தங்கம் இறக்குமதி 75 டன்னாக அதிகரிப்புதங்கம் இறக்குமதி 75 டன்னாக அதிகரிப்பு ... சென்செக்ஸ் 207 புள்ளிகள் உயர்வு சென்செக்ஸ் 207 புள்ளிகள் உயர்வு ...
முட்டை கொள்முதல் விலையை குறைக்காமலிருக்க வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2018
01:17

நாமக்­கல்:‘தென் மேற்கு பரு­வ­மழை தீவி­ரம், ஆடி மாதம் முடிவு போன்ற கார­ணங்­க­ளால், தமி­ழக முட்டை விற்­பனை சிறப்பாக உள்ளது.‘அத­னால், பண்­ணை­யாளர்­கள், 40 காசுக்கு மேல் குறைத்து, முட்டை விற்­பனை செய்ய வேண்டாம்’ என, நெக் தலை­வர் செல்வராஜ் அறிவு­றுத்தி உள்­ளார்.நாமக்­கல், தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக்­குழு (நெக்) கொள்­முதல் விலை நிர்­ண­யம் செய்­கிறது.
ஜூலை, 1ல், 440 காசாக, கொள்­மு­தல் விலை நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.இந்­நி­லை­யில், கடந்த, 9ல், கொள்­மு­தல் விலை, 370 காசாக நிர்ண­யம் செய்யப்­பட்­டது.கடந்த, 11 நாட்­களில், கொள்­மு­தல் விலை, 110 காசு சரிந்­துள்ளது, பண்ணை­யாளர்­கள் மத்­தி­யில் கடும் அதிர்ச்சியை ஏற்­படுத்தி உள்­ளது.இதற்­கி­டை­யில், நெக் நிர்­ண­யிக்­கும் விலை­யில் இருந்து, 50 முதல், 60 காசு குறைத்து, வியா­பா­ரி­கள் கொள்­மு­தல் செய்­வ­தால், உற்­பத்தி செலவுக்கே கட்டு­ப­டி­யா­கா­மல், பண்ணை­யா­ளர்­கள் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலை நீடித்து வரு­கிறது.
அத­னால், 40 காசுக்கு மேல் குறைத்து, முட்­டை­களை விற்­பனை செய்ய வேண்­டாம் என, தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக்­குழு, நாமக்­கல் மண்டலத் தலை­வர் செல்வ­ராஜ் தெரிவித்­துள்­ளார்.
இது குறித்து, அவர் வெளி­யிட்ட அறிக்கை:ஐத­ரா­பாத், பர்­வாலா, ஹோஸ்­பேட் உள்ளிட்ட உற்­பத்தி மையங்­களில், லோடிங் ரேட் அதிகரித்­துள்­ளதை கருத்­தில் கொண்டால், இனி கண்டிப்­பாக விலை ஏறும் சூழல் உள்­ளது.அதன் தொடர்ச்­சி­யாக, ஹோஸ்­பேட், பெங்­க­ளூரு, மைசூரு உள்­ளிட்ட இடங்­களில், முட்டை விலை, இரண்டு காசு உயர்ந்­துள்­ளது. நாமக்­கல் மண்­ட­லத்தை பொறுத்தவரை, முட்­டைக்­கான தேவை நன்­றா­கவே உள்ளது.
மேலும், முட்டை இருப்­பும் இல்லை. தென் மேற்கு பரு­வ­மழை தீவி­ர­மாகி உள்­ளது உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், கேரளா முட்டை விற்­பனை மேலும் அதி­க­ரிக்­கும். ஆடி மாதம் முடி­வ­டை­யும் சூழல் உள்­ள­தால், தமிழக விற்­பனை சிறப்­பாக உள்ளது.அத­னால், முட்டை விலை ஏறும் சூழ்­நி­லையே உள்­ள­தால், பண்­ணை­யா­ளர்­கள், 40 காசுக்கு மேல் குறைத்து, முட்டை விற்­பனை செய்ய வேண்­டாம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)