வரித்தாக்கல் நிலை அறிவது எப்படி?வரித்தாக்கல் நிலை அறிவது எப்படி? ... இந்­திய சேமிப்பு விகி­தம் குறைவு இந்­திய சேமிப்பு விகி­தம் குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.ஐ.பி., -– தொடர் வைப்பு நிதி முத­லீடு யாருக்கு ஏற்­றவை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
07:00

சிறுக, சிறுக சேமிக்க உதவும், எஸ்.ஐ.பி., தொடர் வைப்பு நிதி ஒரே மாதிரியானவை என்றாலும், இவை அளிக்கும் பலன்கள் வேறுபட்டவை.

முத­லீடு செய்ய பெரிய தொகை கைவ­சம் இல்­லா­த­வர்­கள், சிறுக, சிறுக சேமிக்­கும் வழியை நாடு­கின்­ற­னர். இந்த வகை சேமிப்­பிற்கு, ‘ஆர்.டி’ என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும் தொடர் வைப்பு நிதி உத­வு­கிறது. இதே போலவே, எஸ்.ஐ.பி., எனப்­படும், சிஸ்­ட­மேட்­டிக் இன்­வெஸ்ட்­மண்ட் பிளா­னும் கைகொ­டுக்­கிறது. இவற்­றில் மாத அல்­லது காலாண்டு அடிப்­ப­டை­யில் முத­லீடு செய்­ய­லாம். இரண்­டுமே சீரான சேமிப்­பின் பலனை அளிக்­கின்­றன. அடிப்­ப­டை­யில் ஒரே மாதி­ரி­யா­னவை என்­றா­லும், இவை வேறு­பாடு கொண்­டவை. மேலும், இவை பொருந்­தக்­கூ­டிய முத­லீட்­டா­ளர்­களும், வேறு வேறு ரகத்­தைச்­சேர்ந்­த­வர்­கள்.

கடன்­சார் முத­லீடு :
ஆர்.டி., எனப்­படும் தொடர் வைப்பு நிதி, கடன்­சார் முத­லீட்­டின் கீழ் வரு­கிறது. இதில் குறிப்­பிட்ட கால அள­விற்கு மா­தந்­தோ­றும் ஒரு தொகையை முத­லீடு செய்­ய­லாம். வங்கி அல்­லது அஞ்­ச­லகத்­தில் இதை துவக்­க­லாம். வழக்­க­மாக, 12 மாதங்­கள் முதல், 120 மாதங்­கள் வரை இதன் கால அளவு அமை­யும். இதற்­கான பல­னும் நிர்­ண­யிக்­கப்­பட்­ட­தாக இருக்­கும். தொகை மற்­றும் கால அள­விற்கு ஏற்ப, இதற்­கான வட்­டித்­தொகை அமை­யும். இதில், ‘ரிஸ்க்’ அம்­ச­மும் மிக குறைவு.பொது­வாக, அதிக ரிஸ்க் எடுக்க விரும்­பாத, நிச்­சய பலனை எதிர்­பாக்­கும் முத­லீட்­டா­ளர்­கள் இதை நாடு­கின்­ற­னர். குறு­கிய கால இலக்­கிற்கு, இந்த வகை முத­லீட்டை நாட­லாம்.

விடு­மு­றைக்­கான சேமிப்பு போன்­ற­ வற்­றுக்கு, இது கைகொ­டுக்­கும். ஆனால், கடன்­சார் முத­லீடு என்­ப­தால், இதன் பலன் பண­வீக்­கத்தை வெல்­லக்­கூ­டி­யது அல்ல.இதற்கு மாறாக, எஸ்.ஐ.பி.,என்­பது, மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில் ஒரு வகை­யா­கும். மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில் மொத்­த­மாக முத­லீடு செய்­ய­லாம். இல்லை எனில் குறிப்­பிட்ட கால அள­வில் முத­லீடு செய்­யும், எஸ்.ஐ.பி., வழியை நாட­லாம்.

கடன்­சார் நிதி­கள், சம­பங்கு நிதி­கள், இரண்டும் கலந்து ஹைபிரிட் நிதி­கள் என, தேவை­கேற்ப எந்த வகை­யான நிதி­யை­யும் தேர்வு செய்து அதில், எஸ்.ஐ.பி., முத­லீட்டை மேற்­கொள்­ள­லாம். மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­க­ளி­லான முத­லீடு, நிச்­ச­ய­மான பலனை அளிக்க கூடி­யவை அல்ல; இவற்­றின் பலன், சந்­தை­யின் ஏற்ற இறக்­கங்­க­ளுக்கு உட்­பட்­டவை. எனி­னும், எஸ்.ஐ.பி., முறை­யில் முத­லீடு செய்­யும் போது சந்­தை­யின் ஏற்ற இறக்­கங்­க­ளுக்கு ஏற்ப, பல்­வேறு கட்­டத்­தில் யூனிட்­களை வாங்­கு­வ­தால், அதன் சரா­சரி விளைவு சாத­க­மாக அமை­யும். இந்த முறை­யில், விரும்­பிய தொகையை, விரும்­பிய கால அள­வில் முத­லீடு செய்து வர­லாம்.

எது ஏற்­றது?
தொடர் வைப்பு நிதி, நிர்­ண­யிக்­கப்­பட்ட பலனை அளிக்க கூடி­யது என்­றா­லும், எஸ்.ஐ.பி., முத­லீடு பல்­வேறு சாத­கங்­களை கொண்­டது. இதில் விரும்­பிய போது, முத­லீட்டை நிறுத்­திக்­கொள்­ள­லாம் அல்­லது பணத்தை விலக்கி கொள்­ள­லாம். அத­னால் பல­னில் பாதிப்பு இருக்­காது. தொடர்­வைப்பு நிதி­யில் இடையே விலக்கி கொண்­டால், வட்டி விகி­தம் குறை­யும். மேலும், கடன்­சார் நிதி­களில் கூட தொடர் வைப்பு நிதியை விட கூடு­தல் பலன்­பெ­றும் வாய்ப்பு உள்­ளது. வரி­வி­திப்­பும் இதில் சாத­க­மாக அமை­கிறது. பொது­வாக, குறை­வான வரு­மான வரி வரம்­பில் இருப்­ப­வர்­கள் மற்­றும் ரிஸ்க் எடுக்க விரும்­பா­த­வர்­க­ளுக்கு, தொடர் வைப்பு நிதி ஏற்­றவை. எஸ்.ஐ.பி., சம­பங்கு மற்­றும் கடன்­சார் முத­லீட்­டின் பலனை இணைந்து அளிக்க வல்­லவை.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)