.65

செம்பு :
ஜூன் முதல் வாரத்­தில் விலை அதி­க­ரித்து வர்த்­த­க­மா­கிய செம்பு, பின் கடந்த இரு வாரங்­க­ளாக சரி­வில் இருந்து வரு­கிறது. கிலோ­வுக்கு, 40 ரூபாய் அள­வுக்கு சரிந்து, தற்­போது, 455 ரூபாய் என்ற நிலை­யில் வர்த்­த­கம் நடை­பெ­று­கிறது.அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்வு மற்றும் அமெ­ரிக்கா – சீனா இடை­யே­யான வர்த்­தக மோதல் போன்­றவை கார­ண­மாக, விலை வீழ்ச்­சி­ய­டைந்து வரு­கிறது. வரும் நாட்­களில், 448 ரூபாய் என்­பது நல்ல சப்­போர்ட் ஆகும். இதை கடக்­காத நிலை­யில், விலை மீண்­டும் உய­ரும். மாறாக சரிவு ஏற்­படும் எனில், 440 ரூபாய் வரை நீடிக்­கும்.
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 451.80 448.00 456.90 460.50

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)