மூன்று பொது துறை வங்கிகள் இணைப்புக்கு வரவேற்பு; நிர்வாக செயல்பாடுகள் மேம்படும் என, ‘மூடிஸ்’ கருத்துமூன்று பொது துறை வங்கிகள் இணைப்புக்கு வரவேற்பு; நிர்வாக செயல்பாடுகள் ... ... சோனி பிராவியாவின் A9F ஓஎல்இடி டிவி அறிமுகம் சோனி பிராவியாவின் A9F ஓஎல்இடி டிவி அறிமுகம் ...
தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்கு அனில் அம்பானி முழுக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2018
23:56

மும்பை : ரிலை­யன்ஸ் கம்யூனி­கே­ஷன்ஸ் நிறு­வன தலை­வர், அனில் அம்­பானி, தொலைத்­தொ­டர்பு துறை வர்த்த­கத்­தில் இருந்து, முழு­மை­யாக வெளி­யேற உள்­ள­தாக அறிவித்­துள்­ளார்.

மும்­பை­யில் நேற்று, அனில் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் குழு­மத்­தைச் சேர்ந்த, ஆறு நிறு­வ­னங்­க­ளின் ஆண்டு பொதுக் குழு கூட்­டம் நடை­பெற்­றது. அதில் பங்­கேற்ற, ஏராளமான பங்கு முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில், அனில் அம்பானி பேசி­ய­தா­வது: கடந்த, 2002ல், மொபைல்­போன் சேவையை, குறைந்த கட்­ட­ணத்­தில் வழங்­கத் துவங்கிய ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னத்­திற்கு, தற்­போது, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான கடன் உள்ளது. இக்­க­டன் முழு­வ­தை­யும் திரும்­பத் தர, உறுதி பூண்­டுள்­ளோம்.

தீர்வு :
இதை­யொட்டி, தொலைத்­தொ­டர்பு சேவை­யில் இருந்து வெளி­யேற முடிவு செய்­துள்­ளோம். அடுத்த சில மாதங்­களில், கட­னுக்கு தீர்வு காணப்­படும். ஆர்­ஜியோ நிறு­வ­னத்­திற்கு, தொலைத்­தொடர்பு கட்­ட­மைப்பு வசதி­கள் மற்றும் 'ஆப்­டி­கல் பைபர்' இணைப்­பு­களை விற்­பனை செய்­யும் பணி, இறு­திக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. நிறு­வ­னத்­தின், தரவு மையங்­கள், கட­லடி கேபிள்­கள், சர்­வ­தேச அழைப்பு வச­தி­கள் ஆகி­ய­ வற்­றால், 35 ஆயி­ரம் நிறு­வ­னங்­க­ளுக்கு சேவை அளிக்க முடி­யும். அவற்­றின் மூலம், 50 சத­வீத வரு­வாயை, வெளி­நா­டு­களில் இருந்து பெற முடி­யும்.

வங்­கிக் கடனை திரும்ப அளிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே, இந்த வர்த்­த­ கத்­தில் இருந்து வெளி­யேறு­கி­றோம். அகண்ட அலை­வரிசை பங்­கீடு, வர்த்­த­கம் ஆகி­யவை தொடர்­பாக, தொலைத் தொடர்பு துறை­யின் அனு­ம­தியை எதிர்­நோக்­கி­யுள்­ளோம்.

ரியல் எஸ்டேட் :
இனி, முழு கவ­னத்­தை­யும் ரியல் எஸ்­டேட் வர்த்­த­கத்­தில் செலுத்த உள்­ளோம். ரிலை­யன்ஸ் ரியா­லிட்டி நிறு­வ­னம், நவி மும்­பை­யில், 133 ஏக்­க­ரில் 'திரு­பாய் அம்­பானி அறி­வு­சார் நக­ரம்', என்ற, பிர­மாண்­ட­மான தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் நிதி­தொ­ழில்­நுட்ப பூங்­காவை உரு­வாக்கி வருகிறது. இங்கு, ஏற்க­னவே, 30 லட்­சம் சதுர அடி­ ப­ரப்­பில் அலு­வ­லக வளா­கம் கட்­டப்­பட்­டுள்­ளது. அவை, பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு குத்­த­கைக்கு விடப்­படும். இந்­தாண்­டில் இருந்து வரு­வாய் கிடைக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம். இப் பூங்கா, மிகப் பெரிய வர்த்­தக வாய்ப்பு­களை­யும், 25 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­க­ளை­யும் உரு­வாக்­கும்.

போட்டி :
தற்­போது, தொலை­தொ­டர்பு சேவை துறை, ஆக்­கச் சிதைவு காலத்தை நோக்கி நகர்ந்து கொண்­டிருக்­கிறது. இத்­துறை, தற்­போது, விரல் விட்டு எண்­ணக்­கூடிய நிறு­வ­னங்­கள் வச­மாகி வரு­கிறது; இது, விரை­வில் இரு நிறு­வ­னங்­க­ளாக குறைந்து, எதிர்­கா­லத்­தில், ஒரே நிறு­வ­னத்­தின் கீழ் வர­வும் வாய்ப்பு உள்­ளது. ரிலை­யன்ஸ் கேப்­பி­டல் நிறு­வ­னம், கடன்­களை குறைக்க, நிதிச் சேவை­களில் மட்­டும் கவ­னம் செலுத்தி, அடுத்த, 12 – -18 மாதங்­களில் நிதி­சாரா சேவை­களில் இருந்து வெளி­யேற திட்­ட­மிட்­டு உள்ளது. இவ்­வாறு, அவர் கூறினார்.

முது­கில் குத்த மாட்­டோம் :
பங்­கு­தா­ரர்­கள் கூட்­டத்­தில், ‘ரபேல்’ ஒப்­பந்­தம் பற்றி, ஒரு­வர் ஆவே­ச­மாக கேள்வி எழுப்­பி­னார். அவரை, ரிலை­யன்ஸ் அதி­காரி ஒரு­வர், முது­கில் கைவைத்து ஆசு­வா­சப்­ப­டுத்­தி­னார். அவரை தொடர்ந்து பேச ஊக்­கு­வித்த அனில் அம்­பானி, “ நண்­பர், போதிய விப­ரங்­க­ளின்றி, உண்­மைக்கு மாறான செய்­தி­களை கூறு­கி­றார். நிறு­வ­னம், எப்­போ­தும் பங்­கு­தா­ரர் முதுகை தட்­டிக்கொடுக்­குமே தவிர, முது­கில் குத்­தாது” என, நகைச்­சு­வை­யாக குறிப்­பிட்­டார்.

ரிலை­யன்ஸ் குழு­மம், தொலைத் தொடர்பு துறை­யில் கால் பதிக்க கார­ண­மாக இருந்­த­வர், என் சகோ­த­ரர் முகேஷ் அம்­பானி. இன்று, என் தலை­மை­யில் உள்ள, ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னத்­திற்கு, ஆத­ரவு தந்து, எனக்கு தனிப்­பட்ட வழி­காட்­டு­த­லை­யும் வழங்கி வரு­கி­றார், சகோ­த­ரர் முகேஷ் அம்­பானி. அவருக்கு நன்றி தெரி­விக்க, இதுவே சரி­யான தரு­ணம் என, கருதுகி­றேன்

-அனில் அம்­பானி,தலை­வர், ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)