சரக்கு – சேவை வரிகளை மூன்றாக குறைக்க பரிசீலனைசரக்கு – சேவை வரிகளை மூன்றாக குறைக்க பரிசீலனை ... ‘எளி­மை­யான மருத்­துவ காப்­பீடு திட்­டங்­கள் தேவை’ ‘எளி­மை­யான மருத்­துவ காப்­பீடு திட்­டங்­கள் தேவை’ ...
சேமிப்­பில் அதிக பலன் அளிக்­கும் சிறிய செயல்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2018
00:03

நீண்ட கால நோக்­கில் திட்­ட­மிட்டு செயல்­படும் போதே சேமிப்­பின் முழு பலனை பெற முடி­யும். இதற்­காக எளிய வழி­களை பின்­பற்­றி­னாலே போது­மா­னது. சேமிக்­கும் அள­வுக்கு வரு­மா­னம் இல்லை என்று சொல்­வ­தை­விட, சேமிப்­பிற்­கான சின்ன சின்ன வழி­களை கண்­ட­றிந்து செயல்­ப­டுத்­த­லாம். இதன் மூலம், 10ஆண்­டு­களில் பெரிய அள­வில் பலன் பெற முடி­யும். அதற்­கான யோச­னை­கள்:

இதுவே சரி­யான காலம்

இத்­தனை காலம் சேமிக்­கா­மல் இருந்­து­விட்­டோமே என நினைத்து, சேமிப்பை இனி­யும் தள்­ளிப்­போட வேண்­டாம். சேமிப்பை பொறுத்­த­வரை முன்­ன­தா­கவே துவக்­கு­வது அதிக பலன் அளிக்­கும் என்­றா­லும், இப்­போ­தும் தாம­த­மா­கி­வி­ட­வில்லை. இதுவே சரி­யான காலம் என நினைத்­து, சேமிக்­கத்­ து­வங்­குங்­கள்.

வீண் செல­வு­கள்

சேமிப்பை துவக்­கு­வது என தீர்­மா­னித்­த­தும் அதை செயல்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­களை கண்­ட­றிய வேண்­டும். முடிந்த வரை வீண் செல­வு­களை கண்­ட­றிந்து குறைக்க வேண்­டும். இந்த செல­வு­களில் மிச்­ச­மா­கும் தொகை எல்­லாம் சேமிப்­பாக மாறும். வார இறு­தி­யில் வெளியே சென்று சாப்­பி­டும் பழக்­கம் இருந்­தால், அதை குறைத்­துக்­கொள்­ள­லாம்.

செயல் திறன்

வீண் செலவை தவிர்ப்­பது போலவே, எரி­சக்தி பயன்­பாடு போன்­ற­வற்­றில் செயல்­தி­றன் மிக்க வழி­களை நாடி அதன் மூல­மும் சேமிக்­க­லாம். சொந்த வாக­னம் வைத்­தி­ருப்­ப­வர்­கள் எனில், வாரம் ஒரு முறை வாக­னத்தை வீட்­டில் வைத்­து­விட்டு பொது போக்­கு­வ­ரத்தை பயன்­ப­டுத்­த­லாம். மின் விளக்­கு­கள், ‘ஏசி’ போன்­ற­வற்­றில் செயல்­தி­றன் மிக்க வழி­களை நாட­லாம்.

‘கேட்­ஜெட்’ ஆர்­வம்

பல­ருக்­கும் புதிய கேட்­ஜெட்­களை வாங்­கும் ஆர்­வம் உள்­ளது. பழைய போன் நன்­றாக இருந்­தால் கூட, புதிய போன் மோகத்­தால், விலை அதி­க­மான புதிய மாதி­ரியை வாங்­கு­கின்­ற­னர். இப்­படி, தேவை­யில்­லா­மல் புதிய கேட்­ஜெட்­கள் வாங்­கும் பழக்­கத்தை கைவிட வேண்­டும். இந்த தொகையை சேமிப்­பாக மாற்ற வேண்­டும்.
-உங்­கள் வழி

இவைத்­த­விர உங்­க­ளுக்கு என, பிரத்­யே­க­மான சேமிப்பு வழியை கண்­டு­பி­டிக்க முய­லுங்­கள். ஒவ்­வொ­ரு­வ­ரின் செலவு பழக்­கம் மாறு­பட்­டது என்­ப­தால், உங்­கள் செலவு பழக்­கங்­களை ஆய்வு செய்து, உங்­கள் இலக்கு மற்­றும் முன்­னு­ரி­மை­க­ளுக்கு ஏற்ப எந்த செல­வு­களை குறைத்­துக்­கொள்­ள­லாம் என, ஆராய்ந்து முடி­வெ­டுங்­கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)