துவரம் பருப்பு விலை சரிவுதுவரம் பருப்பு விலை சரிவு ... முத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழி முத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழி ...
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
00:56

கச்சா எண்ணெய்

சில மாதங்­க­ளுக்­குப் பின், கடந்த வாரம், எண்­ணெய் விலை­யில் அதி­கப்­ப­டி­யான ஏற்­றத்­தாழ்­வு­கள் நிகழ்ந்­தன. ஆரம்ப நாட்­களில் உயர்ந்­தும், பின்­னர் விலை சரிந்­தும் காணப்­பட்­டது.
ஈரான் நாட்­டின் மீதான அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தா­ரத் தடை, நவம்­பர் மாதம் முதல் அம­லுக்கு வரும் சூழ­லில், உலக அள­வில் கச்சா எண்­ணெய் தட்­டுப்­பாடு நில­வும் என்ற அச்­சத்­தில், விலை­யேற்­றம் காணப்­பட்­டது.


ஆனால், ‘ஓபெக்’ கூட்­ட­மைப்பு நாடு­க­ளின், ஆகஸ்ட் மாத தின­சரி உற்­பத்தி, 2 லட்­சத்து, 20 ஆயி­ரம் பேரல்­கள் அதி­க­ரித்து, 32.79 மில்­லி­யன் பேரல்­களை எட்­டி­யது. இது, இந்த ஆண்­டின் அதி­க­பட்ச உற்­பத்தி அள­வா­கும். மேலும், லிபி­யா­வின் உற்­பத்­தி­யும் அதி­க­ரித்­தது. இதை­ய­டுத்து, விலை, ‘மள­ம­ள­’வென சரிய ஆரம்­பித்­தது.

மேலும், அமெ­ரிக்­கா­வின் வர்த்­தக மோதல் போக்­கால், சீனா­வின் தொழில் துறை வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்­தில் குறைந்­தது. இதை­ய­டுத்து, நாட்­டின் இறக்­கு­மதி தேவை குறை­யும் என்ற கோணத்­தி­லும், எண்­ணெய் விலை வீழ்ச்சி அடைந்­தது.


அமெ­ரிக்­கா­வின் எண்­ணெய் உற்­பத்தி பகு­தி­களில் சூறா­வளி வீசக்­கூ­டும் என்ற அறி­விப்­பால், அப்­ப­கு­தி­யில் இயங்கி வரும் எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்­கள் மூடப்­பட்­டன. இத­னால், உற்­பத்தி குறைய வாய்ப்பு இருக்­கிறது.மேலும், அமெ­ரிக்க எண்­ணெய் இருப்பு, 4.3 மில்­லி­யன் பேரல்­கள் குறைந்து, 401.49 மில்­லி­யன் பேரல்­க­ளாக குறைந்­துள்­ளது. இது, 2011ம் ஆண்டு பிப்­ர­வரி மாதத்தை விட குறை­வா­கும். இத­னால், சர்­வ­தேச சந்­தை­யில் விலை வீழ்ச்சி, சிறி­த­ளவு கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.
உல­க­ள­வில், அர­சி­யல் சார்ந்த முடி­வு­க­ளால், எண்­ணெய் மற்­றும் கமா­டிட்டி பொருட்­க­ளின் விலை, அதிக ஏற்­றத்­தாழ்­வு­களை சந்­தித்து வரு­கிறது.

தங்கம் வெள்ளி


சர்­வ­தேச சந்­தை­யில் கடந்த வாரம், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை சரி­வில் வர்த்­த­க­மா­கின.
அமெ­ரிக்­கா­வில் ஒவ்­வொரு மாத­மும், முதல் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று, அர­சில், விவ­சா­யம் சாராத துறை­களில் புதி­தாக பணி வழங்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை வெளி­யா­கும்.


ஆகஸ்ட் மாதத்­தில், எதிர்­பார்த்­ததை விட அதிக அள­வி­லான பணி­யி­டங்­கள் நிரப்­ப­பட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக, பொரு­ளா­தா­ரம் வளர்ச்­சிப் பாதை­யில் உள்­ளது என்ற கண்­ணோட்­டம் ஏற்­பட்­டுள்­ளது.இதன் தொடர்ச்­சி­யாக, அமெ­ரிக்க மத்­திய வங்கி, வட்டி விகி­தத்தை, இம்­மா­தம் அல்­லது வரும் டிசம்­ப­ரில் அதி­க­ரிக்­கும் என, கரு­தப்­ப­டு­கிறது.


