பெண் தொழில்முனைவோரால் 10 சதவீத வளர்ச்சி சாத்தியமாகும்பெண் தொழில்முனைவோரால் 10 சதவீத வளர்ச்சி சாத்தியமாகும் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு ...
மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு; 4 ஆண்டுகள் காணாத வகையில் 5.77 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
00:20

புதுடில்லி : நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், கடந்த ஜூன் மாதம், 5.77 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், 0.90 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது. முந்­தைய மே மாதம், மொத்த விலை பண­வீக்­கம், 4.43 சத­வீ­த­மாக இருந்­தது.

எரி­பொ­ருள், காய்­க­றி­கள் ஆகி­ய­வற்­றின் விலை உயர்­வால், நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, மொத்த விலை பண­வீக்­கம் உயர்ந்­துள்­ளது. கடந்த, 2013 டிசம்­ப­ரில், மொத்த விலை பண­வீக்­கம், 6.16 சத­வீ­த­மாக இருந்­தது. அதன் பின், மதிப்­பீட்டு மாதத்­தில் தான், பண­வீக்­கம், இதற்கு நெருக்­க­மான உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

உணவு பொருட்கள் :
கடந்த, ஜூன் மாதம், உணவு பொருட்­கள் பண­வீக்­கம், 1.80 சத­வீ­த­மாக காணப்­பட்­டது. இது, மே மாதம், 1.60 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது. இதே காலத்­தில், காய்­க­றி­கள் பண­வீக்­கம், 2.51 சத­வீ­தத்­தில் இருந்து, 8.12 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. உரு­ளைக்­கி­ழங்­கின் மொத்த விலை பண­வீக்­கம், 81.93 சத­வீ­தத்­தில் இருந்து, 99.02 சத­வீ­த­மாக ஏற்­றம் கண்­டது.

வெங்­கா­யம் பண­வீக்­கம், 13.20 சத­வீ­தத்­தில் இருந்து, 18.25 சத­வீ­த­மாக உயர்ந்­தி­ருந்­தது. அதே­ச­ம­யம், பருப்பு வகை­களில் பண­வாட்­டம் ஏற்­பட்­டுள்­ளது. ஜூன் மாதம், பருப்பு வகை­க­ளின் பண­வாட்­டம், 21.13 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, மே மாதம், 20.23 சத­வீ­த­மாக இருந்­தது. இதே காலத்­தில், எரி­பொ­ருள் மற்­றும் மின்­சார பண­வீக்­கம், 11.22 சத­வீ­தத்­தில் இருந்து, 16.18 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.

கச்சா எண்ணெய் :
சர்­வ­தேச சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், பெட்­ரோல், டீசல் விலை அதி­க­ரித்­து உள்­ளது. கடந்த, 2017 மார்ச்­சில், மொத்த விலை பண­வீக்­கம், அதி­க­பட்­ச­மாக, 5.11 சத­வீ­த­மாக காணப்­பட்­டது. அது முதல், இறக்­கம் கண்டு வந்த நிலை­யில், கச்சா எண்­ணெய் விலை­யேற்­றத்­தால், மொத்த விலை பண­வீக்­கம் உயர்ந்து வரு­கிறது. கடந்த ஏப்­ர­லில், 1 பேரல் கச்சா எண்­ணெய் விலை, 66 டால­ராக இருந்­தது. இது, தற்­போது, 74 டால­ராக உயர்ந்­துள்­ளது.

ரிசர்வ் வங்கி :
சில்­லரை பண­வீக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் தான், ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்­கையை உரு­வாக்­கு­கிறது. பண­வீக்­கம் தொடர்ந்து உயர்ந்து வந்­ததை அடுத்து, ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு, ஜூன், 6ம் தேதி, வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை, 0.25 சத­வீ­தம் உயர்த்தி, 6.25 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­தது. நான்கு ஆண்­டு­க­ளுக்கு பின், முதன் முறை­யாக, இந்த வட்டி உயர்த்­தப்­பட்­டது

பண­வீக்­கம் மேலும் உயர்ந்து வரு­வ­தால், ஆக., 1ல் நடை­பெற உள்ள, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்­டத்­தில், ரெப்போ வட்டி மேலும் உயர்த்­தப்­ப­ட­லாம் என, நிதிச் சேவை துறை­யி­னர் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

மறுமதிப்பீடு :
ஏப்­ரல் மாதம் மொத்த விலை பண­வீக்­கம், 3.18 சத­வீ­தத்­தில் இருந்து, 3.62 சத­வீ­த­மாக மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது. நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், ஜூன் மாதம், 5 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, ஐந்து மாதங்­களில் இல்­லாத உயர்­வா­கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)