தேசாபிமான, ‘பிராண்டு’ எஸ்.பி.ஐ., முதலிடம்தேசாபிமான, ‘பிராண்டு’ எஸ்.பி.ஐ., முதலிடம் ... நேஷனல் ஹவுசிங் வங்கி நிர்வாக  இயக்குனர் ராஜினாமா நேஷனல் ஹவுசிங் வங்கி நிர்வாக இயக்குனர் ராஜினாமா ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகள் நிலை இன்னும் சீராகவில்லை:‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2018
01:18

மும்பை:‘வாராக் கடன், மோச­மான நிதி நிலை ஆகி­ய­வற்றுக்கு ஈடாக, மூல­த­னத்தை அதி­க­ரிக்­காத வரை, இந்­திய வங்கி துறை­யின் வளர்ச்சி குறித்த மதிப்­பீடு, எதிர்­மறை பிரி­வி­லேயே நீடிக்­கும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘பிட்ச் ரேட்­டிங்ஸ்’ எச்­ச­ரித்­து உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:வங்­கி­க­ளின், 15,100 கோடி டாலர் வாராக் கடன், அத்­து­றை­யின் பல­வீ­ன­மான நிதி­யா­தா­ரத்­திற்கு இடர்ப்­பா­டான அம்சமா­கவே உள்­ளது.இதற்கு, வாராக் கட­னுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்­டி­யுள்­ள­தும், கடனை திரும்­பப் பெறும் நட­வ­டிக்­கை­களில் மந்­த­நி­லை­யும் கார­ணம் என­லாம்.
பலவீனம்
மோச­மான நிதி நிலை, அதி­க­ரித்து வரும் வாராக் கடன் ஆகி­யவற்­றுக்கு ஈடு கொடுக்­கும் வகை­யில், வங்­கி­கள், அவற்­றின் பல­வீ­ன­மான மூல­தன ஆதா­யத்தை வலுப்­ப­டுத்த நட­வடிக்கை எடுக்க வேண்­டும்.அவ்­வாறு செய்­யாத வரை, வங்கி துறை, எதிர்­மறை வளர்ச்­சிப் பிரி­வி­லேயே இருக்க நேரி­டும்.
பொது துறை­யைச் சேர்ந்த, 21 வங்­கி­களில், 11 வங்­கி­க­ளின், மூல­தன இருப்பு விகி­தம், ‘பேசல் – 3’ விதி­மு­றைப்­படி, நிர்ண­யிக்­கப்­பட்­டுள்ள, 8 சத­வீ­தத்­திற்­கும் குறை­வாக உள்­ளது.இந்த விதி­முறை, 2019, ஏப்­ர­லில் அம­லாக உள்­ளது. இத்­த­கைய சூழ­லில், இந்­திய வங்­கி­க­ளுக்கு, மூல­தன இருப்பு விகி­தத்தை உயர்த்­திக் கொள்ள, 4,000 – 5,000 கோடி டாலர் தேவை என,மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இதில், பெரும்­பான்மை தொகை, பொது துறை வங்கி­க­ளுக்கு தேவைப்­படும். ஆனால், அதை, பங்கு வெளி­யீட்­டின் மூலம் திரட்­டிக் கொள்ள முடி­யா­த­படி, பொது துறை வங்­கி­க­ளின் மூல­தன இருப்பு விகிதம் பல­வீ­ன­மாக உள்­ளது.அத­னால், மத்­திய அரசு, பொது துறை வங்­கி­ க­ளுக்கு, மேலும் அதிக அள­வில் பங்கு மூல­தனம் அளிக்க வேண்­டிய நிர்ப்பந்தம் ஏற்­படும்.மறு பங்கு மூலதனம்கடந்த, 2017, அக்­டோ­ப­ரில், ‘மறு பங்கு மூல­தன திட்­டத்­தின் கீழ், பொது துறை வங்­கி­க­ளுக்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய் பங்கு மூல­த­ன­மாக வழங்­கப்­படும்’ என, மத்­திய அரசு அறி­வித்­தது.அதன்­படி, கடன்பத்­தி­ரங்­கள் மூலம் வழங்க வேண்­டிய, 1.35 லட்சம் கோடி ரூபா­யில், 71 ஆயிரம் கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டுள்­ளது.
ஆனால், இத்­தொகை, வாராக் கட­னுக்கு அதிக நிதி ஒதுக்­கி­ய­தால் உண்டான இழப்பை ஈடு செய்து விட்­ட­தால், வங்­கி­ க­ளின் மூல­தன இருப்பு விகி­தம் உய­ர­வில்லை.மேலும், மறு பங்கு மூல­தன திட்­டத்­தில், வங்­கி­கள், நிதிச் சந்­தை­யில் இருந்து, 58 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்­டிக் கொள்ள வேண்­டும். வங்கி துறை உள்ள சூழ­லில், இது சாத்­தி­ய­மாக வாய்ப்­பில்லை.
அத­னால், பொது துறை வங்­கி­க­ளுக்கு, மத்­திய அரசு மேலும் பங்கு மூல­த­னம் அளிக்க வேண்­டிய சூழல் உரு­வா­கும்.எனி­னும், வங்கி துறை­யின் வாராக் கடன்­களை குறைக்க மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­கள், ஆறு­தல் அளிப்­ப­தாக உள்ளன.அதே­ச­ம­யம், சில்­லரை மற்­றும் சிறிய, நடுத்­தர நிறு­வன துறை­க­ளால் ஏற்­ப­ட­வுள்ள புதிய இடர்ப்­பா­டு­களை, வங்­கி­கள் எப்­படி சமா­ளிக்­கப் போகின்­றன என்­பது தான் கேள்வி. அத­னால், வாராக் கட­னாக மாற வாய்ப்­புள்ள கடன்­கள் அதி­க­ரிக்க கூடும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)