பதிவு செய்த நாள்
11 ஜூலை2018
00:42
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 38 சதவீதமும், கார்களின் விற்பனை, 34 சதவீதமும் உயர்ந்துள்ளதாக, ’சியாம்’ எனும், இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சியாம் மேலும் தெரிவித்துள்ளதாவது:உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, ஜூன் மாதத்தில், 37.54 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இம்மாதத்தில், 2,73,759 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 1,99,036 பயணியர் வாகனங்கள் விற்பனை ஆகின.
உள்நாட்டில் கார் விற்பனை, 34.21 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, 1,83,885 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 1,37,012 கார்கள் விற்பனை ஆகின.ஜூன் மாதத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை, 24.32 சதவீதம் அதிகரித்து, 11,99,332 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 9.64,729 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
மொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை, ஜூன் மாதத்தில், 22.28 சதவீதம் அதிகரித்து 18,67,884 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 15,27,509 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், 41.72 சதவீதம் அதிகரித்து, 80,624 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இவ்வாறு சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|