டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதியாளர் தவிப்பு டாலர் மதிப்பு உயர்வால் இறக்குமதியாளர் தவிப்பு ... நாளை பங்கு வெளியீட்டுக்கு வருகிறது:‘இர்கான் இண்டர்நேஷனல்’ நிறுவனம் நாளை பங்கு வெளியீட்டுக்கு வருகிறது:‘இர்கான் இண்டர்நேஷனல்’ நிறுவனம் ...
ஊதியத்தை விருப்பம் போல உயர்த்தலாம் பொது நிறுவனங்களுக்கு அரசு அனுமதி தேவையில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2018
00:11

புதுடில்லி:பொது நிறு­வ­னங்­கள், அவற்­றின் நிர்­வா­கி­களின் ஊதி­யத்தை உயர்த்த, இனி மத்­திய அர­சின் அனு­மதி தேவை இல்லை.


பொது மற்­றும் தனி­யார் நிறு­வ­னங்­கள், நிறு­வன சட்­டம், 2013ன் கீழ், செயல்­பட்டு வரு­கின்றன. 200க்கும் மேற்­பட்ட பங்கு முத­லீட்­டா­ளர்­கள் உள்ள நிறு­வ­னங்­கள், பொது நிறு­வ­ன­மாக கரு­தப்­படும். இவை, கார்ப்­ப­ரேட் நிர்­வாக நடை­மு­றை­களை, கண்­டிப்­பாக கடை­பி­டிக்க வேண்­டும்.
வரம்புஇந்­நி­று­வ­னங்­கள் அவற்­றின், நிகர லாப அடிப்­ப­டை­யில், நிர்­வா­கி­களின் ஊதிய வரம்பை நிர்­ண­யிக்­க­லாம். இருந்­த­போ­தி­லும், அதற்­கும் கட்­டுப்­பாடு உள்­ளது.


அதன்­படி, ஒரு நிறு­வ­னத்­தின் செயல் சாரா இயக்­கு­ன­ருக்­கான ஊதி­யம், நிகர லாபத்­தில், 1 சத­வீ­தத்­திற்கு அதி­க­மாக இருக்­கக் கூடாது.இது, முழு நேர இயக்­கு­னர்­கள் மற்­றும் நிர்­வாக இயக்­கு­னர்­க­ளுக்கு, 10 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வகை­யில், ஒரு நிறு­வ­னத்­தின் நிகர லாபத்­தில், 11 சத­வீ­தத்­திற்கு மேல், நிர்­வா­கி­களின் ஊதி­யச் செல­வி­னம் இருக்­கக் கூடாது என்ற விதி­முறை, தற்­போது தளர்த்­தப்­பட்­டுள்­ளது.


இது குறித்து, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்கை:பொது நிறு­வ­னங்­கள், அவற்­றின் நிகர லாபத்­தில், 11 சத­வீ­தத்­திற்கு மேல், நிர்­வா­கி­க­ளுக்கு ஊதி­யம் வழங்க, அமைச்­ச­கத்­தி­டம் அனு­மதி பெறும் விதி­முறை தளர்த்­தப்­ப­டு­கிறது.


இனி, பொது நிறு­வ­னங்­கள், மத்­திய அர­சின் அனு­ம­தி­யின்றி, விருப்­பம் போல நிர்­வா­கி­க­ளுக்கு ஊதி­யம் வழங்­க­லாம். ஆனால், அந்த ஊதி­யத்­திற்கு, 75 சத­வீத பங்கு முத­லீட்­டா­ளர்­கள் அனு­ம­தியை பெற வேண்­டும். இதற்­காக, பங்கு முத­லீட்­டா­ளர்­களின் கூட்­டத்­தில், சிறப்பு தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டும்.


கொள்கை


‘சிறிய அரசு – அதி­க­பட்ச நிர்­வா­கம்’ என்ற மத்­திய அர­சின் கொள்­கைப்­படி, இந்த விதி­முறை தளர்த்­தப்­பட்­டுள்­ளது. தொழில் செய்­வதை சுல­ப­மாக்­கும் நோக்­கத்­தில், இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. புதிய விதி­முறை, செப்., 12 முதல் அம­லுக்கு வந்­துள்­ளது.ஏற்­க­னவே ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள், நிர்­வா­கி­க­ளுக்கு நிர்­ண­யித்த வரம்­பிற்கு மேல் ஊதி­யம் வழங்க அனு­மதி கோரி, அமைச்­ச­கத்­திற்கு விண்­ணப்­பித்­துள்ளன.


இந்­நி­று­வ­னங்­கள், அடுத்த ஓராண்­டுக்­குள், பங்கு முத­லீட்­டா­ளர்­களின் ஒப்­பு­த­லு­டன், நிர்­வா­கி­களின் ஊதி­யத்தை உயர்த்­திக் கொள்­ள­லாம்.இழப்பை சந்­தித்து வரும் நிறு­வ­னங்­கள் அல்­லது போதிய லாப­மீட்­டாத நிறு­வ­னங்­கள், நிறு­வ­னங்­கள் சட்­டம், அட்­ட­வணை, 5ன்படி, ஊதி­யம் வழங்க வேண்­டும். இதற்­கும், மத்­திய அர­சின் ஒப்­பு­தல் தேவை­யில்லை


தற்­போது, இந்த அட்­ட­வ­ணைப்­படி, நிறு­வ­னங்­கள், நிர்­வா­கி­களை நிய­மிக்­க­வும், அவர்­க­ளுக்
­கான ஊதி­யத்­திற்­கும், ‘எம்.ஆர்–2’ என்ற மின்­னணு படி­வத்­தில் விண்­ணப்­பிக்­கின்றன.இனி, நிர்­வா­கி­களின் நிய­ம­னத்­திற்கு மட்­டும், இந்த படி­வத்தை பயன்­ப­டுத்­த­லாம். ஊதிய ஒப்­பு­த­லுக்கு பயன்­ப­டுத்த தேவை­யில்லைஇவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.


திற­மைக்கு ஏற்ற ஊதி­யம்


நாட்­டில், 70 ஆயி­ரம் பொது நிறு­வ­னங்­கள் உள்ளன. விதி­முறை தளர்­வால், இனி நிறு­வ­னங்­கள், திற­மை­யான நிர்­வா­கி­களை, கூடு­தல் ஊதி­யத்­தில் நிய­மிக்க முடி­யும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)