இந்தியா சிறப்பாக வளர்ச்சி காணும்: பன்னாட்டு நிதியம் மதிப்பீடுஇந்தியா சிறப்பாக வளர்ச்சி காணும்: பன்னாட்டு நிதியம் மதிப்பீடு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.70 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.70 ...
சிறுவனின், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்; 2020ல் ரூ.100 கோடி வருவாய் ஈட்ட இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2018
23:31

மும்பை : மும்­பை­யில், திலக் மேத்தா என்ற, 13 வயது சிறு­வன், கூரி­யர் சேவைக்­காக உரு­வாக்­கிய, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னம், நேற்று முதல் வர்த்­தக ரீதி­யில் செயல்­ப­டத் துவங்­கி­யுள்­ளது. இந்த நிறு­வ­னம் தோன்­றி­ய­தன் பின்­ன­ணி­யில், சுவா­ரஸ்­ய­மான சம்­ப­வம் உள்­ளது.

மாணவன் :
மும்பை புற­ந­கர் பகு­தி­யைச் சேர்ந்த, எட்­டாம் வகுப்பு மாண­வன், திலக் மேத்­தா­வுக்கு, ஒரு நாள் அவ­ச­ர­மாக சில புத்­த­கங்­கள் தேவைப்­பட்­டன. இரவு, வேலை­யில் இருந்து களைப்­பு­டன் வீடு திரும்­பும் தந்­தையை, நகர்ப்­பு­றத்­தில் மட்­டும் கிடைக்­கும் அந்த புத்­த­கங்­களை வாங்கி வரச் சொல்ல, சிறு­வ­னின் மனம் இடம்­கொ­டுக்­க­வில்லை. அந்த சம­யத்­தில் தான், இது போன்ற புத்­த­கங்­கள், ஆவ­ணங்­கள் போன்­ற­வற்றை, வீடு தேடி கொடுக்­கும் ஸ்டார்ட் அப் நிறு­வ­னத்தை துவங்­கி­னால் என்ன என்ற சிந்­தனை, திலக் மேத்­தா­வுக்கு உதித்­தது.

அதை தந்­தை­யி­டம் கூற, அவர் ஆத­ரவு தெரி­வித்­த­து­டன், தான் தலைமை செயல் அதி­கா­ரி­யாக உள்ள, ருஷாப் சீலிங்க் என்ற சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­தின் உத­வியை பெற்­றுத் தரு­வ­தா­க­வும் கூறி­னார். இதை­ய­டுத்து, கனஷ்­யாம் பரேக் என்ற வங்கி அதி­கா­ரி­யி­டம், திலக் தன் திட்­டத்தை விவ­ரித்­தார். அதில் ஏற்­பட்ட நம்­பிக்­கை­யால், கனஷ்­யாம், வங்கி வேலையை உத­றி­விட்டு, திலக் துவக்­கும் நிறு­வ­னத்­தில், தலைமை செயல் அதி­கா­ரி­யாக பொறுப்­பேற்க முன்­வந்­தார்.

இதை­ய­டுத்து, உரு­வா­னது தான், ‘பேப்­பர்ஸ் அண்டு பார்­சல்ஸ்’ என்ற ஸ்டார்ட் அப் நிறு­வ­னம். சுருக்­க­மாக, பி.என்.பி., என, அழைக்­கப்­ப­டு­கிறது. தொழில் துவங்­கு­வ­தற்­கான மூல­த­னத்தை, ருஷாப் சீலிங்க் வழங்க, திலக் மேத்தா, தன் தொழி­லுக்­கான மொபைல், ‘ஆப்’பை உரு­வாக்கி, சேவையை துவக்­கி­னார். பி.என்.பி., 200 பணி­யா­ளர்­க­ளு­டன், கடந்த நான்கு மாதங்­க­ளாக, மொபைல் ஆப் வாயி­லாக, மும்­பை­யின் தாதர் பகு­தி­யில் இருந்து, ‘பார்­சல்’ சேவையை, சோதனை முறை­யில் வழங்கி வந்­தது. அத்­து­டன், மும்­பை­யின் பிர­சித்தி பெற்ற, ‘டப்­பா­வாலா’ அமைப்­பைச் சேர்ந்த, 300 பேரை­யும், தன் சேவைக்கு பயன்­ப­டுத்­திக் கொண்­டது. நேற்று முதல், பி.என்.பி., நிறு­வ­னம், வர்த்­தக ரீதி­யி­லான சேவையை துவக்­கி­யுள்­ளது.

விரிவாக்கம் :
இது குறித்து, திலக் மேத்தா கூறி­ய­தா­வது: ஒரு­வர், நிறு­வ­னத்­தின், ‘ஆப்’பை பதி­வி­றக்கி, புத்­த­கங்­கள், ஆவ­ணங்­கள் உள்­ளிட்­ட­வற்றை பெற, ‘ஆர்­டர்’ தர­லாம். மதி­யம், 2:30 மணிக்­குள் ஆர்­டர் அளித்­தால், அன்றே பார்­சல் வீடு தேடி வந்து விடும். மேலும், பார்­சல் எந்த வழி­யாக வரு­கிறது என்­ப­தை­யும், மொபைல் போனில் அறி­ய­லாம். தற்­போது, 3 கிலோ வரை­யி­லான பார்­சல்­கள் மட்­டுமே ஏற்­றுக் கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இதற்கு, எடையை பொறுத்து, 40 – 180 ரூபாய் வரை வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. மருத்­துவ பரி­சோ­தனை கூடங்­கள், கொய்­ம­லர் அங்­கா­டி­கள் ஆகி­யவை ஆர்­டர் வழங்­கு­கின்­றன. தின­மும், 1,200 பார்­சல்­கள் அனுப்­பப்­ப­டு­கின்­றன. நிறு­வ­னத்­தின் சேவையை, மும்பை தவிர, பிற பகு­தி­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ளோம். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

பி.என்.பி., நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, கனஷ்­யாம் பரேக் கூறு­கை­யில், ‘‘மும்பை நக­ருக்­குள் நடை­பெ­றும் கூரி­யர் சேவை­யில், 20 சத­வீ­தத்தை கைப்­பற்­ற­வும், 2020ல் வரு­வாயை, 100 கோடி ரூபா­யாக உயர்த்­த­வும் இலக்கு நிர்­ண­யித்­துள்­ளோம்,'' என்­றார்.

‘டப்பாவாலா’
மும்­பை­யில், உணவு எடுத்­துச் செல்­லும் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள, ‘டப்­பா­வாலா’ எனப்­ப­டு­வோ­ரில், 300 பேர், பி.என்.பி., நிறு­வ­னத்­தில் பகுதி நேர ஊழி­ய­ராக வேலை பார்க்­கின்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)