‘நிதி சேவை நிறுவனங்களுக்கு ‘சைபர் செக்யூரிட்டி’ முக்கியம்’‘நிதி சேவை நிறுவனங்களுக்கு ‘சைபர் செக்யூரிட்டி’ முக்கியம்’ ... அமெ­ரிக்­கா­வுக்கு யார் சொல்­வது? அமெ­ரிக்­கா­வுக்கு யார் சொல்­வது? ...
குறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்றுமதி குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2018
05:41

மும்பை: பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., காரணமாக, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களின் கடன் வளர்ச்சியும், ஏற்றுமதியும் குறைந்திருப்பது, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள, 'மின்ட் ஸ்ட்ரீட் மெமோ' என்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மற்றும் ஜி.எஸ்.டி., எனும், இரு அதிர்ச்சிகளை, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை சந்தித்துள்ளது. கடந்த, 2016. நவ., 8ல் அறிவிக்கப்பட்ட, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பணப்புழக்கம் குறைந்தது.அதனால், ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து தருவோர், பணம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். குறிப்பாக, ஆயத்த ஆடைகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரண துறைகளைச் சேர்ந்தோர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.சவால்அதுபோல, ஜி.எஸ்.டி.,யை பின்பற்றுவதால், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களின் நடைமுறைச் செலவினம் உயர்ந்துள்ளது. பெரும்பான்மை நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.அவற்றில், 60 சதவீத நிறுவனங்கள், புதிய வரி நடைமுறைக்கு தயாராகவில்லை. அவற்றின் இயலாமை, போதிய நிதியின்மை போன்றவை, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கு, முக்கிய தடைக்கல்லாக உள்ளன. பெரும்பான்மை நிறுவனங்கள், குறு,சிறு தொழில்களில் உள்ளதால், போதுமான கடன்களை திரட்டுவது, சவாலாக உள்ளது.ஐ.எப்.சி., ஆய்வறிக்கைப்படி, வங்கிகள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கிய கடன், 2015ல் குறைந்து, 2016 ஏப்ரல் வரை, 1.6 சதவீதமாக இருந்தது. அதன்பின், அக்டோபர் வரை வளர்ச்சி கண்டு, நவம்பரில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், சரிந்தது.கடந்த, 2014- -16 வரை, வங்கிகளின், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை கடன் வளர்ச்சி குறைய, பல காரணங்களை கூறலாம். குறிப்பாக, ஒட்டுமொத்த பொருளாதார மந்தநிலை, வாராக் கடன் உயர்வு, உணவு மற்றும் வேளாண் பதப்படுத்தும் பிரிவுகளை, வேளாண் துறைக்கு மாற்றியது போன்றவற்றால், கடன் வளர்ச்சி குறைந்தது.உயர்ந்ததுஆனால், 2017 பிப்ரவரிக்கு பின், சமீப காலாண்டுகளாக, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கும் நுண்கடன் வளர்ச்சி, 2015 மத்தியில் காணப்பட்ட அளவை எட்டியுள்ளது.இந்தாண்டு, ஜன., - மே வரையிலான ஐந்து மாதங்களில், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் பிரிவின் கடன் வளர்ச்சி, சராசரியாக, 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த, மார்ச் வரை, வங்கிகள் வழங்கிய கடனில், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள், பிரிவின் பங்கு, 14 சதவீதமாக குறைந்துள்ளது.இது, 2007ல், 17 சதவீதமாக இருந்தது; இதற்கு, 2000ம் ஆண்டின் பிற்பாதியில், வங்கிகள் பெரிய நிறுவனங்களுக்கு அளவிற்கு அதிகமாக கடன் வழங்கியதும் காரணமாகும். இந்த கடன்கள், தற்போது, இடர்ப்பாட்டு கடன்களாக மாறியுள்ளன.மேலும், நடுத்தர நிறுவனங்களின் கடன் வளர்ச்சி குறைந்துள்ள வேளையில், அவற்றின் வாராக் கடன் விகிதம் அதிகரித்துள்ளது. இது, பொதுத் துறை வங்கிகளில் மிக அதிகமாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)