கமாடிட்டி சந்தை நிலவரம்கமாடிட்டி சந்தை நிலவரம் ... மீண்டும் புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மதிப்­பு­சார் முத­லீட்டு சித்­தாந்­தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
07:07

சித்­தாந்­தம், கலா­சா­ரம், பண்­பாடு ஆகி­ய­வற்றை முத­லீட்டு துறை­யோடு நாம் அதி­கம் சம்­பந்­தப்­ப­டுத்­து­வ­தில்லை. அவற்றை வர்த்­த­கத்­திற்­கும், முத­லீட்­டிற்­கும் அப்­பாற்­பட்ட அம்­சங்­க­ளாக தனி­மைப்­ப­டுத்தி பார்ப்­ப­தையே பல­ரும் விரும்­பு­கின்­ற­னர்.அப்­படி அணு­கு­வ­தால், முத­லீடு பற்­றிய உட்­பு­ரி­தல் நம்­மில் பல­ருக்கு ஏற்­ப­டு­வ­தில்லை. நாம் முத­லீ­டு­களை அணு­கும் முறை, மேலோட்ட­மாக அமை­வ­தன் முக்­கிய கார­ணம், அடிப்­படை புரி­த­லில் இருக்­கும் இடை­வெ­ளி­யும், முழு­மை­யின்­மை­யும் மட்டுமே.

முத­லீட்டை சரி­யாக புரிந்­து­ணர வேண்­டு­மா­னால், நாம், இந்த மூன்று அம்­சங்­களை பற்­றிய சரி­யான புரி­தலை முத­லில் வளர்த்­துக் கொள்ள வேண்­டும்.சித்­தாந்­தங்­களில் இருந்து மட்­டுமே ஒரு­வ­ரின் புரி­தல் நோக்­கிய பய­ணம் துவங்க வேண்­டும்.ஒரு­வர் முத­லீட்டு கலையை கற்க விரும்­பி­னால், முதலில் வெவ்­வேறு சித்­தாந்­தங்­களை புரிந்­து­ணர வேண்­டும். முத­லீட்டு சித்­தாந்­தங்­கள் பல, முத­லீட்டு அறி­ஞர்­கள் மொழிந்து வழி­வ­ரு­பவை. வெவ்­வேறு கால­கட்­டங்­களில், பொரு­ளா­தார சூழல்­க­ளுக்கு ஏற்ப, புதிய சித்­தாந்­தங்­கள் உரு­வா­கின. அதே சூழல்­கள் மீண்­டும் உரு­வா­கும் போது, சூழ­லுக்கு ஏற்ற அந்த சித்­தாந்­தங்­கள் கையா­ளப்­பட்டு, வெற்­றி­யும் காணப்­பட்­டன.

இதற்கு, 90 ஆண்டு வரலாறு உண்டு. 1929ல் ஏற்­பட்ட, ‘கிரேட் டிப்­ரெ­ஷன்’ எனும் பெரும் பொரு­ளா­தார சரி­வுக்கு பின், உரு­வான இருண்ட பொரு­ளா­தார சூழ­லில் இருந்து பிறந்­தது தான் இந்த முத­லீட்டு சித்­தாந்­தங்­கள்.மதிப்­பு­சார் முத­லீடு இதன் முதல் வடி­வம். காலப்­போக்­கில் பல புதிய முத­லீட்டு சித்­தாந்­தங்­கள் உரு­வாகி வளர்ந்தன. அந்த காலத்­தி­லி­ருந்த அச்ச உணர்­வின் உச்ச நிலை­யில், யாரும் பங்­கு­களை வாங்க விரும்­பாத சூழலே நில­வி­யது. அத்­த­கைய சூழ­லில், தமக்­குள் தைரி­யத்தை வர­வ­ழைத்­துக்­கொள்ள, ஒரு முதலீட்­டா­ளர் கண்­டெ­டுத்த கணித வழி­முறையே மதிப்­பு­சார் முத­லீட்­டின் ஆரம்­பம்.

அடிப்­ப­டை­யில், நிறு­வ­னத்தை மூடி, அதன் எல்லா சொத்­து­க­ளை­யும் விற்­றால் கிடைக்­கும் பணத்தை விட குறை­வான மதிப்­பில், அந்த நிறு­வன பங்­கு­களை வாங்­கக் கூட யாரும் விரும்­பாத கால­கட்­டத்­தில் பிறந்­தது, மதிப்­பு­சார் முத­லீடு. அப்­ப­டிப்­பட்ட சூழ­லில், துணிவை சேக­ரிக்க, ஒரு வழி­மு­றையை உரு­வாக்கி, அதன் மூலம் வெற்­றி­யும் கண்­ட­வர், பெஞ்­ச­மின் கிர­ஹாம். இவர் நவீன முத­லீட்­டின் தந்­தை­யா­க­வும், மதிப்­பு­சார் முத­லீட்­டின் நிறு­வ­ன­ரா­க­வும் கரு­தப்­படுபவர்.

அச்­சப் பெருக்கு நில­விய கால­கட்­டத்­தில், கிர­ஹாம் தன் முத­லீட்டு முறையை பயன்­ப­டுத்தி வெற்றி கண்ட­தோடு, நியூ­யார்க் நக­ரின் கொலம்­பியா பல்­க­லைக்­கழ­கத்­தில், அதை பல­ருக்கு சொல்­லி­யும் தந்­தார். இன்று, உலக முத­லீட்­டா­ள­ரின் தலை­ம­கன்­க­ளாக விளங்­கும் வாரன் பபெட் மற்­றும் சார்லி முங்­க­ரும் அவ­ரது பிர­தான சீடர்­க­ளாக அங்கு பாடம் படித்­த­னர். இன்­ற­ள­வி­லும், கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கம் இந்த சித்­தாந்­தத்­தின் தலை­மை­யி­ட­மாக விளங்­கு­கிறது. பங்­கு­களை வாங்­கவே கூடாது என்ற அச்ச சூழ­லில் பிறந்து, இந்த சித்­தாந்­தப்­படி செய்­தால் நிச்­ச­யம் தோல்வி காண முடி­யாது என்ற நம்­பிக்­கையை வளர்த்து, முத­லீட்டு வர­லாற்­றில் நீங்கா இடம் பிடித்­தார் கிர­ஹாம்.

இன்­ற­ள­வி­லும் மதிப்­பு­சார் முத­லீட்டு சித்­தாந்­தம் பல­ரா­லும் கற்கப்பட்டு, பிரயோ­கிக்­கப்­படு­கிறது.பிற சித்­தாந்­தங்­கள் குறித்து, அடுத்த வாரம் சொல்­கி­றேன்...

-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)