இதை­ய­டுத்து, அமெ­ரிக்க நாணய குறி­யீடு வலு­வ­டைந்­த­தால், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை சரி­வில் வியா­பா­ரம் ஆகி வரு­கிறது.பொது­வா­கவே வட்டி விகி­தம் உய­ரும்­போது, தங்­கம் மீதான முத­லீட்டு ஆர்­வம் குறைந்து, அரசு கரு­வூ­லங்­கள் மற்­றும் அது சார்ந்த கடன் பத்­தி­ரங்­களில் மீது முத­லீடு செய்­வது வழக்­க­மா­கும்.


இத­னால், முத­லீட்­டா­ளர்­கள் தொடர்ந்து தங்­கம் மீதான முத­லீட்­டைக் குறைத்து, அரசு கரு­வூ­லங்­களில் முத­லீ­டு­கள் செய்து வரு­கின்­ற­னர்.இருப்­பி­னும், சர்­வ­தேச சந்­தை­யோடு ஒப்­பிட்­டுப் பார்த்­தால், நம் உள்­நாட்டு ஆப­ரண சந்­தை­யில் விலை சரிவு குறை­வா­கவே இருந்­தது.
இதற்கு முக்­கிய கார­ணம், டால­ருக்கு எதி­ரான இந்­திய ரூபாய் மதிப்­பின் வர­லாற்று சரி­வா­கும்.


நடப்பு நிதி­யாண்­டில், ரிசர்வ் வங்கி, 8.6 டன் தங்­கத்தை கொள்­மு­தல் செய்­துள்­ளது. ஒன்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பின், இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன், 2009ம் ஆண்­டில், பன்­னாட்டு நிதி­யத்­தி­ட­மி­ருந்து, 200 டன் கொள்­மு­தல் செய்­தது. தற்­போது, மொத்த
தங்­கம் இருப்பு, 557.77 டன்.


உலக அள­வில், மத்­திய வங்­கி­க­ளின் மொத்த தங்க இருப்பு பட்­டி­ய­லில், இந்­தியா, 11-ம் இடத்­தில் உள்­ளது. அமெ­ரிக்கா, தொடர்ந்து முதல் இடத்தை வகித்து வரு­கிறது.ரூபா­யின் மதிப்பு சரிந்து வரும் சூழ­லில், தங்­கம் இறக்­கு­மதி அதி­க­ரிக்­கும் எனில், மீண்­டும் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை அதி­க­ரித்து, நாட்­டின் நாண­யம் மேலும் வீழ்ச்சி அடை­யும்.


செம்பு

கடந்த வாரம் சரி­வில் வர்த்­த­க­மான செம்பு, இந்த ஆண்டு துவக்­கம் முதல், 8 மாதங்­க­ளாக அதி­க­ரித்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.அமெ­ரிக்க அதி­பர், வெள்­ளி­யன்று வெளி­யிட்ட
அறிக்­கை­யில், வர்த்­தக மோதல் தொடர்­பாக சீனா­வு­ட­னான பேச்­சில் சுமுக நிலை எட்­டப்­ப­ட­வில்லை என்­றும், பேச்சு மீண்­டும் தொட­ரும் என்­றும் அறி­வித்­தார்.


தற்­போது, அமெ­ரிக்கா கூடு­த­லாக, 200 பில்­லி­யன் மதிப்­பி­லான சீன இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு வரி விதிக்க தயா­ராகி வரு­கிறது.உலக அள­வில், செம்பு நுகர்­வில், சீனா முத­லி­டம் வகிக்­கிறது. சீனா­வின் தேவை மற்­றும் இறக்­கு­ம­தியை பொறுத்து, செம்பு விலை­யில் மாற்­றங்­கள் ஏற்­படும்.


சில மாதங்­க­ளாக, சீனா­வின் நுகர்வு தேவை குறைந்­த­தன் கார­ண­மாக, விலை கடு­மை­யாக சரிந்­துள்­ளது. வரும் நாட்­களில் இத்­த­கைய போக்கு கட்­டுக்­குள் கொண்டு வரப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)