ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழுக்கு  முழு கட்டணமும் மானியம்ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழுக்கு முழு கட்டணமும் மானியம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.85 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 68.85 ...
வரி ஏய்ப்பு செய்வோருக்கு கிடுக்கிப்பிடி நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பிரச்னையில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2018
00:48

புதுடில்லி:வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­த­தில், வரி ஏய்ப்பு நடந்­துள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும், 0.35 சத­வீத கணக்­கு­களை மட்­டுமே ஆய்வு செய்ய, வரு­மான வரி துறை முடிவு செய்­து உள்­ளது.
இது குறித்து, மத்­திய நேரடி வரி­கள் வாரிய தலை­வர், சுஷில் சந்­திரா கூறி­ய­தா­வது.வரு­மான வரி செலுத்­து­வோர் எண்­ணிக்கை உயர்ந்­துள்­ளது. நாங்­கள், வரு­மான வரி கணக்கு தாக்­கல் செலுத்­து­வோர் மீது முழு நம்­பிக்கை வைத்­துள்­ளோம்.கடந்த, 2017- – 18ம் வரி மதிப்­பீட்டு ஆண்­டில், 6.86 கோடி பேர் வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­துள்­ள­னர்.

அதில், 0.35 சத­வீ­தத்­தி­ன­ரின் கணக்கு விப­ரங்­கள் மட்­டுமே, ஆய்­வுக்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளது. அத­னால், எஞ்­சிய, 99.65 சத­வீ­தம் பேர் நிம்மதி­யாக இருக்­க­லாம்.

வரு­மான வரி துறை, 0.15 சத­வீத கணக்­கு­க­ளின் ஆய்­வுக்கு, ஓர் எல்லை வகுத்­துள்­ளது. இதர, 20 சத­வீத கணக்­கு­களில், அதிக அள­வில் வரி ஏய்ப்பு நடந்­துள்­ள­தாக சந்­தே­கம் எழுந்­துள்­ள­தால், அவை முழு­மை­யாக ஆய்வுசெய்­யப்­படும்.

தப்ப முடியாது


அதே­ச­ம­யம், குறை­வான கணக்­கு­களை ஆய்வு செய்­வ­தால், வரு­மான வரி துறை, வரி ஏய்ப்பு நட­வ­டிக்­கை­களில், மென்­மை­யான போக்கை கடை­பிடிப்­ப­தாக கூற முடி­யாது. அதை, நேர்­மை­யாக வரி செலுத்தி கணக்கு காட்­டு­வோர் மீது, நாங்­கள் அதிக நம்­பிக்கை வைத்­துள்­ள­தாக கரு­த­லாம்.அதி­க­மாக வரி ஏய்ப்பு செய்­வோர் என, சந்­தே­கிக்­கப்­படும் நபர்­கள் மட்­டுமே, விசா­ரணை வளை­யத்­திற்­குள் கொண்டு வரப்­ப­டு­கின்­ற­னர். பலர், வெளி­நா­டு­களில் பணத்தை பதுக்கி வைத்து வரி ஏய்ப்பு செய்­வர்.

அத்­த­கை­யோர், நாட்­டின் எல்லை தாண்­டி­னால், பணம் பாது­காப்­பாக இருக்­கும் என, நினைக்­கின்றனர். அது தவறு.தற்­போது, வரு­மான வரி துறை­யி­னர், பல நாடு­க­ளு­டன், ‘டிபா­சிட்’ விப­ரங்­களை தன்­னிச்­சை­யாக பெறும் நடை­முறை அம­லுக்கு வந்து விட்­டது. இதன் கார­ண­மாக, வெளி­நா­டு­கள் உட­னான நம் பொரு­ளா­தார எல்­லை­கள், நெருக்­க­மாக வந்­துள்­ளன.
அத­னால், வெளி­நா­டு­களில் பணத்தை பதுக்கி வைத்து வரி ஏய்ப்புசெய்­வோ­ரும், இனி தப்ப முடி­யாது.வரு­மான வரி கணக்கு தாக்­கல் நடை­முறை மேலும் சுல­ப­மாக வேண்­டும். வரி ஏய்ப்பு செய்­வோர் மீதான நட­வ­டிக்கை கடு­மை­யாக்­கப்­பட வேண்­டும். இது தான் எங்­கள் நோக்­கம்.

எங்­க­ளி­டம் உள்ள தக­வல்­கள் அடிப்­ப­டை­யில், வரி ஏய்ப்­பா­ளர்­க­ளுக்கு அச்­சம் உண்­டாக்­கும் வகை­யில், கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. கடந்த ஆண்டு, வரி ஏய்ப்பு தொடர்­பாக, 4,700 பேரி­டம் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.இவ்­வாறு அவர் கூறினார்.

வசூல் ரூ.10.03 லட்சம் கோடி

நேரடி வரு­மான வரி­கள் வாரிய தலை­வர் தெரி­வித்­த­படி, 6.86 கோடி வரு­மான வரி கணக்­கு­களில், 24 ஆயி­ரம் கணக்­கு­கள் மட்­டுமே, ஆய்வு செய்­யப்­படும். அவற்­றில், வரை­ய­றைக்கு உட்­பட்டு, 10 ஆயி­ரத்து, 280 கணக்­கு­களும், 13 ஆயி­ரத்து, 720 கணக்­கு­கள் முழு­மை­யாகவும் ஆய்வு செய்­யப்­படும்.

மத்­திய நேரடி வரி­கள் வாரி­யம், 2017 -– 18ம் நிதி­யாண்­டில், வரு­மான வரி மற்­றும் நிறு­வ­னங்­கள் வரி­யாக, 10.03 லட்­சம் கோடி ரூபாய் வசூ­லித்­துள்­ளது. இது, 2016- – 17ம் நிதி­யாண்டை விட, 18 சத­வீ­தம் அதி­கம்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சூரத்: குஜ­ராத்­தைச் சேர்ந்த பெரும் பணக்­கா­ரர்­கள், வலை­த­ளங்­களில் புழங்­கும்,‘பிட்­காய்ன்’ கரன்­சி­யில் ... மேலும்
business news
‘ராணுவ உற்­பத்தி துறை இறக்­கு­மதி செய்­யும் பொருட்­களை, உற்­பத்தி செய்து தர முன் வரும், குறு, சிறு, நடுத்­தர ... மேலும்
business news
மும்பை: ‘‘தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், கூடு­தல் தக­வல்­களை பெறு­வ­தற்கு அதி­கா­ரம் அளிக்­கும் வகை­யில், ... மேலும்
business news
மும்பை: ‘‘தர நிர்­ணய நிறு­வ­னங்­கள், கூடு­தல் தக­வல்­களை பெறு­வ­தற்கு அதி­கா­ரம் அளிக்­கும் வகை­யில், ... மேலும்
business news
புதுடில்லி: இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான – அசோ­செம், அமெ­ரிக்­கா­வில் பிர­தி­நிதி கிளையை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)