மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் துவக்க திட்டம் மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’ : முதன் முதலாக இந்தியாவில் ... ... வங்­கி­யா­ளர்­களை பலி­கடா ஆக்­க­லாமா? வங்­கி­யா­ளர்­களை பலி­கடா ஆக்­க­லாமா? ...
நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
06:31

பங்­கு­க­ளுக்­கும், முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் தொடர்ச்­சி­யான உறவு முறை­கள் உண்டு. அந்த உறவு முறை­கள் விருப்பு, வெறுப்பு சார்ந்து வகைப்­ப­டுத்­த­லாம்.சில பங்­கு­கள் அனை­வ­ரா­லும் தொடர்ந்து விரும்பி கையி­ருப்­பில் இருப்­பவை. அவற்றை விற்­கவே கூடாது என்று அனை­வ­ரும் எண்­ணக்­கூடும். ‘புளூ­சிப் பங்கு’கள் என்று அவற்றை சந்தை வகைப்­படுத்தி கொண்­டா­டும்.

ஆனா­லும், அவை சந்­தை ­யில் தின­சரி வர்த்­த­கம் செய்­வோர் வசம் பெரும்­பா­லும் இருக்­காது. விலை ஏறிய­வு­டன், அவற்றை விற்கும் போக்கு பெரும்­பான்மை முதலீட்­டா­ளர்­க­ளி­டம் உண்டு. விலை சற்றே உய­ரும் போது, மிக சிறந்த பங்­கு­களை­யும் விற்­கும் போக்கு அனைத்து வர்த்­த­­கர்­க­ளி­டத்­தி­லும் தென்­படும். முக்­கி­ய­மாக, தின வர்த்­த­கர்­க­ளி­டம் இதை நாம் பெரி­தும் காண­லாம்.

பெரி­தும் விரும்­பும் பங்­கு­களை விற்று விட்டு, பெரும்­பான்­மை­யான முத­லீட்­டா­ளர்­கள், எந்த வகை பங்­கு­களை கையி­ருப்­பில் வைத்­தி­ருக்­கின்ற­னர்? பெரும்­பான்­மை­யான பங்கு முத­லீட்­டா­ளர்­கள், விற்க முடியாத பங்­கு­க­ளையே தொடர்ந்து கையி­ருப்­பில் வைத்­தி­ருப்­பர். அவ­ச­ரம் சார்ந்து இந்த முத­லீட்டு முடி­வு­கள் எடுக்­கப்­பட்ட­தால், விரும்பி வாங்­கிய பங்­கு­க­ளி­லும் ஒரு கால­கட்­டத்­தில் வெறுப்பு ஏற்­படும் சூழல் வர­லாம்.நிறு­வன மாற்­றங்­கள், நம் எதிர்­பார்ப்­பு­களில் இருந்து மாறு­படும் சூழ­லில், ஏமாற்­றம் ஏற்­ப­டக்­கூ­டும். அப்­படி ஏமாற்­றம் ஏற்­பட்­டும் கூட, விலைச்­ச­ரிவு கண்­ட­தால், நாம் அவற்றை விற்­காத சூழல் அமை­யக்­கூ­டும்.

நஷ்­டம் ஏற்­பட்­டால், அந்த பங்­கு­கள் மீண்­டும் லாபத்­திற்கு வரும் வரை காத்­தி­ருப்­பதை மட்­டுமே பெரும்­பான்­மை­யான முத­லீட்­டா­ளர்­கள் விரும்­பு­வர்.ஆனால், பல பங்­கு­கள் அந்த விலையை மீண்­டும் காண்­பதே இல்லை. அடிப்­படை இன்றி, விலை உயர்வு காணும் பெரும்­பான்மை பங்­கு­கள் இந்த வகையை சேரும். அவற்றை காத்து, காலம் கடப்­பது, இழப்பை எந்த வகை­யி­லும் சரி செய்­யாது.இழப்பை ஈடு செய்ய, முத­லீட்டு தவ­று­களை கையா­ளும் துணி­வும், நேர்­மை­யும் வேண்­டும். கடந்த ஓராண்­டில், பல பங்­கு­கள் எட்­டிய உயர் விலை­யில் இருந்து சரி­வைக் கண்­டுள்­ளன. அந்த சரி­வில் இருந்து மீள, இன்­னும் பல்­லாண்டு ஆகும்.

பல பங்கு மதிப்­பீ­டு­கள், விலை­யில்லா நிலைக்கு கூட போக­லாம். அது­வரை காத்­தி­ருந்து, நிரந்­தர நஷ்­டம் அடை­யா­மல், இதோடு நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்தியம் காட்­டு­வது இப்­போ­தைய உட­னடி தேவை.அடிப்­ப­டைத் தன்மை கொண்ட பங்­கு­கள் சில மட்­டும், இழந்த மதிப்பை மீட்டு, மீண்­டும் உய­ரக் கூடி­யவை. அவற்றை தெளி­வாக அடை­யாளம் காண்­பது அவசி­யம்.அவை அல்­லாத பிற பங்­கு­களை மாற்றி அமைக்க வேண்­டி­யதை, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரும் ஏற்க வேண்­டும். நஷ்­டம் அடைந்­ததை பற்றி கவ­லைப்­ப­டா­மல், அடுத்து தலை­யெ­டுக்­கும் முத­லீட்டு மாற்­றங்­கள், லாபம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அமைக்க வேண்­டும்.இப்­போது, புதி­தாக அமை­யும் பங்கு உற­வு­கள், நெடுங்­கா­லம் நிலைக்­கும் வண்­ணம் தேர்­வு­களை அமைத்­துக் கொள்­வது மிக முக்­கி­யம்.

நஷ்­டம் அடை­யும் சூழ­லில், ஆய்வு நேரத்தை அதி­கம் செல­விட்டு, நிதா­ன­மான முடி­வு­கள் எடுக்க பழக வேண்­டும். அந்த முடி­வு­கள், தொலை­நோக்கு பார்வை கொண்டு எடுப்­பது மிக முக்­கி­யம்.இனி வரும் மாதங்­களில் சந்தை என்ன ஆகும் என்­பதை கடந்து, நம் கையி­ருப்பு பங்­கு­கள் என்ன ஆகு­மென்­றும், அவற்­றில் நாம் என்ன செய்ய வேண்­டு­மென்ற மனத்­தெ­ளிவு உட­ன­டி­யாக ஏற்­பட வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)