55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது அரசு55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது அரசு ... விவசாயிகளுக்கு வாடகை டிராக்டர்; ‘டாபே’ நிறுவனம், ‘ஆப்’ வெளியீடு விவசாயிகளுக்கு வாடகை டிராக்டர்; ‘டாபே’ நிறுவனம், ‘ஆப்’ வெளியீடு ...
ஒரே வாரத்தில் 3 பங்கு வெளியீடு; ரூ.2,264 கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2018
23:32

புதுடில்லி : அடுத்த வாரம், மூன்று நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 2,264 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டு உள்ளன.

சர்­வ­தேச வர்த்­த­கப் பதற்­றம், கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு சரிவு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், பங்­குச் சந்தை தொடர்ந்து சரி­வைக் கண்டு வரு­கிறது. இந்­நி­லை­யில், இந்த மூன்று நிறு­வ­னங்­களின் புதிய பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு எந்த அள­விற்கு வர­வேற்பு இருக்­கும் என்­பது, அடுத்த வாரம் தான் தெரி­யும்.

நடப்பு வாரம், பொதுத் துறை­யைச் சேர்ந்த, இர்­கான் இண்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டிற்கு நல்ல வர­வேற்பு காணப்­பட்­டது. பங்­கு­கள் வேண்டி, 9.9 மடங்கு விண்­ணப்­பங்­கள் குவிந்­தன. அடுத்த வாரம், கார்­டன் ரீச் ஷிப் பில்­டர்ஸ் அண்டு இன்­ஜி­னி­யர்ஸ் நிறு­வ­னத்­தின் பங்கு வெளி­யீடு, 24ம் தேதி துவங்கி,26ல் முடி­வ­டை­கிறது.

பங்கு ஒன்­றின் விலை, 115 – 118 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டு உள்­ளது. வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மான, ‘ஆவாஸ் பைனான்­சி­யர்ஸ்’ பங்கு விற்­பனை மூலம், 1,734 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இப்­பங்கு வெளி­யீடு, 25 – 27வரை நடை­பெற உள்­ளது. அடுத்து, தினேஷ் இன்­ஜி­னி­யர்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டிற்கு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், பங்கு விலையை, 183 – 185 ரூபாய் என, நிர்­ண­யித்­துள்­ளது.

ஒரு கோடி பங்­கு­களை விற்­பனை செய்து, அதி­க­பட்­சம், 185 கோடி ரூபாய் திரட்ட, இந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டுள்­ளது. நடப்பு செப்­டம்­ப­ரில், நான்கு நிறு­வ­னங்­கள், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 2,734 கோடி ரூபாய் திரட்­டும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்­தில், ஏழு நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, 16,665 கோடி ரூபாய் திரட்­டி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)