பங்கு வெளியீட்டுக்கு வருகிறது பி.என்.காடுகில் அண்டு சன்ஸ் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது பி.என்.காடுகில் அண்டு சன்ஸ் ... 40 பொருட்களுக்கு வரி குறைய வாய்ப்பு; ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை கூடுகிறது 40 பொருட்களுக்கு வரி குறைய வாய்ப்பு; ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை கூடுகிறது ...
‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதா வாபஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
23:56

புதுடில்லி : கடும் எதிர்ப்­புக்­குள்­ளான, ‘நிதி தீர்வு – சேமிப்பு காப்­பீடு’ மசோ­தாவை திரும்­பப் பெற, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

கடந்த, 2017, ஆக., 10ல், இந்த மசோதா, லோக்­ச­பா­வில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. இதில், ‘பெயில் இன்’ மற்­றும் வங்கி டெபா­சிட்­டிற்­கான காப்­பீடு குறித்த இரு பிரி­வு­க­ளுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்­தது.ஒரு வங்கி திவா­லா­கும் பட்­சத்­தில், அதற்­கான தீர்வு நட­வ­டிக்­கை­யில், வாடிக்­கை­யா­ளர்­க­ளை­யும் பொறுப்­பேற்க, பெயில் இன் பிரிவு வழி­வகை செய்­கிறது. இதன்­படி, திவா­லான வங்­கி­யின் வாடிக்­கை­யா­ள­ருக்கு, அவர் செய்த டெபா­சிட்­டில், குறிப்­பிட்ட சத­வீ­தம் ரொக்­க­மா­க­வும், எஞ்­சிய தொகை, வங்கி பங்­கு­கள் மற்­றும் கடன் பத்­தி­ரங்­க­ளா­க­வும் வழங்­கப்­படும்.

இந்த அம்­சம், வங்கி டெபா­சிட்­தா­ரர்­கள் இடையே சந்­தே­கத்­தை­யும், பீதி­யை­யும் கிளப்­பி­யது. டெபா­சிட் செய்த முழு தொகை­யும், திரும்­பக் கிடைக்­காதோ என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

எதிர்ப்பு :
அத­னால் பொது­மக்­களும், எதிர்க்­கட்­சி­களும், பெயில் இன் பிரிவை நீக்க வேண்­டும் என, கோரி­னர். ஆனால், ‘இந்த பிரிவு, அசா­தா­ரண சூழ­லுக்­குத் தான் பொருந்­தும்; குறிப்­பாக, பொதுத் துறை வங்­கி­களில் இந்த பிரிவை பயன்­ப­டுத்­தும் நிலை வராது’ என, மத்­திய அரசு சமா­தா­னம் கூறி­யது. அடுத்து, வரைவு மசோ­தா­வில், தற்­போ­தைய காப்­பீட்டு வரம்பு நீக்­கத்­திற்­கும் எதிர்ப்பு எழுந்­தது.

வங்கி டெபா­சிட்­டு­களில், தற்­போது, ஒரு லட்­சம் ரூபாய் வரை, காப்­பீட்டு வசதி உள்­ளது. வரைவு மசோ­தா­வில், இந்த வரம்பு நீக்­கப்­பட்­டு உள்­ளது. அதற்கு பதி­லாக, புதி­தாக அமைக்­கப்­படும் தீர்­வுக் கழ­கம், டெபா­சிட்­டு­க­ளுக்­கான காப்­பீடு குறித்து முடிவு செய்­யும் என, குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த பிரி­விற்­கும் எதிர்ப்பு எழுந்­தது. இதற்கு விளக்­கம் அளித்த மத்­திய அரசு, ‘டெபா­சிட் வரம்பை உயர்த்தி முடிவு செய்­யும் அதி­கா­ரம், தீர்­வுக் கழ­கத்­திற்கு வழங்­கப்­படும் என்­ப­தால், ஒரு லட்­சம் ரூபாய்க்கு மேற்­பட்ட டெபா­சிட்­டிற்­கும், காப்­பீட்டு வசதி கிடைக்­கும்.

‘இத­னால், அதி­கம் டெபா­சிட் செய்த வாடிக்­கை­யா­ளர்­களும் பயன் பெறு­வர்’ என, தெரி­வித்­தது.எனி­னும், எதிர்ப்பு கார­ண­மாக, வரைவு மசோதா, பார்லி., நிலைக்­குழு ஆய்­வுக்கு அனுப்­பப்­பட்­டது. அதன் அறிக்கை இன்­னும் வராத சூழ­லில், பிர­த­மர் மோடி தலை­மை­யில் கூடிய மத்­திய அமைச்­ச­ரவை கூட்­டத்­தில், நிதி தீர்வு – சேமிப்பு காப்­பீடு மசோ­தாவை திரும்­பப் பெற முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பொதுத் தேர்­தல் வர உள்ள சூழ­லில், மசோ­தாவை திரும்­பப் பெறு­வதே சிறந்த வழி என, மத்­திய அரசு இந்த முடிவை எடுத்­துள்­ள­தாக தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)