நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம்நஷ்­டத்தை நிறுத்­திக் கொள்­ளும் சாமர்த்­தி­யம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ...
வங்­கி­யா­ளர்­களை பலி­கடா ஆக்­க­லாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2018
06:34

வாராக்­க­டன் பிரச்­னையை தொடர்ந்து, சமீ­பத்­தில், பொதுத்துறை வங்­கி­க­ளின் உயர் அதி­கா­ரி­களை விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்டு வரும் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. இத­னால், கடும் அதி­ருப்தி அடைந்­துள்­ளது, இந்­திய வங்­கி­யா­ளர்­கள் சங்­கம். இப்­ப­டிப்­பட்ட விசா­ர­ணை­களும், பழி சுமத்தல்­களும் என்ன விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும்?

‘பேங்க் ஆப் மஹா­ராஷ்­டி­ரா­’வின் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலை­மைச் செயல் அதி­காரி உட்­பட ஐந்து உயர் அதி­கா­ரி­களை, புனே காவல் துறை­யின் பொரு­ளா­தா­ரக் குற்றப்­பி­ரிவு, சமீ­பத்­தில், கைது செய்­தது. ஏற்­க­னவே, ஐ.டி.பி.ஐ., வங்கி­யின் தலை­வ­ரும், நிர்வாக இயக்­கு­ன­ரு­மான, யோகேஷ் அகர்­வால் கைது செய்­யப்­பட்டார். கனரா வங்­கி­யின் தலை­வர், ஆர்.கே.துபே, பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யின், சி.இ.ஓ., உஷா அனந்­த­சுப்­பி­ர­ம­ணி­யன் ஆகி­யோர் மீதும் குற்­றச்­சாட்­டு­கள் உள்­ளன. யுனை­டெட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின் தலை­வ­ரும், நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான, அர்ச்­சனா பார்­கவா மீது, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்­துள்­ளது.

இவை­யெல்­லாம், வங்­கித் துறை உயர் அதி­கா­ரி­கள் மட்­டத்­தில் பெரும் வருத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பொதுத் துறை வங்­கி­களில் ஏற்­பட்ட மோச­டி­க­ளுக்­குப் பின், பல்­வேறு வித­மான கருத்­து­கள் உரு­வா­கின. அதில் முக்­கி­ய­மா­னது, வங்கி உயர் அதி­கா­ரி­க­ளின் ஒப்­பு­தலோ அல்­லது அவர்­க­ளது கவ­னக்­கு­றைவோ இல்­லா­மல், இத்­த­கைய மோச­டி­கள் நடந்­திருக்க வாய்ப்­பில்லை என்­பதுதான். அவர்­களே பல இடங்­களில் நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ சம்­பந்­தப்­பட்டு இருக்கலாம் என்ற, ஹேஷ்­ய­மும் கூறப்­பட்­டது.

கண்­கா­ணிப்பு இல்லை :
மக்­கள் பணத்தை முறை­யாக, பொறுப்­பு­ணர்­வோடு கையா­ள­வில்லை என்­ப­தோடு, உயர் அதி­கா­ரி­கள் எடுத்த பல்­வேறு கடன் வழங்­கும் முடி­வு­களில் நேர்த்தி இல்லை; போதிய முன்­வி­சா­ர­ணை­கள் இல்லை. தொடர்ச்­சி­யான கண்­கா­ணிப்பு இல்லை; திரும்ப வசூல் செய்­வ­தில் முனைப்பு இல்லை என்­பன போன்ற, குற்­றச்­சாட்­டு­களும் முன்­வைக்­கப்­பட்­டன. இதன் தொடர்ச்­சி­யா­கவே இவ்­வ­ழக்­கு­களும், கைது­களும் நடை­பெற்று வரு­கின்­றன. இந்­திய வங்­கி­யா­ளர்­கள் சங்கம், இங்கே தான் அதி­ருப்தி அடைந்­துள்­ளது. முறை­யாக எடுக்­கப்­பட்ட பல முடிவுகள் மீது, அபாண்­ட­மாக பழி சுமத்­தப்­ப­டு­கிறது. போதிய விசா­ரணை இன்றி கைது­கள் நடை­பெ­று­கின்­றன, இது, ஏற்­கத்­தக்­க­தல்ல என்­பதே, இவர்­க­ளது வாதம்.

