குடும்ப நிறுவனங்களில் இந்தியாவுக்கு 3வது இடம்குடும்ப நிறுவனங்களில் இந்தியாவுக்கு 3வது இடம் ... எத்தனால் தயாரிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கை எத்தனால் தயாரிப்புக்கு அனுமதி வழங்க கோரிக்கை ...
காஸ் சிலிண்டரில் ‘அயர்ன் பாக்ஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
00:04

சென்னை:இந்­தி­யன் ஆயில் நிறு­வ­னம், சமை­யல் காஸ் சிலிண்­டரை பயன்­ப­டுத்தி, துணி­களை தேய்க்­கும் வகை­யில் அயர்ன் பாக்ஸ்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.


பொதுத்­து­றை­யைச் சேர்ந்த இந்­தி­யன் ஆயில் நிறு­வ­னம், வீடு­க­ளுக்கு, 14.20 கிலோ; ஓட்­டல் உள்­ளிட்ட வணிக பயன்­பா­டு­க­ளுக்கு, 19 கிலோ எடை­யில் சமை­யல் காஸ் சிலிண்­டர்­களை
விற்­பனை செய்­கிறது. மேலும், 5 கிலோ சமை­யல் காஸ் சிலிண்­ட­ரை­யும் விற்­பனை செய்­கிறது. இந்­நி­லை­யில், சென்­னை­யில், இந்­தி­யன் ஆயில் நிறு­வ­னம், 5 கிலோ சமை­யல் காஸ் சிலிண்­ட­ரில் இயங்­கும் அயர்ன் பாக்ஸ்­களை, நேற்று அறி­மு­கம் செய்­து உள்­ளது.


இந்­தி­யன் ஆயில் நிறு­வ­னம் முதல் கட்­ட­மாக, 100 சல­வைத் தொழி­லா­ளர்­க­ளுக்கு, காஸ் சிலிண்­ட­ரில் இயங்­கும் அயர்ன் பாக்ஸ்­களை வழங்­கி­யது.அதன்­படி, 5 கிலோ காஸ் சிலிண்­டர், ரெகு­லேட்­டர், 1.5 மீட்­டர் நீள­முள்ள ரப்­பர் குழாய் ஆகி­ய­வற்­றின் மொத்த விலை, 1,366 ரூபாய். அயர்ன்­பாக்­சின் விலை, 7,000 ரூபாய்.சிலிண்­ட­ரில் காஸ் தீர்ந்த பின், 422 ரூபாய் செலுத்தி, காஸ் நிரப்­பிக்­கொள்­ள­லாம். இந்த விலை மாதந்­தோ­றும் மாறு­த­லுக்கு உட்­பட்­டது.


இது­கு­றித்து, இந்­தி­யன் ஆயில் நிறு­வ­னத்­தின் காஸ் சிலிண்­டர் பிரி­விற்­கான, சென்னை, துணை பொது மேலா­ளர், எஸ்.குமார் கூறி­ய­தா­வது:இவ்­வகை அயர்ன் பாக்­சில், ஓர் ஆடையை அயர்ன் செய்ய, 50 காசு மட்­டுமே செல­வா­கும். இதுவே, கரி­யைப் பயன்­ப­டுத்­தும் அயர்ன்­பாக்­சில், 1.10 ரூபாய்க்­கும் மேல் செல­வா­கிறது. ஐந்து கிலோ சிலிண்­ட­ரில், 1,100 ஆடை­கள் வரை அயர்ன் செய்ய முடி­யும். இதன் வாயி­லாக, கரியை எரிப்­பது தவிர்க்­கப்­படும். சுற்­றுச்­சூ­ழல் மாச­டை­வ­தும் தடுக்­கப்­படும்.


சமை­யல் காஸ் சிலிண்­ட­ரில் இயங்­கும் அயர்ன்­பாக்ஸ் தொடர்­பான விப­ரங்­கள் மற்­றும் வழி­மு­றை­களை, வீடு­க­ளுக்கு காஸ் சிலிண்­டர் சப்ளை செய்­யும் ஏஜன்­சி­களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்­ள­லாம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகம் ... மேலும்
business news
புதுடில்லி : டாடா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ் நிறுவனம், இந்தியாவில் பல்வேறு விதமான ஏசி., மற்றும் ... மேலும்
business news
புதுடில்லி : சோனி இந்தியா நிறுவனம், பல்வேறு விதமான புதிய ரக டிவி.க்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் ... மேலும்
business news
மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, மூன்று வங்­கி­களை இணைக்­கும் திட்­டத்தை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
T.Ramanathan - Colombo,Sri Lanka
15-செப்-201818:39:20 IST Report Abuse
T.Ramanathan Welcome invention.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)