பதிவு செய்த நாள்
17 செப்2018
23:21
ஆப்பிள் நிறுவனம், கடைசியாக அறிமுகப்படுத்திய போன், ஐபோன் X தான். அதன் பிறகு, ஓராண்டு கழித்து, ஆப்பிளின் தனித்தன்மைகளுடன், புதிய அம்சங்களையும் சேர்த்து, முதல் முறையாக இரண்டு சிம்கள் பயன்படுத்தும் வகையில், ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR ஆகிய மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஒரு ஸ்மார்ட் வாட்சையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
மூன்று ஸ்மார்ட்போன்களும், ‘ஐபோன் XS’ பாணியிலேயே நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆப்பிளின் தனித்துவமான நாட்ச், எட்ஜ்–-டு–-எட்ஜ் டிஸ்பிளே, இரண்டு பக்கங்களிலும் ‘கிளாசி’ மேற்பரப்பு ஆகிய அம்சங்கள் மூன்று மாடல்களிலும் இடம் பெற்றுள்ளன.
மூன்று மாடல்களிலும், ஒயர்லெஸ் சார்ஜிங், நீர் மற்றும் துாசி தடுப்புப் பாதுகாப்பு, பேஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள டூயல் சிம் அம்சமானது, ஒரு வழக்கமான சிம்முடன், ஒரு இ – -சிம் இணைந்த வடிவமாகும்.
மூன்று ஐபோன் மாடல்களிலும், தலா மூன்று விதமான இன்டர்னல் ஸ்டோரேஜ் திறன் கொண்ட வேரியன்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள், செப்டம்பர் 28ம் தேதியும், ஐபோன் XR மாடல், அக்டோபர் 26ம் தேதியும், இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டோர்கள், ஆன்லைன் விற்பனையகங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
விலை:
ஐபோன் XS –
ரூ.99,900 (64 ஜி.பி.,), ரூ.1,14,900 (256 ஜி.பி.,) ரூ.1,34,900 (512 ஜி.பி.,)
ஐபோன் XS மேக்ஸ் –
ரூ.1,09,900 (64 ஜி.பி.,) ரூ.1,24,900 (256 ஜி.பி.,)ரூ.1,44,900 (512 ஜி.பி.,)
ஐபோன் XR – ரூ.76,900 (64 ஜி.பி.,), ரூ.81,900 (128 ஜி.பி.,) ரூ.91,900 (256 ஜி.பி.,)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|