வங்­கி­யா­ளர் மீது வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு, தனியே ஓர் சுயேச்­சை­யான விசா­ரணை அமைப்பு ஏற்­படுத்­தப்­பட வேண்­டும், அதில், சங்­கத்­தைச் சேர்ந்த உறுப்­பி­னர் ஒரு­வ­ரும் நிய­மிக்­கப்­பட வேண்­டும் என்­ப­தோடு, தங்­க­ளது வருத்­தத்தை நேர­டி­யாக நிதி அமைச்­ச­ரி­டமே தெரி­விக்­க­வும் முயற்சி மேற்­கொண்­டுள்­ளது. வாராக்­க­டன் மிகப்­பெ­ரும் பிரச்னை, என்­ப­தில், சந்­தே­கம் இல்லை. அதற்­கான பொறுப்பை, ஒரு­சில வங்கி உயர் அதி­கா­ரி­கள் மீது மட்­டுமே சுமத்தி, பிரச்­னையை மூடி­வி­டு­வது எந்­த­வி­தத்­தி­லும் ஏற்­பு­டை­ய­தல்ல. கடன்­கள் வாராத நிலை­யில் நின்று, நாம் இத்­த­கைய விஷ­யங்­களை பேசிக்­கொண்டு இருக்­கி­றோம். ஒரு­சில ஆண்­டு­ க­ளுக்கு முன் வரை, இவை வரக்­கூ­டிய கடன்­க­ளா­கவே இருந்­தன.

அன்று, கடன் வாங்க சக்­தி­யுள்ள நிறு­வ­னங்­க­ளை, சாதனை­யா­ளர்­க­ளாக கொண்டாடி இருக்­கி­றோம். அன்­றைய மன­நிலை வேறு. வளர்ச்சி வேண்­டும் என்ற முகாந்­தி­ரத்­தில், பெரிய நிறு­வ­னங்­கள் கோரிய அத்­தனை கடன்­களை கொடுப்­ப­தற்கு, நம் அர­சாங்­க­மும், நிர்­வாக அமைப்­பும், வங்­கி­களும் ஆயத்­த­மாக இருந்­தன. பின், படிப்­ப­டி­யாக பல்­வேறு கார­ணங்­க­ளால் பல நிறு­வ­னங்­கள் தளர்­வுற்­றுப் போயின. வாங்­கிய கடனை திருப்­பிச் செலுத்­தா­மல் போயின. இதற்கு சர்­வ­தேச வர்த்­த­க­மும், சந்­தை­களும் மிக முக்­கி­ய­மான கார­ணங்­கள்.

இந்­நி­லை­யில், கடன்­களை வசூல் செய்­யும் வேகம் எழுந்தது. பல நிறு­வ­னங்­க­ளின் உண்மை நிலை வெளியே தெரிய வந்­தது; மோச­டி­களும் வெளி­யா­கின. பிரச்னை பூதா­க­ர­மாக வெடித்­தது. கேள்­வி­கள் இங்கே இருந்து தான் துவங்­கு­கின்­றன. வங்­கி­யா­ளர்­கள், திட்­டங்­களை சரி­யான ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தா­மல் முறை­யற்று, கடன் கொடுத்­த­னரா? நிதி அமைச்­சக­மும், ஆர்.பி.ஐ.,யும், வகுத்த நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­றத் தவ­றி­னரா? போதிய அட­மா­னங்­க­ளைப் பெறா­மல் கடன்­களை வழங்­கி­னரா?

உள்­கட்­டு­மா­னம், மின்­சா­ரம், தொலை­தொ­டர்பு, உருக்கு, ஸ்டீல் ஆகிய துறை­க­ளைச் சார்ந்த நிறு­வ­னங்­களே தளர்­வுற்று, வாங்­கிய கடன்­களை திருப்­பிச் செலுத்த முடி­யா­மல் போயின. அப்­ப­டி­யா­னால், அந்­தத் துறை­களில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சியை, கணக்­கில் எடுத்­துக்­கொள்ள வேண்­டாமா?வாராக்­க­டன் நிறு­வ­னங்­கள் மீது, சட்­டப்­ப­டி­யான நட­வடிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தில் ஏதே­னும் தாம­தம் நேர்ந்­ததா? அவர்­களை தப்ப வைக்­கும் முயற்­சி­கள் நடை­பெற்­ற­னவா?

தனி­யார் வங்­கி­களில் வாராக்­க­டன் குறை­வா­கவே இருக்­கிறது என்­கி­றீர்­களே, அவர்­கள் எத்­தனை பேருக்­குக் கடன் கொடுத்­த­னர்? இந்­தி­யா­வில் வழங்­கப்­பட்ட மொத்த கடனில், 15 சத­வீ­தம் தான் தனியார் வங்­கி­கள் கொடுத்­தவை. பொதுத் துறை வங்­கி­களோ, இந்­தி­யா­வில் உள்ள, 80 சத­வீத நிறு­வ­னங்­க­ளுக்­குக் கடன் கொடுத்­தன. கடன் கொடுப்­ப­தால், தொழில் வளம் பெரு­கும், வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும், பொரு­ளா­தா­ரம் மேம்­படும் என்ற, சிந்­த­னை­யின் தொடர்ச்­சி­யாக வழங்­கப்­பட்ட கடன்­கள் இவை. இதி­லுள்ள சமூக நோக்கு, உங்­கள் கண்­ணில் பட­வில்­லையா?

மேலும், வாராக்­க­டன் பற்றி மட்­டுமே பேசு­கி­றீர்­களே? இதே மூத்த வங்­கி­யா­ளர்­க­ளால், கடந்த காலங்­களில் பல்­வேறு பொதுத் துறை வங்­கி­கள் அடைந்த வளர்ச்சி என்ன? ஈட்­டிய லாபம் என்ன? அவற்­றை­யெல்­லாம் கணக்­கில் எடுத்­துக்­கொள்ள மாட்­டீர்­களா? இவை­யெல்­லாம், மூத்த வங்­கி­யா­ளர்­கள் முன்­வைக்­கும் நியா­ய­மான கேள்­வி­கள். தங்­களை மட்­டும், ஏன் பலி­கடா ஆக்க வேண்­டும் என்­பதே அவர்­க­ளது ஆதங்­கம்.

அடுத்த கட்ட வளர்ச்­சி :
ஒட்­டு­மொத்­த­மாக அத்­தனை வங்­கி­யா­ளர்­கள் மீதும், கறுப்­புச் சாயம் பூசு­வ­தில் அர்த்தமில்லை. பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு ஒரு பாரம்­ப­ரி­யம் உண்டு. அவர்­கள், அத்­தனை விப­ரங்­க­ளை­யும் கண்­ணில் விளக்­கெண்­ணெய் விட்­டுக்­கொண்டு சரி­பார்த்த பின்­னரே, கடன் வழங்­கு­வர் என்­பது நம் அனு­ப­வம். அத­னால், அவர்­களில் தவறு செய்­ப­வர்­கள் மீது மட்­டுமே உரிய விசா­ர­ணைக்­குப் பின், சட்­டம் பாய வேண்­டுமே அன்றி, அனை­வ­ரை­யும் அச்­சப் பட வைக்­கக் கூடாது. ஏனெ­னில், இவர்­கள் தான் அடுத்த கட்ட வளர்ச்­சிக்கு இந்­தி­யாவை அழைத்­துச்செல்­கி­ற­வர்­கள்.

வங்­கி­யா­ளர்­கள் அச்சம் அடைந்து, தம் பணி­யில் சோர்ந்­து­போ­னால், புதிய கடன்­கள் கிடைப்­பது அரி­தா­கி­வி­டும், வளர்ச்சி சோம்­பி­வி­டும், வேலை­வாய்ப்­பு­கள் சுணங்­கி­வி­டும்.தவ­று­க­ளைச் சுட்­டிக் காட்டி, தக்­க­நே­ரத்­தில் திருத்தி, அர­வ­ணைத்­துச் செல்­வதே ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அழகு; வழக்கு தொடுப்­ப­தும், அலைக்­க­ழிப்­ப­தும் வங்­கி­யா­ளர்­களை அன்­னி­யப்­ப­டுத்­தி­வி­டும் அபா­யம் உண்டு.

-ஆர்.வெங்­க­டேஷ்,பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)